நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
நான்காம் திங்கள்
புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..
எல்லாருக்கும் தெரிந்தவை தான்...
அந்த வகையில் இன்று
தயிர் சாதம்
குழைய வடித்த பச்சரிசி சாதத்தில்
சரியான அளவு உப்பு சேர்த்து சிறிய கேரட் சிறு துண்டு இஞ்சி இவற்றை மெலிதாக நறுக்கிப் போட்டு
தேவைக்கேற்ப
புத்தம் புதிய தயிரையும் சிறிது வெண்ணெயையும் சேர்த்துக் கிளறி கடலெண்ணெயில் - கடுகு, உளுத்தம் பருப்பு, வற மிளகாய் கறிவேப்பிலையோடு
தாளிதம் செய்து மீண்டும் கிளறி விட்டால் நறுமணம் கமழும் தயிர் சாதம் ...
தயிர் எப்படி!?..
தயிர் சாதத்தை
தளதள என்று செய்வது வழக்கம்.. கொஞ்சம் இறுக்கமாகவும் செய்து கொள்ளலாம்..
வீட்டில் உறையூற்றப் பெற்ற தயிரோ இரசாயனத் தயிரோ
அவரவர் விருப்பம்..
தயிரை அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்துக் கொள்வதும் அவரவர் விருப்பம்..
ஓம் ஹரி ஓம்
**
நல்லெண்ணெயில்தானே தாளிதம். கடலெண்ணெய் எதற்கு? நேற்று வெங்கடேஷ் பட்டின் பைனாப்பிள் கேசரி செய்முறைல, நிறைய நெய் மற்றும் கடலெண்ணெய் சேர்க்கச் சொல்லியிருந்தார். அவருடைய ஸ்பான்ஸர்கள் என்பதனால் கடலெண்ணெய் சொன்னாரோ? கடலெண்ணெய் சிறிது சேர்த்தாலும் டாமினேட் செய்து, எவ்வளவு நெய் விட்டாலும் தெரியாதபடி ஆக்கிவிடுமே
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு.
நீக்குகடலெண்ணெய் தாளிதம் தான் இயல்பானது...
புளியோதரைக்கு நல்லெண்ணெய் அவசியம்
தாங்கள் சொல்கின்ற நிகழ்ச்சிகளை நான் பார்ப்பதில்லை.
தங்கள் வருகையும்
கருத்தும் மகிழ்ச்சி நன்றி