நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 22, 2025

சஷ்டி 1

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
புதன் கிழமை
சஷ்டி முதல் நாள்


ஆடும் பரி வேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.. 1

உதியா மரியா உணரா மறவா
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா  அபயா அமரா பதிகாவல சூர பயங்கரனே.. 18
கந்தரனுபூதி


சந்ததம் பந்தத் ... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ... திரியாதே

கந்தனென் றென்றுற் ... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ... றிடுவேனோ..

தந்தியின் கொம்பைப் ... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்

ஓம் சிவ சுப்ரமண்யாய
**

4 கருத்துகள்:

  1. முருகனைக் கும்பிட்டு முற்றிய வினைகள் யாவையும் நீக்கப் பிரார்த்திக்கிறேன்.  முருகா..  முருகா...

    சில காலமாய் இருக்கும் என்னுடைய முக்கியமான மூன்று பிரார்த்தனைகளை முருகன் கண்டு கொள்ளவே இல்லை!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அருமை. கந்த சஷ்டியின் முதல் நாளாகிய பதிவை, பாடல்களை பார்த்துப் பாடி மகிழ்ந்தேன். முருகன் அன்போடு நம் அனைவரையும் காக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் அன்பின் பிரார்த்தனையும்
      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      முருகா சரணம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..