நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 08, 2023

சப்த ஸ்தானம் 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 25
திங்கட்கிழமை

சப்த ஸ்தான உற்சவம் எனும் ஏழூர்  பெருவிழாவின் திருக்காட்சிகள் இன்றைய பதிவில்..

பங்குனி புனர்பூசத்தன்று திருமழபாடியில் நடந்த நந்தியம் பெருமான் - சுய்ம்பிரகாஷிணி தேவி திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து சித்திரை விசாகத்தில் ஸ்ரீ ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் புதுமணத் தம்பதியரை அழைத்துக் கொண்டு திரு ஐயாற்றில் இருந்து - திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் ஆறு தலங்களுக்கும் எழுந்தருளும் மாபெரும் வைபவமே சப்த ஸ்தானத் திருவிழா..

சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிறன்று இரவு நிறைவு பெற்றது..

சனிக்கிழமையன்று திருக்கண்டியூரிலும் திருவேதிகுடியிலும் தரிசனம் செய்தோம்..

தொடர்ந்து - நேற்று திருப்பூந்துருத்தியிலும் திருநெய்த்தானத்திலும் தரிசனம் கண்டோம்..

திருப்பூந்துருத்தியில் இருந்து புறப்பட்ட பல்லக்குகள் குடமுருட்டியில் இறங்கி காவிரியைக் கடந்து கரையேறும் போது திரு நெய்த்தானத்தின் நெய்யாடியப்பர் பல்லக்கு ஆற்றில் இறங்கி எதிர்கொண்டு அழைப்பது கண் கொள்ளாக் காட்சி.. 

நெருங்கி நின்று காணொளியாக்குதற்கு இயலவில்லை..  

எதிர் வரும் ஆண்டினில் அந்த நல்வாய்ப்பினை இறைவன் நல்குவானாக.. 

திருப்பூந்துருத்தி
ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர்
திருக்கோயில்

திருநெய்த்தானம்
ஸ்ரீ நெய்யாடியப்பர் திருக்கோயில்


மேலும் சில படங்கள்
அடுத்த பதிவில்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

 1. காணொளி எடுக்க அடுத்த வருடம் ஆண்டவன் அருளட்டும்.  சிறப்பான படங்கள்.  லேண்ட்ஸ்கேப்பில் எடுக்கப்பட்ட படங்கள் சிறப்பாக இருக்கின்றன.  உற்சவரை சிறப்பாக படம் பிடித்திருக்கிறீர்கள்.  நல்ல தரிசனம்.

  பதிலளிநீக்கு
 2. ஆற்றில் தண்ணீர் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.  மனிதன் தனக்குத்தானே செய்து கொள்ளும் கொடுமைகளில் ஒன்று.  ஒருகாலத்தில் தண்ணீர் புரண்டோடும் ஆற்றில் இறங்கி இருப்பார் இறைவன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனக்குப் போகத்தான் தானம்.... இங்க நல்லா காவிரி நீர் வரட்டும் (ஹா ஹா சும்மாச் சொன்னேன். கடைமடைக்குத்தான் உரிமை)

   நீக்கு
 3. பல்லக்குகள் ஒவ்வொன்றும் மிக அழகு. அடுத்த வருடம் உங்களுக்கு நல்வாய்ப்பு வரும்.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளன. அடுத்த வருடம் வீடியோவாக எடுக்க இறைவன் நல்லாசி வழங்கட்டும். இங்கே குடமுருட்டியில் ஒருவருக்கொருவர் எதிர்கொண்டு சந்திப்பது அழகரின் எதிர்சேவையை நினைவூட்டியது. இரண்டு நாட்களும் எல்லா இடங்களுக்கும் போய் வருவதற்கு உரிய உடல்நலத்தையும் மனோபலத்தையும் ஆண்டவன் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. படங்கள் அருமை...

  ஓம் நம சிவாய...

  பதிலளிநீக்கு
 6. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது ஜி

  பதிலளிநீக்கு
 7. படங்கள் எல்லாம் திருவிழாவை நேரில் கண்ட உணர்வை கொடுத்தன.
  மிக அருமையான தரிசனம்.

  அடுத்த ஆண்டு காணொளி எடுத்து போடுவீர்கள், இறைவன் அருள்வார்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..