நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 17, 2024

திருத்தவத்துறை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 3
திங்கட்கிழமை

-: திருத்தவத்துறை :-

ஸ்ரீ மஹால‌க்ஷ்மி த‌வ‌ம் இத்தலத்தில் செய்த‌தால் திருத்த‌வ‌த்துறை என்று பெய‌ர்


இறைவன்
ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர்

அம்பிகை 
ஸ்ரீமதி நாயகி
 
சிவகங்கை தீர்த்தம் 
தலவிருட்சம் அரசமரம்..

சப்தரிஷிகளும் ஈசனைத் தொழுது தவமிருந்து முக்தி நலம் பெற்ற தலம்..

இவ்வூருக்கான தேவாரத் திருப்பதிகம் நமக்குக் கிடைக்கவில்லை..

ஆயினும்,
அப்பர் பெருமான் திருவூர்த் தொகையுள் இத்தலத்தினை வைத்துப் பாடியருளிய திருப்பதிகம் கிடைத்துள்ளது..

அருணகிரிநாதர்
 அருளிச்செய்த இரண்டு திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன..


தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி காலத்தில் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்காபூர் என்ற கொடூரன் இவ்வூரின் அழகைக் கண்டு பிரமித்து - வாழை வனத்துள் புகுந்த மந்தி என, ஊரைச் சேதப்படுத்தி அழித்து
விட்டு - 

அவனது ஆட்களைக் குடியமர்த்தி விட்டுப் போனான்.. 

அது முதற்கொண்டு திருத்தவத்துறை - என்றிருந்த புராதனப் பெயர் - லால்குடி என்று மாறிப் போனது..

இதில்,
இச் சமூகத்தின் சாபக்கேடுகளால் -
இலால்குடி என்பதே சரி என்று எலக்கணம் வேறு!..

அது தொலையட்டும்..


கடந்த சித்ரா பௌர்ணமி அன்று
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதீன நிகழ்வாக திருத்தவத்துறை  ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் - மகா அபிஷேகமும், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் சிறப்பாக நடைபெற்றது..

படங்களைப் பதிவேற்றுவதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டு விட்டது..

அந்த வைபவத்தின் காட்சிகள் 
இன்றைய பதிவில்..

ஒளிப்படங்களை வழங்கியோர்- 
துறைசை ஆதீனம்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..








கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள் 
உரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை தென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்டுறை பைம்பொழிற்
குயிலாலந்துறை சோற்றுத் துறை பூந்துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையினோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றுந் 
துறை அனைத்தும் வணங்குவோமே.. 6/71/11
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. சிவம் நம்மைக் காக்கட்டும். ஓம் நமச்சிவாய...

    பதிலளிநீக்கு
  2. அப்பர் பாடிய பதிகத்தை படித்து அத்தனை துறை இறைவனையும் வணங்கி கொண்டேன்.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. திருத்தவத்துறை நல்லபெயர்.
    "ஸ்ரீமகா லக்ஷ்மி தவம் செய்த தலம், சப்தரிஷிகளும் ஈசனைத் தொழுது தவமிருந்து முக்தி நலம் பெற்ற தலம்.." அறிந்து இன்புற்றோம்.

    பஞ்சமூர்த்திகள் புறப்பாடு படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  5. ஓம் நமச்சிவாய.... படங்கள் நன்று. லால்குடியின் பெயர் திருத்தவத்துறை - இன்று தான் அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..