நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 20, 2024

கலைக்கூடம் 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 6 
வியாழக்கிழமைதேவியுடன் 
ஸ்ரீ கல்யாணசுந்தரர்..
இந்தப்பக்கம் தோழியும் 
அந்தப் பக்கம் திருமாலவனும்...இந்தச் சிற்பத் தொகுதி கண்டெடுக்கப்பட்ட இடம் திருவெண்காடு..  காலம் பதினொன்றாம் நூற்றாண்டு..

கடற்படை நடத்தி மாபெரும் கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழரது பொற்காலத்திலோ அல்லது  அதற்கும் முற்பட்ட காலத்திலோ விக்ரகங்கள்
 வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம்.. அதனை நாம் யூகிக்கலாம்... அவ்வளவே... ஆயினும் தேவியின் தோழியாக நிற்கும் இளம் பெண்ணின் ஆடை வடிவமைப்பு கவனிக்கத் தக்கது..

கொள்ளையிட வந்தவர்களால் தான் இந்த நாடு கல்வியறிவு பெற்றது என்று புலம்புகின்றவர்களுக்கு இது புரியாது!?..
வாழ்க கலை
வளர்க தஞ்சை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

 1. சிற்பப் படங்களை ரசித்தேன்.  பொதுவாக எல்லா இடங்களிலும் நாம் காணும் பழங்காலச் எல்லா சிற்பங்களிலும், அது ஆணோ, பெண்ணோ...  இடை ஏன் ஒசிந்தே காணப்படுகிறது?!!

  பதிலளிநீக்கு
 2. கலைக்கூடத்தில் இருந்த சிற்பங்கள் - அனைத்தும் அழகு. பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. சிற்பங்களை ரசித்தேன். நல்ல கலை நயத்துடன் வடித்திருக்கின்றனர். இதன் முந்தைய பகுதிகளையும் பார்த்தேன். ஆனால் முறைப்படி உடனடியாக கருத்துக்கள் தரவில்லை. மீண்டும் அப்பதிவு படங்களை பெரிதாக்கி பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..