நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 08, 2024

உணவே உயிரே..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 26 
சனிக்கிழமை


நேற்று (7/6) சர்வதேச உணவு பாதுகாப்பு நாள்.. 

( நேற்று இந்தப் பதிவை வெளியிட இயலவில்லை.. )

World Food Safety Day, observed on June 7..

Food safety is a scientific discipline describing handling, preparation, and storage of food in ways that prevent food borne..



உலர்த்துதல்,  பாதுகாத்தல்,  (தானியங்களை வெயிலில் உலர்த்தி  வேப்பிலை நொச்சி இலைகளுடன் குதிர்களில்
பாதுகாப்பது)

பதப்படுத்துதல், உப்பிடுதல் ( அவல், உலர் பழங்கள், தேன் நெல்லி, ஊறுகாய் முதலானவை)
 
கொதித்தல் (சமைத்தல்)

நொதித்தல் (குறிப்பாக தயிர்)
பரிமாறுதல் (நலம் தரும் சூழலில் அன்னமிடுதல்
- என்கின்ற இன்றைய பாதுகாப்பு முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நம்மிடையே இருந்தன.. 

அவை தான் இன்றைய நவீன உணவுப் பழக்கங்களால் சிதைந்து கொண்டு இருக்கின்றன..



உணவு என்பது - பாரத கலாச்சாரத்தில் மிக உயர்ந்த கொடை.. 

சேவை - என்கின்ற நிலையில் இருந்த உணவை -  தொழில் என்கின்ற நிலைக்கு மாற்றம் செய்து பலகாலம் ஆயிற்று..


உணவு காசுக்கு விற்கப்பட்ட - உடல் உழைப்பிற்கு கொடுக்கப்பட்ட விவரங்கள் திருவிளையாடல் புராணத்தில் காணக் கிடக்கின்றன..

அப்போது, அதில் நீதி நியாயம் நேர்மை - எல்லாமும் இருந்தன..

இன்றைக்கு அப்படி எல்லாம்?.. - என்பதை ஆராய்ச்சி செய்ய இயலாது.. நமக்குத் தான் ஆபத்து!..

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்..


அப்படிப்பட்ட இல்லங்களில் ஒரு வாய் உண்பதற்காக இறைவன் இறங்கி வந்த வரலாறுகளும் இங்கே பல நூறு..


உணவுத் தொழில் என்பது உண்பவர் தம்  ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது..

இதில் ஒவ்வொரு நிலையில் சுத்தம் சுகாதாரத்தைப் பேணுவது இன்றியமையாத ஒன்றாகும்..

உணவைச் சாப்பிடுபவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.. 
உணவைச் சமைப்பவன் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பது அடிப்படை..

கெட்டுப் போன காய்களைக் கொண்டு ஏதும் செய்ய இயலாது.. 

ஆனால் இன்றைக்கு கெட்டுப் போன இறைச்சி மீன் வகையறாக்கள் பற்பல இடங்களிலும் அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களால் கைப்பற்றப்படுகின்ற செய்திகள் விவரமாக வெளிவருகின்றன..

இன்றைய சூழலில் வீட்டை விட்டு வெளியே சாப்பிடுவதற்கு பழகிக் கொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்தது..



உண்ணுகின்ற உணவையும் அருந்துகின்ற நீரையும் தின்னுகின்ற வெற்றிலையையும் கண்ணன் என்று கருதி விட்டால் வெளியில் உணவகங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது.. 

அப்படியே ஏற்பட்டாலும் நல்லதொரு - உணவை உணவகத்தை நாயகன் காட்டியருள்வான்!..


நம்முடைய நலம்
நம்முடைய கையில்
 
ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. இப்போதைய உணவகங்கள் பற்றி சொல்வதற்கு ம்ம் என்ன சொல்ல? ஒன்றுமில்லை, துரை அண்ணா.

    பலருக்கு அது வாழ்வாதாரமாக அமைந்ததில் கூட ஒன்றுமில்லை குறை சொல்ல முடியாது ஆனால், அது எப்படி நடத்தப்படுகிறது, அதில் நடக்கும் ஊழல்கள் என்று என்ன சொல்ல? கூடியவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்தல் நம் உடல் நலத்திற்கு நல்லது.

    மருத்துவம் படிக்கும் இளையவர்களே கூட கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிடுகிறார்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.  ஆனால் உண்ணுகின்ற உணவை அல்லது உணவில் ஒரு பகுதியை என்னால் வெளியில் சாப்பிடாதிருக்க முடியாது.  பழகி விட்டது.  வீடு இல்லையா என்றால், இருக்கிறது.  ஆனாலும் வெளியில் சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. அந்தக் காலத்திலும் நல்ல உணவை சமைக்காதவர்கள் இருந்திருக்கக் கூடும்.  அதுபற்றி வரலாற்றில் சொல்ல முடியாது, சொல்லி இருக்க மாட்டார்கள்.  மன்னன் சோழனோ, பாண்டியனோ எவனாயிருந்தாலும் அவனின் நல்ல குணங்களை மட்டுமே வரலாறு சொல்கிறது.  அவர்களின் இருண்ட பக்கங்களை சொல்வதில்லை 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் டிட்டோ. வரிக்கு வரி டிட்டோ. இதே போன்ற கருத்தை அடுத்ததாகச் சொல்ல நினைத்தேன் அதற்குள் நடைப்பயிற்சிக்குப் போய்விட்டேன்! வந்து சமைக்கணுமே.

      கீதா

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. சர்வதேச உணவு பாதுகாப்பு நாளில் உணவு பற்றிய நல்ல பகிர்வு.

    எப்போதாவதுதான் வெளியில் சாப்பிடும் பழக்கம் எமக்கு. பெரும்பாலும் தவிர்த்து. விடுவேன்.

    நாயை காணவில்லை என வீட்டுக்காரர் தேடியதில் அடுத்து உள்ளகொத்துரொட்டிக்கடைக்காரன் வெட்டிவிட்டான் எனத் தெரிந்து கடைக்கு சீல் போடப்பட்டது ;(. இவ்வாறு செய்திகள் வந்தபடிதான்.

    பதிலளிநீக்கு
  6. நம்முடைய நோய்கள் பலவற்றிற்குக் காரணங்களில் வெளியில் உணவு சாப்பிடுவது ஒன்றுதான்.

    நீங்கள் சொல்வது போல் உணவு தயாரிப்பை வியாபாரமாகச் செய்தாலும் சேவை மனப்பான்மையோடும், நல்ல மனதோடும் , சுத்தம் சுகாதாரத்தோடு செய்தால் நல்லதுதான்.

    சமீபகாலங்களில் வெளியில் சாப்பிடும் போது சில வயிற்று உபாதைகள் வருகின்றன என்பதால், பயணங்கள் அதிகம் ஆதலால் எங்களுக்கு வெளியில் சாப்பிடாமல் இருப்பதும் தவிர்க்க முடியாது என்பதால் கவனமாகச் சாப்பிடுவதுண்டு.

    உங்கள் பதிவு சிறந்த பதிவு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..