நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 12, 2013

வாணி சரஸ்வதி

அம்மா என்னைக் காப்பாற்று!.. என பராசக்தியை உண்மையான அன்புடன், பக்தியுடன் சரணடையும் தருணம் தான் நவராத்திரியின் சிறப்பு அம்சம்.

அன்னை பராசக்தியே - நம் பொருட்டு - எங்கெங்கும் வியாபித்திருக்கின்றாள். 

நாம் வேண்டிக் கேட்டதை வழங்க மட்டுமல்ல!.. நமக்கு எவையெல்லாம் நன்மை அளிக்கக்கூடியவையோ அவைகளையும் அளித்திடவே - 


ஸ்ரீ துர்கா தேவி எனவும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி எனவும் ஸ்ரீ ஞானசரஸ்வதி எனவும் திருமேனி கொண்டு விளங்குகின்றாள். 

இந்த அளவில், நவராத்திரி நாட்களில் எட்டாம் நாளாகவும்,  அருள் வடிவான அன்னை கலைவாணியை ஆராதிக்கும் நாட்களில் இரண்டாவது நாளாகவும் விளங்கும் இன்றைய பொழுதில் - 

தேவகுரு ஆகிய பிரஹஸ்பதி அருளிய அற்புதமான ஸ்லோகம்!.. 

அருள் வடிவான அன்னை கலைவாணியை, நான்முகனின் நாயகியை, வானவர்க்குத் தலைவியை, காயத்ரியை, சாவித்ரியை, சரஸ்வதியை, வாக்தேவியை, வீணா புஸ்தக தாரிணியைப் போற்றி  - அவளுடைய தரிசனம் வேண்டி - தவம் இருந்தார்  பிரஹஸ்பதி.

பொன், பொருள், திருமணம், மக்கட்பேறு, கல்வியில் முன்னேற்றம், நல்ல புத்தி, உயர்பதவி, ஞானம் - இவற்றை வழங்கும் பிரஹஸ்பதியின் கடும் தவத்திற்கு இரங்கிய - அன்னை கலைவாணி (முப்பதாம் நாளவில்) ப்ரதயட்சமானாள்.

அப்போது - பிரஹஸ்பதியால் அருளப்பட்ட ஸ்லோகம் இது.


ஸரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருஸ்திதாம்
கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகர ப்ரியா ஸ்பதாம்

மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதி த்வ்ம்ஸ காரிணீம்

ஸுப்ரகாசாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
ஸுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸுபாங்காம் ஸோபனப்ரதம்

பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் சுக்ல வர்ணாம் மனோரமாம்
ஆதித்ய மண்டலேலீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம் 

இதி மாஸம் ஸ்துதானேன வாகீசேன மஹாத்மனா
ஆத்மானாம் தர்சயா மாஸ ஸரதிந்து ஸமப்ரபாம் 

ஸ்ரஸ்வத்யுவாச: 
வரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸி வர்த்ததே 

ப்ருஹஸ்பத் யுவாச: 
யதிமே தேவி ஸம்யக் ஞானம் ப்ரயச்சமே

ஸ்ரஸ்வத் யுவாச: 
இதம் தே நிர்மலம் ஜ்ஞானம் அஜ்ஞான திமிராபஹம் 
ஸ்தோத்ரே ணானேன மாம் ஸ்தெளதி ஸம்யக் வேதவிதோ நர:
லபதே பரமம் க்ஞானம் மம துல்ய பராக்ரமம்

த்ரி ஸந்த்யம் ய: படேந் நித்யம் ய ஸத்விதம் ஜபதே ஸதா
தேஷாம் கண்டே ஸதா வாசம் கரிஷ்யாம ந ஸம்ஸய:

இந்த ஸ்லோகத்தை, தமிழ் வடிவமாக்கி - பாம்பே சகோதரிகள்  பாடியுள்ளனர். அந்த தமிழ் வடிவத்தினை அனுசரித்து எழுதப்பட்ட பொருள்.


ஸ்ரீதேவி சரஸ்வதி!.. உன்னை  வணங்குகின்றேன். 

சகல உயிர்களின் இதயத்திலும் இருப்பவள்.  நீயே!. பிரம்மனின் கண்டத்தில் இருப்பவள்.  சகல உயிர்களையும் அழகிய தாமரைத் தடத்தில் பூத்தவள். சந்திரனுக்கு பிரியமுள்ளவள். 

ஞானம் எனும் நல்லறிவினை வரமாகத் தருபவள். நல்ல உயர்வினைத் தருபவள். தூய்மையானவள். திருக்கரத்தில் கச்சபி எனும் வீணை உடையவள். விரும்பியதை அளிப்பவள். ஐம் ஐம், ஹ்ரீம் ஹ்ராம் எனும் மந்த்ரங்களில் ப்ரியம் உள்ளவள். தரம் தாழ்ந்தவர்களை நாசம் செய்பவள். 

பேரொளியாய்த் திகழ்பவள். ஆட்படாத நிலை உடையவள். அஞ்ஞானம் எனும் இருளைப் போக்குபவள். வெண்ணிறம் கொண்டு விளங்குபவள்.  மோட்சத்தை அருள்பவள். மிகவும் அழகானவள். லக்ஷணமான அங்கங்களுடன் திகழ்பவள். எப்போதும் மங்கலங்களை அருள்பவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள். 

அழகான குண்டலங்களுடன் திகழ்பவள். வெண்மையான நிறமுடையவள். மனதில் மகிழ்ச்சியை அருள்பவள். சூர்ய மண்டலத்தில் இருப்பவள். ஸ்ரீமஹா விஷ்ணுவின் ப்ரியத்துக்கு உரியவள். 

ஸ்ரீதேவி சரஸ்வதி!.. உன்னை  மீண்டும் மீண்டும் வணங்குகின்றேன்!.. 


பிரஹஸ்பதியால் ஒரு மாத காலம் தோத்தரிக்கப்பட்டவளும்,  சரத் கால சந்திரனைப் போன்ற ஒளியுடன் தோன்றியவளும் ஆகிய  ஸ்ரீசரஸ்வதி, மகிழ்ச்சியுடன் பிரஹஸ்பதியை நோக்கி ,

உனக்கு மங்களம் உண்டாகட்டும்.  வேண்டியது எதுவோ அதை வேண்டிக் கொள்!.. - என்றாள். 
 
அப்போது பிரஹஸ்பதி - ஸ்ரீ சரஸ்வதி தேவியைப் பணிந்து - தேவி!.. எனக்கு வேண்டியதெல்லாம் - ஞானம் மட்டுமே!.. அதை அருள் புரிவாய்!.. - என்றார். 

தேவியும் மனம் மகிழ்ந்தவளாக, 

அஞ்ஞான  இருளைப் போக்கும் தூயஞானத்தை உனக்கு அளிக்கின்றேன். உன்னால் தோத்தரிக்கப்பட்ட இந்த ஸ்லோகத்தை மூன்று பொழுதிலும் பாராயணம் செய்யும் அடியார்கள் கீர்த்தியையும் சொல்வன்மையையும் உயர்ந்த ஞானத்தையும் அடைவார்கள். அவர்தம் வாக்கினில் நான் வசித்திருப்பேன்!.. என்று அருள் புரிந்தாள். 

அஞ்ஞான இருளை அகற்றும் ஞானம்!.. இதற்கு மேல் என்ன வேண்டும்?..

மனோ வாக்கு காயம் எனும் திரிகரண சுத்தியுடன்,  ஸ்ரீசரஸ்வதியைப் பணிந்து வணங்க இதுவே தருணம்.


நல்லறிவுடன் கூடிய கல்வி, ஞானம், சொல்வன்மை, அதன் மூலமாக நல்ல பதவி, புகழ், செல்வம் - எனும் இவற்றுடன் அனைத்து மங்கலங்களையும் அருள்பவள் அன்னை ஸரஸ்வதி!..

அவசரமான உலகில் - இன்றைய அத்யாவசியத் தேவை -

நல்லறிவுடன் கூடிய கல்வியும், ஞானமும்!..

அவற்றை அருள வேண்டி, அன்னை அவளை வணங்கி நிற்போம்!..

யா குந்தேந்து துஷார ஹார தவளா  யா ஸுப்ர வஸ்த்ரா வ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யா ஸ்வேத பத்மாஸநா
யா ப்ரம்ஹாச்யுத ஸங்கர ப்ரப்ருதிபிர் தேவைஸ் ஸதா வந்திதா
ஸாமாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி:ஸேஷ ஜாட்யாபஹா.
8 கருத்துகள்:

 1. கல்வி, ஞானம், சொல்வன்மை, நல்ல பதவி ,புகழ் ,செல்வம் அனைத்தும் அருள சரசுவதியை வணங்கி நிற்போம். நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. நல்ல பகிர்வு. நாளைக்கு சரஸ்வதி பூஜை. கலைவாணியை வணங்குவோம். பூஜிப்போம். வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகையும் வாழ்த்துகளும் பாராட்டுரைகளும் மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. எல்லாருக்கும் அன்னை அருள் புரிவாளாக!..

   நீக்கு
 3. அஞ்ஞான இருளை அகற்றும் ஞானம்!

  அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. அன்னை எல்லாருக்கும் நல்லருள் பொழிவாளாக!..

   நீக்கு
 4. கலைவாணியை வணங்குவோம்...
  பகிர்வுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் திரு.குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. ஸ்ரீசரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!..

   நீக்கு