நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
மூன்றாம் திங்கள்
புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..
எல்லாருக்கும் தெரிந்தவை தான்...
அந்த வகையில் இன்று
புளியோதரை
தேவையான பொருட்கள்:
புளி, நல்லெண்ணெய்,
உலர்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
மஞ்சள் தூள், கடுகு, வெந்தயம், கொத்தமல்லி விதை வேர்க்கடலை, பெருங்காயம்,
கறிவேப்பிலை, கல் உப்பு -
ஆகிய இவற்றை தக்க அளவில் எடுத்துக் கொண்டு அவரவர் விருப்பப்படி புளிக் காய்ச்சல் தயார் செய்து கொண்டு -
வாணலியை சூடாக்கி, நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிதம் செய்து -
குழைந்து விடாமல்
வடித்தெடுக்கப்பட்ட பச்சரிசி சாதத்தை தேவையான அளவு இட்டு முன்பே செய்து வைத்திருக்கின்ற புளிக் காய்ச்சலை விருப்பப்படி சேர்த்து நன்றாகக் கிளறி எடுத்தால் -
பாரம்பரிய புளியோதரை...
ஓம் ஹரி ஓம்
**
ஆஹா புளியோதரை...
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்..
புளியோதரை சாப்பிடும் ஆசை வந்துவிட்டது, அதிலும் தமிழக பாரம்பர்ய புளியோதரை
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ...