நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 01, 2020

குடமுழுக்கு வைபவம் 1

வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருவிழாவாக
நிகழும் ஸ்ரீ விகாரி வருடம் தைத் திங்கள் இருபத்திரண்டாம் நாள்
புதன் கிழமை காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்

தக்ஷிணமேரு என்று போற்றப்படுவதாகிய
தஞ்சை ஸ்ரீராஜராஜேஸ்வரத்தின் ஸ்ரீ விமானத்திற்கு
திருக்குடமுழுக்கு வைபவம் சீரும் சிறப்புமாக நிகழ இருக்கின்றது..

அப் பெருவிழாவிற்கான அழைப்பிதழ்
விழாக்குழுவினராலும் சிவநேயச் செல்வர்களாலும்
இணையத்தில் வழங்கப்பட்டுள்ளது..

அந்த அழைப்பிதழை இன்று நமது தளத்தில் பதிவு செய்து
அனைவரையும் அழைப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்..







முன்னதாக குடமுழுக்குப் பெருவிழாவிற்காக
நாடெங்குமுள்ள நதி தீரங்களிலிருந்து புண்ணிய தீர்த்தங்கள்
கொண்டு வரப்பட்டுள்ளன...

திருஐயாறு பூசப்படித்துறையில் காவிரி நதியிலிருந்து
நன்னீர் எடுக்கப்பட்டதி இங்கே காணலாம்..




யானையின் மீது எடுத்துவரப்படும் தீர்த்தம் 


தங்க முலாம் பூசுவதற்காக 
ஸ்ரீ விமான சிகரத்திலிருந்து கழற்றப்பட்ட கலசம் மீண்டும்
30/1 அன்று நிலைநிறுத்தப்பட்டது...






யாகசாலைக் காட்சிகள்...







திருமிகு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்
அவரது தளத்தில் விரிவான செய்திகளுடன் 
படங்களையும் வழங்கியிருக்கின்றார்கள்.. கண்டு மகிழ்க...

நிகழ்வின் படங்களை இணையத்தில் வைத்த நண்பர்கள் 
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

கிடைத்தற்கரிய பேறு கிடைத்திருக்கின்றது..
வாய்ப்புள்ள அனைவரும் தவறாது கும்பாபிஷேக தரிசனம் கண்டு மகிழ்க...




பன்னெடுங் காலம் பணி செய்து பழையோர்
தாம் பலர் ஏம்பலித்து இருக்க 
என்னெடுங்கோயில் நெஞ்சு வீற்றிருந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்னெடும் புருவத்து இளமயில் அனையார்
விலங்கல் செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே..
-: கருவூரார் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ