நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 05, 2013

பாசம் வைத்த பரஞ்சுடர்

திருவேங்கடத்தானுக்குத் திருப்பள்ளி எழுச்சி!..

இறைபணிகளுக்கு உகந்த பிரம்ம முகூர்த்த வேளை!..

கோதை நாச்சியார் கூறும் சிற்றஞ் சிறுகாலை!.. 

திருமலை தேவஸ்தானம் தரும் தகவலின் படி  - அதற்கும் சற்று முன்பாக, அதிகாலை  2.30.,மணி.  

நம்மாழ்வார் அருளிய திருப்பாசுரங்களை வழித்துணையாய்க் கொண்டு பெருமாளைச் சேவிப்போம்!..

பெரிய மணிகளும் பேரிகைகளும் ஒலிக்க திருக்கதவுகள் திறக்கப்படுகின்றன.  


ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி 
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் 
தெழிகுரல் அருவித்திரு வேங்கடத்து 
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே!..

திருமூலத்தானத்தில் உறங்காமல் உறங்கும் போக ஸ்ரீநிவாசப்பெருமானை எழுப்புகின்றனர். கோபூஜை முடிந்ததும் பசுவுக்கும் இடையருக்கும் முதல் தரிசனம்!.. 

துளசி மாலை மட்டும் அணிந்த திருக்கோலம்!.. 

சுப்ரபாத சேவை எனும் விஸ்வரூப தரிசனம்!.. துவாரபாலகர்களின் முன்னே ஸ்ரீ சுப்ரபாதம் ஓதப்படுகின்றது!..

மார்கழி மாதம் மட்டும் திருப்பள்ளி எழுச்சியின் போது ஆண்டாளின் திருப்பாவை!..

இன்று சேவிக்கப்படும் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்ய ஸ்வாமி என்பரால் இயற்றப்பட்டது!..


அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக் 
கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம், 
தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடத்து 
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே!..

ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் 70 ஸ்லோகங்களுடன் நான்கு பகுதிகளாக விளங்குகின்றது.

யோக நித்திரையில் இருக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமானைத் துயிலெழுப்பும் சுப்ரபாதம் - 29 ஸ்லோகங்களை உடையது.

ஸ்ரீ வேங்கடேசப் பெருமானைப் போற்றித் துதிக்கும் ஸ்தோத்திரம் - 11 ஸ்லோகங்களை உடையது. 

ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பெருமைகளுடன் - பெருமானின் திருவடிகளில் சரணடையும்  பிரபத்தி - 16 ஸ்லோகங்களை உடையது. 

பொங்கிப் பெருகி, தங்கி நிறைந்திட மங்களம் -  14 ஸ்லோகங்களை உடையது. 


ஈசன் வானவர்க்கு என்பன் என்றால், அது 
தேசமோ திருவேங்கடத் தானுக்கு 
நீசன் என் நிறை ஒன்றுமிலேன்: என்கண் 
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே!..

திருமலை எங்கும் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் திரு நாமம் ''கோவிந்தா!.. கோவிந்தா!..''

கோவிந்த நாம சங்கீர்த்தனத்துக்கு தனி மகத்துவம் உண்டு.  அனைத்தையும் அனைவரையும் கடைத்தேற்றும் சக்தி கோவிந்தா எனும் திரு நாமத்துக்கு உண்டு!..

கெளரவர் சபையில் - திரெளபதியின் சேலையை அபகரித்து மானபங்கம் செய்ய - துச்சாதனன் முற்பட்டபோது  - அவளுடைய மானம் காத்து நின்றது கோவிந்த நாமமே!..

''கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!..''
''குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!..''
''இற்றைப் பறை கொள்வானன்று காண் கோவிந்தா!..''

- என, மூன்று முறை கோதை நாச்சியார் திருப்பாவையில்  மொழிகின்றாள்!..

மஹேஶ்வாஸோ மஹீபர்தா ஶ்ரீனிவாஸஃ ஸதாம்கதிஃ |
அனிருத்தஃ ஸுரானம்தோ கோவிந்தோ கோவிதாம் பதிஃ || 20 ||

மஹாவராஹோ கோவிந்தஃ ஸுஷேணஃ கனகாம்கதீ |
குஹ்யோ கபீரோ கஹனோ குப்தஶ்சக்ர கதாதரஃ || 58 ||

 என - ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில்  ''கோவிந்தா!'' - எனும் திருநாமம் (187, 539).

தவிரவும்,  ''அச்சுதாய!.. அனந்தாய!.. கோவிந்தாய!..'' என தியானிக்கும் போது மனதினுள் ஆனந்த அலைகள் புரள்வதை உணரலாம். 


சுமந்து மாமலர் நீர் சுடர் தீபம் கொண்டு 
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் 
நமன்றெழும் திருவேங்கடம் நங்கட்கு 
சமன்கொள் வீடு தரும் தடங்குன்றமே!..

கோவிந்தன் என்றால் - பசுக்களைக் காப்பவன் (காப்பவன்) என்பது பொருள் என்பர் பெரியோர்.

தனக்கு நடத்தப்பட்ட விழாவினைத் தடுத்தான். கோவர்த்தன கிரிக்குப் பெருமையைக் கொடுத்தான். கோகுலத்து மக்களின் மனங்களைக் கெடுத்தான் - என விகாரப்பட்ட இந்திரன், கண்ணனின் மீது கோபங் கொண்டு - ஏழு மேகங்களையும் அழைத்து கோகுலம் மூழ்கும்படிக்கு மழை பெய்க எனக் கட்டளையிட்டான்.

ஆனால் ஆபத்பாந்தவனான கண்ணனோ - கோவர்த்தனகிரியைப் பெயர்த்து எடுத்து, குடையாகப் பிடித்து மக்களையும் பசு முதலான சகல ஜீவராசிகளையும் காத்தருளினான். 

வழக்கம் போலவே -  இந்திரனின் தலை கவிழ்ந்தது. குனிந்த தலை பதிந்த இடம் - கண்ணனின் திருவடிகள். 

கண்ணீருடன் மன்னிப்புக் கேட்ட இந்திரன் கண்ணனைப் போற்றிய திருநாமம் - ''கோவிந்த!.. கோவிந்த!..''


குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்தபிரான் - பரன் 
சென்று சேர் திருவேங்கடமாமலை 
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே!.. 

ஆதி சங்கரர் நமக்கு அருள்வதும் இதைத்தான்!.. 

''மூட மதியே!.. காலக் கணக்குகள் நிறைவடையும் காலத்தில் காவியத்தாலும் இலக்கணத்தாலும் உன்னைக் காப்பாற்றமுடியாது!..''

''உன்னைக் காப்பாற்றக் கூடியது கோவிந்த நாமம் ஒன்றுதான்!..''

பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்!..
கோவிந்தம் பஜ மூடமதே!..

கோவிந்தோ.. கோவிந்த!..
கோவிந்தோ.. கோவிந்த!..

11 கருத்துகள்:

 1. நல்ல ஆன்மீகப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் திரு. குமார் , தங்களுடைய வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 3. அருமையான படங்களுடன் அற்புதமான பதிவு. பாராட்டுக்கள்.

  http://gopu1949.blogspot.in/2013/10/60.html முடிந்தால் வாங்கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களுடைய வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. தங்கள் வலைப்பதிவுக்கும் வருகின்றேன்!..

   நீக்கு
 4. // ''மூட மதியே!.. காலக் கணக்குகள் நிறைவடையும் காலத்தில் காவியத்தாலும் இலக்கணத்தாலும் உன்னைக் காப்பாற்றமுடியாது!..''

  ''உன்னைக் காப்பாற்றக் கூடியது கோவிந்த நாமம் ஒன்றுதான்!..''//

  நெஞ்சு நிறைக்கும் வரிகள் இவை.

  அழுமையான பதிவும் படங்களும்!

  பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி!.. தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும் மகிழ்ச்சியளிக்கின்றன!.. நன்றி!..

   நீக்கு
 5. திரு. பாஸ்கர் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்!..

  பதிலளிநீக்கு
 6. ''அச்சுதாய!.. அனந்தாய!.. கோவிந்தாய!..'' என தியானிக்கும் போது மனதினுள் ஆனந்த அலைகள் புரள்வதை உணரலாம்.

  ஆனந்த அலைகளை உண்ர்த்தும்
  அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுடைய வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

   நீக்கு
 7. பெயரில்லா15 அக்டோபர், 2013 08:33

  வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோ
  http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?showComment=1381805945354#c5883931640388978152

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன்!.. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!.. வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பதை அறியத் தந்தமைக்கு மகிழ்ச்சி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..