நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 14, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 32
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: பொது :-


தானான தானதனத் ... தனதான

கோடான மேருமலைத் ... தனமானார்
கோமாள மானவலைக் ... குழலாதே

நாடோறு மேன்மைபடைத் ... திடவேதான்
நாயேனை யாளநினைத் ... திடொணாதோ..

ஈடேற ஞானமுரைத் ... தருள்வோனே
ஈராறு தோள்கள்படைத் ... திடுவோனே

மாடேறு மீசர்தமக் ... கினியோனே
மாதானை யாறுமுகப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


மேரு மலையின் சிகரங்களை
ஒத்த தனங்களை உடைய 
மாதர்களின் கொண்டாட்டமான
வலைக்குள் உழலாமல்,

நாளுக்குநாள் சிறப்பும் 
புகழும் பெருகும்படி நாயேனை 
ஆட்கொள்வதற்கு
நினைத்தல் கூடாதோ?..

நான் ஈடேறும்படி எனக்கு
ஞானோபதேசம்  அருளியவனே..

பன்னிரு திருத்தோள்களைக் 
கொண்டவனே..

விடை வாகனத்தில் வருகின்ற
சிவபெருமானுக்கு இனியவனே 

சிறந்த சேனைகளையும்,
ஆறு திருமுகங்களையும் 
உடைய பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

 1. முருகா... அனைவரையும் காத்து அருள்வாய்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகா.. முருகா..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய திருப்புகழ் பதிவு அருமை. திருப்புகழ் பாடலும், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. முருகனை வழிபட்டு கொண்டேன். முருகன் அனைவரது இன்னல்களை அகற்றி அனைவரையும் நலமாக வைத்திருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். முருகா சரணம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகா.. முருகா..
   சரணம்.. சரணம்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 3. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகா.. முருகா..
   சரணம்.. சரணம்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஜி..

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

  திருப்புகழ் பாடல் - மனதுக்கு இனிமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கந்தா முருகா.. கதிர்வேல் முருகா..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி வெங்கட்..

   நீக்கு
 5. "ஆறு முகப் பெருமானே" திருப்புகழ் பாடி வணங்கிக் கொண்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகா.. முருகா..
   வருவாய் வருவாய்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி மாதேவி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..