நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 12, 2024

கலைக்கூடம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 30
புதன்கிழமை

நமது சாம்பார் இன்று உலகம் முழுவதிலும் பரவியுள்ளது..

சரி.. சாம்பார் எங்கே உருவானது?..
எவ்வாறு உருவானது?..
சாம்பார் என்ற பெயர் எப்படி வந்தது?..

முதல் கேள்விக்கு விடை  - தஞ்சாவூர் அரண்மனை..


அடுத்த கேள்விகளுக்கு விடை இதோ!..

முதன்முறையாக சாம்பார் எங்கே தயாரிக்கப்பட்டது என்று  கேட்டால், ​​தஞ்சை மராட்டிய  மன்னர்களின் சமையலறையில்!.. 

அது தற்செயலாக நிகழ்ந்த சம்பவம்..

சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஒன்றுவிட்ட சகோதரர் வெங்கோஜி, தஞ்சாவூர் ராஜ்ஜியத்தை ஆண்டார். அவர் 1683 ல் காலமானார். வெங்கோஜியின் மகன் ஷாஜி எனப்பட்ட ஷாஹூஜி  (1672 –1749) 1684 ல் தனது பன்னிரண்டாவது வயதில் அரியணை ஏறினார்..
(நன்றி: விக்கி)

தஞ்சாவூரின் மற்ற மன்னர்களைப் போலவே அவர் கவிதை மற்றும் கலைகளில் ஆர்வம் காட்டினார். அவர் சமையற் கலையிலும் தேர்ந்தவர்..

சத்ரபதி சம்பாஜி மகாராஜ் (1657 - 1689) மராட்டியத்திலிருந்து ஒரு முறை தஞ்சாவூருக்கு வருகை தந்தார்.. 

அவருக்கு விருந்து தயாரான வேளையில் மன்னர் ஷாஹூஜியே சமையல் வேலையை மேற்கொண்டார்..

அப்போது தான் 
அரண்மனைச் சமையல் கூடத்தில் குடம்புளி தீர்ந்து போனது கண்டுபிடிக்கப்பட்டது..

மனம் பதறிய தலைமைச் சமையலர் குடம்புளிக்குப் பதிலாக உள்ளூர் புளியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்திருக்கின்றார். 

அவருடைய நல்ல நேரம்.. 

அவர் சொன்னதை ஏற்றுக் கொண்ட மன்னர் ஷாஹூஜி 
புளியைச் சேர்த்து  கறியைத் தயாரித்தார்... 

நம்முடைய நல்ல நேரம் அது சிறப்பாக அமைந்து விட்டது..

சம்பாஜி மகராஜை கெளரவிக்கும் விதத்தில், அதற்கு " சம்பாஜி  ஆஹார் (சம்பாஜியின் உணவு) " என்று பெயரிடப்பட்டது. 

இதுவே காலப் போக்கில் சாம்பார் என்று மாறியது..

நாளடைவில் - 
தமிழகத்திலும் தென்னகத்திலும்
நாட்டின் பல பகுதிகளிலும்  பரவியது... 

கடல் கடந்து தமிழர் வாழ்கின்ற பகுதிகளிலும் சாம்பார் பெயர் கொண்டு விளங்குகின்றது..

இன்றைக்கு  நூற்றுக்கும் அதிகமான சாம்பார் வகைகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது...

இன்று பரிமாறப்படும் சாம்பாருக்கும் அந்தக் காலத்தில் இருந்த சாம்பாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உண்மை..

சாம்பார் தோன்றிய அரண்மனை இது தான்!.. 

அந்தச் சமையல் கூடம்!?...
அரண்மனை வளாகத்தின் உள்ளே சிறியதாக பிள்ளையார் கோயிலும் முருகன் கோயிலும்.. 
இங்கே பிள்ளையாருக்கு நேராக நந்தி வாகனம்!..


ஸ்ரீ மஹாவிஷ்ணு

ஸ்ரீ மஹாலக்ஷ்மி

ஐயனார் தேவியருடன்
கலைக்கூடத்தின்
காட்சிகள் அடுத்த பதிவிலும் தொடரும்..

வாழ்க கலை
வளர்க தஞ்சை
***

7 கருத்துகள்:

 1. சிறப்பு.  சாம்பார் கதை நானும் ஏற்கெனவே படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் யாவும் சிறப்பு.  உள்ளேயே கோவிலா?

  பதிலளிநீக்கு
 3. ஆ..  நந்தியார் கட்சி மாறி விட்டாரா?  வெளியிலிருந்தே ஆதரவு கொடுக்கிறாரா?!

  பதிலளிநீக்கு
 4. கலைக்கூடத்தில் எடுக்கப்பட்ட படங்கள் நன்று. சாம்பார் குறித்த தகவல் நன்று - முன்னரே படித்திருக்கிறேன் என்றாலும்!

  பதிலளிநீக்கு
 5. சாம்பார் தகவல்கள் அறிந்தோம்.
  படங்கள் நன்றாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 6. சாம்பார் புராணம் அறிந்து கொண்டேன் ஜி

  பதிலளிநீக்கு
 7. காலைகூடம் தொகுப்பு அருமை.
  சாம்பார் வரலாறு மீண்டும் படித்தேன்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..