நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 29, 2023

தரிசனம் 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 15
திங்கட்கிழமை

வைகாசி 11 வியாழக் கிழமை காலை பூர்வாங்க வேள்வி - விநாயக  வழிபாடுகளுடன்
ஸ்ரீ வீரமாகாளியம்மனின்
சித்திரைத் திருவிழா தொடங்கியது..

வெள்ளி இரவு அம்பாள் சிம்மவாஹினியாக வீதியுலா..

எதிர்பாராத விதமாக கும்பகோணம் வட்டாரத்தில் சூறைக் காற்று.. பலத்த மழை.. 

அசாதாரணமான சூழ்நிலையில் வீதியுலா புறப்பட்ட அம்பிகை நடுநிசிக்குப் பின் இரண்டு மணியளவில் ஆலயம் திரும்பினாள்.. அதுவரைக்கும் கோயிலில் தான் நான் இருந்தேன்.. 

ஆலயம் திரும்பிய அன்னைக்கு ஆரத்தி, நிவேத்யம் ஆன பிறகு நடை அடைப்பு..

சனிக்கிழமை மாலை எங்களது மண்டகப்படி.. குளிரக் குளிர அபிஷேகமும் அலங்காரமும் அன்னையின் ஆஞ்ஞைப்படி கைத்துணைக்கு ஒருவருடன் எளியேன் இயற்றினேன்..

அன்னைக்கு பஞ்சமுக ஆரத்தியுடன் புஷ்பாஞ்சலி செய்யப் பெற்றது..

ஞாயிற்றுக்கிழமை (வைகாசி 14) காலை பால்குட வைபவம்..
நூற்றுக்கணக்கான வேண்டுதல்கள்.. 

மாலை - கிராம வழக்கப்படி  மக்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர்..

மூலஸ்தானத்தில் அன்னையின் திருமேனிக்கு சந்தனக்காப்பு..
உற்சவ நாயகிக்கு ஊஞ்சல் வைபவம்..
புஷ்பாஞ்சலியுடன் ஆனந்த தரிசனம்..

நிறைவாக நிவேதனம், மங்கல ஆரத்தி, பிரசாத விநியோகம்.. 

வியாழன் வெள்ளி இரு நாட்களின் படங்கள் இந்தப் பதிவில்..

சுபம். சௌபாக்கியம்.
சுமங்களம்..

ஓம் சக்தி ஓம்
***

17 கருத்துகள்:

 1. படங்கள் சிறப்பு. நிகழ்வும் சிறப்பு. அன்று பெய்தது அன்னையின் அருள்மழை. மழை இல்லாமல் சென்னைக்குத் தெரியும் அதன் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நலமே விளையட்டும்.

  அன்னையின் தரிசனம் கண்டு மகிழ்ச்சி. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும்
   வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 3. காலை தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 4. .. நிறைவாக நிவேதனம், மங்கல ஆரத்தி, பிரசாத விநியோகம்..//

  நிறைவாக எல்லாம் நடந்ததில்
  பிறைசூடி சந்தோஷப்பட்டிருப்பான்.

  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி....

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி தனபாலன்..

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 6. அருமையான அன்னையின் தரிசனம்.
  குளிர குளிர அபிஷேகம் செய்த காரணத்தால்
  மாரி மனம் குளிர்ந்து மழையை கொடுத்து விட்டாள்.
  அனைவருக்கும் அன்னை நலங்களை தரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 7. ஆஹா..மிக அருமையான தரிசனம்.

  ஆமாம்...பிரசாதம் படங்களைக் காணோமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொங்கல், சுண்டல், புளியோதரை, தயிர் சாதம்..

   பிரசாதங்களைப் படம் எடுப்பதில்லை..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நெல்லை அவர்களுக்கு நன்றி..

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 8. நல்ல தரிசனம். இனிய நிகழ்வு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 9. அன்னையின் அருளே மழையாகப் பொழிந்திருக்கும். படங்களும் மற்றத் தகவல்களும் வெகு சிறப்பாக வந்துள்ளன. உங்கள் குடும்பத்தினரின் மண்டகப்படியும் சிறப்பாக நிறைவடைந்ததுக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..