நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 14
வியாழக்கிழமை
தேவி வழிபாட்டில்
தை அமாவாசையை அடுத்து
சியாமளா நவராத்திரியில் ஸ்ரீ சியாமளா தேவியையும்
பங்குனி அமாவாசையை அடுத்து
வசந்த நவராத்திரியில் ஸ்ரீ மஹா லக்ஷ்மியையும்
ஆனி அமாவாசையை அடுத்து
ஆஷாட நவராத்திரியில் ஸ்ரீ வராஹி அம்மனையும்
புரட்டாசி மகாளய அமாவாசையை அடுத்து
சாரதா நவராத்திரியில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும் வழிபடுவது வழக்கம்..
மகாளய பட்சத்தில் வரும் நவராத்திரி மட்டுமே நாடெங்கும் கொண்டாடப்படுவது..
அந்த வகையில்
தஞ்சை பெரியகோயில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா கடந்த (18ம் தேதி) கணபதி ஹோமத்துடன் துவங்கியது..
அம்மனுக்கு நாள் தோறும் காலையில் யாக பூஜையுடன் அபிஷேகமும் மாலையில்
அலங்காரமும் நடைபெற்றது..
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வாராஹி அம்மனுக்கு -
இனிப்புகளாலும்
மஞ்சளாலும் குங்குமத்தாலும்
சந்தனத்தாலும் தேங்காய்ப் பூவினாலும் மாதுளை முத்துக்களாலும் தானியங்களாலும் வெண்ணெயினாலும் கனிகளாலும் காய்களாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப் பெற்றது..
கீழுள்ள படங்கள்
நன்றி: தஞ்சாவூர் Fb
முதல் நாள் இனிப்பு
இரண்டாம் நாள் மஞ்சள்
மூன்றாம் நாள் குங்குமம்
நான்காம் நாள் சந்தனம்
ஐந்தாம் நாள் தேங்காய்த் துருவல்
ஆறாம் நாள்
மாதுளை முத்துகள்
ஏழாம் நாள் தானியங்கள்
எட்டாம் நாள் வெண்ணெய்
ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!..
-: திருமூலர் :-
ஓம் சக்தி ஓம்
***












