நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 06, 2025

நிவேதனம் 3

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
புரட்டாசி
மூன்றாம் திங்கள்

புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில் இன்று
புளியோதரை

தேவையான பொருட்கள்:

புளி நல்லெண்ணெய்
உலர்ந்த மிளகாய்  உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு 
மஞ்சள் துாள்
கடுகு 
வெந்தயம் கொத்தமல்லி விதை வேர்க்கடலை பெருங்காயம் 
கறிவேப்பிலை 
கல் உப்பு -

ஆகிய இவற்றை தக்க அளவில் எடுத்துக் கொண்டு அவரவர் விருப்பப்படி புளிக் காய்ச்சல் தயார் செய்து கொண்டு -

வாணலியை சூடாக்கி,  நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிதம் செய்து -

குழைந்து விடாமல் 
வடித்தெடுக்கப்பட்ட பச்சரிசி சாதத்தை தேவையான அளவு இட்டு முன்பே செய்து வைத்திருக்கின்ற புளிக் காய்ச்சலை விருப்பப்படி சேர்த்து நன்றாகக் கிளறி எடுத்தால் -

பாரம்பரிய புளியோதரை...

ஓம் ஹரி ஓம்
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..