மகிழ்ச்சியாக இருக்கின்றது...
எனும் சிறப்பான தளத்தில்
செம்மையான பதிவுகளை வழங்கி வருகின்ற -
மதிப்புக்குரிய திரு ஹரிணி அவர்களுக்கு
குறள் நெறிச் செல்வர்
எனும் விருது வழங்கப்பட்டிருக்கின்றது..
சிறப்புடைய விருது மேலும் சிறப்புடையதாகி இருக்கின்றது..
நேற்று மாலை தஞ்சையில் நடந்த -
உலகத் திருக்குறள் பேரவையின்
நாற்பத்து மூன்றாவது ஆண்டு விழாவின் போது
திரு ஹரிணி அவர்கள்
சிறப்பிக்கப்பட்டிருக்கின்றார்..
இவ்விருது தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது
திருக்கரங்களால் வழங்கப்பட்டிருக்கின்றது..
இந்தச் செய்தியினை -
அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
தனது FB பக்கத்தில் பதிவு செய்திருந்தார்..
விடியற்காலையில் இச்செய்தியினைக் கண்டதுமே
மனதில் மகிழ்ச்சி ததும்பியது..
இரவு வேலை முடிந்து அறைக்குத் திரும்பியதும்
திரு கரந்தை JK அவர்களைத் தொடர்பு கொண்டு
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்..
மேலதிக தகவல்கள் திரு கரந்தை JK அவர்களுடைய
தளத்தில் வெளியாகும்..
பதினைந்து நாட்களாகவே எனக்கு உடல் நிலை சரியில்லை..
தலைவலியும் காய்ச்சலும் விட்டு விட்டு வருகின்றன...
தற்போது இங்குள்ள குளிர் காற்று ஒத்துக் கொள்ளவில்லை..
பதிவுகளில் மும்முரமாக இயங்குதற்கு
சற்றே சிரமமாக இருக்கின்றது..
ஆயினும்,
அன்பு நண்பருக்கு அளிக்கப்பட்ட விருது மகிழ்ச்சியை
அள்ளித் தந்திருக்கின்றது...
அந்த மகிழ்ச்சியுடன் தான் இன்றைய பதிவு..
தனக்கென்று ஒரு முத்திரையுடன்
தமிழ்ப்பணி ஆற்றி வரும் திரு ஹரிணி அவர்கள்
மேலும் பற்பல சிறப்புகளை எய்திட வேண்டும் என்று
மனமார வாழ்த்துகின்றேன்..
வாழ்க நலம்..
வாழ்க பல்லாண்டு..
***