நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 09, 2023

கவிதை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 26
செவ்வாய்க்கிழமை


கருத்து ஒன்று கவிதையானது
கவிதை ஒன்றே கருத்தானது..

30.4. அன்று வெளியான பிச்சைமுத்து என்ற கவிதைப் பதிவுக்கு அன்பின் ஸ்ரீராம் அவர்களது கவிதையான கருத்துகள் மீண்டும் கவிதைகளாகி இருக்கின்றன

ஸ்ரீராம் அவர்களது கை வண்ணம் 
நீல நிறத்தில்
இடம் பெற்றுள்ளது..

புதியது ஒன்றை
விளைவித்த ஸ்ரீராம் அவர்களது 
கருத்துக்கு நன்றி..
***

அனைத்திலும் 
காசு.. காசு..  காசு..  
பேழையெல்லாம் வைரம் 
ஆனாலும்,
பேராசை அடங்கவில்லை 
போகவேண்டும் இன்னும் 
நெடுந்தூரம்..

அந்த வரிகளே கீழ்க்கண்டவாறு
ஆகியிருக்கின்றன..

கையிலே கட்சிக் கொடி
கண்ணிலே தலைவன் படம்
கண்டதெல்லாம் காசு.. 
உண்டதெல்லாம் ஊர்ப்பணம்..
வீட்டில்
தரை எல்லாம் தங்கம்
பெட்டி எல்லாம் வைரம் 

ஆனாலும்,

ஆசை அது அழிய வில்லை
அரக்க மனம் மாற வில்லை 
போக இன்னும் 
நெடுந்தூரம் 
என்றிருந்த ஆசைக்குள்
போக வேண்டும் ஒரு தூரம்
பெட்டிகளை விட்டு விட்டு
என்ற நீதி மட்டும்
வரவேயில்லை..
அட மனிதா!..
**
வறட்சி 
யாருக்கு நீங்கியதோ!

அமைதியான
அழகான
சாலைக்கு 
மரங்களின் 
பூர்ணகும்ப 
மரியாதை!..
- ஸ்ரீராம் -

நிழல்

அமைதியான 
சாலையில்
அழகான  
மரங்களின் 
பூர்ணகும்பம்!.
**


மரங்களை வெட்டி 
இயற்கையைக் கெடுத்தார் 
மழைதனை நிறுத்தி 
வறட்சியைக் கொடுத்தார் 
ஆள்வோரின் 
ஆண்டாண்டு சாதனைகள்..
- ஸ்ரீராம் -

ஆண்டாண்டு காலமாய்
ஆள்வோரின் சாதனைகள்
தெரு விளக்கு வைத்தாலும்
அதுவே தான்..
திருடன் அதை உடைத்தாலும்
அதுவே தான்..
அன்றாடம் பிரச்சினை 
அவலத்தின் வேதனை ..


மரங்களை வெட்டினார் 
இயற்கையைக் கெடுத்தார் 
மழைதனை நிறுத்தினார் 
வறட்சியைக் கொடுத்தார் 
மலையினைப் பிளந்தார்
மனை வாழக் கொடுத்தார்
தலை வைக்க இடம் இன்றி
தடுக்கி விழுந்து விழுந்தார்..
**


மரங்கள்
இயற்கையின் வரங்கள்

வாழ்க வையகம்
வாழ்க வையகம்
***

6 கருத்துகள்:

  1. பதில் கவிதைகள் இனிமை, சுவை.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய நிலைப்பாடு கவிதையில் தெரிகிறது... அருமை ஜி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சகோ ஸ்ரீராம் அவர்களின் கவிதைகளுக்கு பதில் கவிதைகள் அருமை. சேர்த்தெடுத்து தொடுத்த வரிகளின் கோர்வை நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. ஆரோக்கியமான போட்டி. எல்லாமே நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..