நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வியாழக்கிழமை
அன்பில்
ஸ்ரீ சத்தியவாகீசர் ஆலய தரிசனம்..
காவிரி கொள்ளிட நீர்ப்பிடிப்பில் பசுமை தவழ்கின்ற கிராமங்களில் ஒன்றுதான் அன்பில்..
இவ்வூரின் நடுவே ஸ்ரீ சுந்தரராஜப்
பெருமாள் கோயில்.
அன்பில் ஸ்ரீ சுந்தரராஜப்
பெருமாள் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ளது சிவாலயம்..
அன்பில் கோயிலில்
இறைவன் - ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர்.. அம்பிகை - ஸ்ரீ சௌந்தரநாயகி.
ஸ்ரீ பிரம்ம தேவர் இங்கு வழிபட்ட காரணத்தால் பிரம்மபுரீசர் என்றும் திருப்பெயர்..
காயத்ரி தீர்த்தம்
தல விருட்சம் ஆலமரம்..
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் - இருவரது திருப்பதிகங்களையும் பெற்றுள்ள இத்தலம் அன்பில் ஆலந்துறை என வழங்கப்பட்டு தற்போது அன்பில் என்று விளங்குகின்றது..
மஹாளய பட்ச அமாவாசையன்று தரிசனம் செய்தோம்.
முன்மண்டபத்தில் அன்பர்கள் கூட்டம்.. படமெடுக்க இயலவில்லை..
இவ்வூரில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் புகழ் பெற்று விளங்குகின்றது..
ஆயினும்
தரிசனம் செய்ய இயலவில்லை..
தஞ்சையிலிருந்து எங்கள் வழித்தடம் : தஞ்சை - திருக்காட்டுப்பள்ளி - அன்பில் ..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..