நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 02, 2013

தியாக தீபம்

(15.07.1903 - 02.10.1975)
பெருந்தலைவர் காமராஜர்  மறைந்தபோது, 
அவரின் கை இருப்பாக  இருந்தது -
நூறு ரூபாயும் சில்லறைக் காசுகள் மட்டுமே!..

தாய் சிவகாமி அம்மாளுடன்
தாய்க்குத் தலை மகனாகப் பிறந்தும் தாய் முகத்தினைப் பாராமல் 
தாய் நாட்டின் நலனையே சிந்தித்த தங்க மகன்.

சிவகாமி அம்மையாருடன் லால்பகதூர் சாஸ்திரி
இந்திரா - டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன்
எளியவரிடம் இரங்கி குறை கேட்கும் ஏந்தல்
தந்தை பெரியாருடன் காமராஜர்
காமராஜருடன் சிவாஜி கணேசன்
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. - காமராஜர்
காமராஜருடன் கவிஞர் கண்ணதாசன்
மக்களுடன் மக்களாக விளங்கிய பெருந்தலைவர்
அரசியலில் அன்பின் தரிசனம்

அரசியலில் அன்றிருந்தவர்கள் காமராஜரின் நிறம் குறித்து 
இகழ்வதில் - மகிழ்ந்தனர்.

காமராஜரின் மீது வாரி இறைக்கப்பட்ட 
அவதூறுகளுக்கு அளவில்லை. 
அதில் முக்கியமான கோஷம் -
 ஏழைப்பங்காளரின் ஏழடுக்கு மாளிகையைப் பாரீர்!..
என்பது தான்!..  

காமராஜர் வாழ்ந்த வாடகை வீடு
ஆனால் - அவர் வாடகை வீட்டில் வாழ்ந்தது பெரும்பான்மையான தமிழர்களுக்குத் தெரியாமல் போனது தான் கொடுமை!.. 


இன்று நம் கையில் உள்ள கல்வி அன்று 
காமராஜர் அளித்த கொடை!.. 

கல்விக் கண் திறந்த காமராஜரின் புகழ்
என்றும் நின்று நிலவும்!.. 

14 கருத்துகள்:

 1. இன்னொரு காமராஜ் பிறக்க மாட்டார்.

  என்ற அளவுக்கு தமிழகத்தில் இன்று

  தன்னலத்தில் தோயாத மனித நேயத்தைக்

  காண்பது அரிதாக உள்ளது.

  சுப்பு தாத்தா.
  www.wallposterwallposter.blogspot.com
  www.vazhvuneri.blogspot.com
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா!.. மனித நேயம் அரிதாகித் தான் போனது!.. மிக்க நன்றி.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்!..

   நீக்கு
 2. பொக்கிச படங்களுடம் கருத்துகளும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. தனபாலன்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 3. ஒன்று கவனித்தீர்களா.? அந்த்க் கால அரசியல்வாதிகள் மக்களுக்காக வாழ்ந்தனர். ஆனால் இன்றைய சூழலில் அரசியல் வாதிகளுக்காக மக்கள் என்று தலைகீழாகி விட்டது. குறை எங்கே என்று கேட்கத் தோன்றுகிறது. இன்னொரு காமராஜ் கிடைப்பது அரிது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறை எங்கே.. நம்மிடத்தில் தான்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 4. தன்னலமற்ற தியாகி ஒருவரை நினைவு படுத்தி பகிர்ந்துள்ளது அருமை.

  பாராட்டுக்கள். நன்றிகள்.

  1970 நவம்பரில் இவரை நேரில் சந்திக்கும் பாக்யம் பெற்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெருந்தலைவரை - பள்ளிப் பருவத்தில் பல தடவை தரிசித்துள்ளேன்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 5. பொக்கிஷப்பகிர்வு....
  வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 6. பாதுகாக்கப் பட வேண்டிய அற்புதமான படங்கள் ஐயா. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 7. இன்று நம் கையில் உள்ள கல்வி அன்று
  காமராஜர் அளித்த கொடை!..

  கல்விக் கண் திறந்த காமராஜரின் புகழ்
  என்றும் நின்று நிலவும்!..

  ஆத்மார்த்தமான பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்!.. நன்றி!..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..