நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 17, 2023

தயிர்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 3 
 புதன் கிழமை


தயிர்..

பாரதத்தில் நீண்ட நெடிய பாரம்பரியத்தை உடையது..

வேத புராணங்களில் சொல்லப்பட்டிருப்பது தயிர்..

காய்ச்சிய பால் சற்று ஆறியதும் சிறிதளவு பழைய தயிரை அதில் ஊற்றினால் நுண்ணுயிர்களின் நொதித்தல் காரணமாக பாலானது தயிர் ஆகின்றது..

இதில்
புரதங்கள், கால்சியம்,  Vitamin B2 (Riboflavin) Vitamin B6  Vitamin B12 போன்ற ஊட்டச் சத்துகள் நிறைந்திருக்கின்றன. உடல் நலத்தைக் காக்கும் பண்புகளை உடையது..

வெயில் காலத்தில் உடலில் சூடு அதிகமாகி விடும். உடல் குளிர்ச்சிக்கு உணவுடன் தயிரை சேர்த்துக் கொள்ளலாம்.. அதிலும் மோரைச்  சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது..

தயிரில் இருந்தே வெண்ணெய் மோர் கிடைக்கின்றன..


தயிரும், மோரும் தமிழர்களின் பாரம்பரியங்கள்.. 

விருந்து உணவில்  சாம்பாருடன் வேறு ஒரு குழம்பு, ரசம் அடுத்த படியாக தயிர் அல்லது மோர் என்று கண்டிப்பாக இடம் பெறும்.. 

தயிரில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்துவது மூளைக்கு அளிக்கப்படும் சக்தி..

தயிரின்  நுண்ணுயிரிகள்  நோய்க் கிருமிகளைத்  தடுத்து ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது..

தோலில் ஏற்படும் வறட்சியைத் தயிர் தடுக்கின்றது..

வைட்டமின் B12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதாகும்.. 


கட்டித் தயிரில் செய்யப்படும் லஸ்ஸியில் வைட்டமின் B12 நிறைந்திருக்கின்றது.  

லஸ்ஸி குடிப்பதால் உடனடி சக்தி கிடைக்கும். கோடையில் லஸ்ஸி அருந்துவது சிறப்பானது..

லஸ்ஸி என்றதும் சாலையோரக் கடையைத் தேடி ஓடாமல் புளிக்காத தயிருடன் நாட்டுச் சர்க்கரையும் ஏலக்காய் பொடியும் சேர்த்து வீட்டிலேயே தயாரிப்பதற்கு முயற்சிக்கவும்.. 

ஆனாலும்  சர்க்கரை குறைபாடு உடையவர்கள் லஸ்ஸியைத் தவிர்ப்பது நல்லது..


தயிர், மோரில் உள்ள லாக்டிக் அமிலம்  நோய் கிருமிகளை அழிக்கின்றது..

தயிர், மோர் ஆகிய இரண்டிலுமே ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன..

ஆயினும், தயிரை விட மோர் எளிதில் செரிமானமாகும். 

தயிர் செரிமானம் தாமதமாகும் என்பதால் தான் இரவில் தயிர் சோறு  வேண்டாம் என்றனர் பெரியோர்..

தயிரில் இருந்து மோர் கிடைத்தாலும் தயிர் உடலில் கொஞ்சம் உஷ்ணத்தை ஏற்படுத்தும். மோர் மிகுந்த குளிர்ச்சியை கொடுக்கும்.. உடனடி சக்தி கிடைக்கும்..


இதனாலேயே கோடையில் கோயில் திருவிழாக்களில் மோர் தானம் செய்வது பெரிய புண்ணியம் என்றனர்..

தொடர்ந்த தயிரின் பயன்பாடு  உடலில் கொழுப்பை அதிகரித்து ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.. இதற்கு உடல் உழைப்பு குறைந்ததே காரணம்..

நீரிழிவு பிரச்னை உடையவர்களுக்கு தயிர் ஆகாத ஒன்றாக ஆகி விட்டது..

இரத்த சர்க்கரை அளவை தயிர் கட்டுப்படுத்துகிறது என்றாலும் மருத்துவ ஆலோசனை மிகவும் 
முக்கியம்..

தயிரினால் இதய நோய், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு  குறைவு என்றாலும் உடல் உழைப்பு மறந்து விட்ட சூழ்நிலையில் தயிர் பயன்பாட்டில் கவனம் கொள்ள வேண்டும்..


What is the difference between Curd and Yoghurt?..

Curd is the Indian term whereas Yoghurt is the western term .

Curd is made by mixing milk with Curd or lemon which yields several types of Lactic acid bacteria also known as Lactobacillus.

Whereas, Yogurt is made by commercial fermentation of milk by ingesting a particular type of bacteria strain..

Curd is Indian culture.
Yogurt is commercial  structure.. 

- என்பதைப் புரிந்து கொண்டு
ரசாயன கலப்புடைய தயிர் வகைகள் அதிகமாகி விட்ட நிலையில் யாரையும் குறை சொல்லாமல் நமக்கு வேண்டிய தயிரை நாமே தயாரித்துக் கொள்வது சாலச் சிறந்தது..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

12 கருத்துகள்:

 1. முதன்முதலில் தயிரையும் முறையும் யார் கண்டு பிடித்திருப்பார்கள்?  பாலிலிருந்து இதை எடுக்கலாம் என்று யாருக்கு முதலில் தெரிந்திருக்கும்?  அதைக் கூட விடுங்கள் மாட்டிடமிருந்து பாலக் கறந்து மனிதன் உபயோகிக்கலாம் என்று யார் முயற்சித்திருப்பார்கள் முதலில்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. * தயிரையும் மோரையும்

   நீக்கு
  2. இப்படியான கேள்விகள் எனக்குள்ளும் எழும். அதில் நன்மை, தீமை என பகுந்தறிந்தவர்கள் எவர்?

   நீக்கு
 2. தயிர் மிகவும் பிடித்த ஒன்றுதான்.  பிடித்த ஒன்றுதான் உடலுக்கு ஆகாது என்றாகி விடுகிறதே..   சில தயிர் ஸ்பூனால் வெட்டி எடுக்கும் அளவு கெட்டியாய் உரிந்து விடுகிறது.  ஆனால் இப்போதெல்லாம் அந்த அளவு கெட்டித்தயிரை வீட்டில் தயாரிக்க முடிவதில்லை.  ஓரளவுக்குத்தான்...

  பதிலளிநீக்கு
 3. இந்த கோடைக்கு மோர் எவ்வளவு சொர்க்கமாக இருக்கிறது தெரியுமா?  மாலை அலுவலகம் விட்டு வரும் வழியில் இப்போதெல்லாம் இளநீர் கூட சரியாய் கிடைப்பதில்லை.  வீட்டில் சொல்லி ஒரு சொம்பு மோர் தயாராய் வைத்திருக்கச் சொல்லி, வந்து உடை கூட மாற்றாமல் அந்த மோரை எடுத்து முதலில் கொஞ்சம் தொண்டைக்குள் இறக்கும் சுகம்..  அம்மம்மா.....

  பதிலளிநீக்கு
 4. எப்போதுமே தயிர் எனக்கு விருப்பம். ஆனால் விருந்துகளில், பாயசத்தோடு எழுந்துகொள்ளும் ரகம்.

  மிடில் ஈஸ்டில் கிடைக்கும் லெபான் எனப்படும் கெட்டி மோரை மிஸ் செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. லஸ்ஸி எப்போதோ சாப்பிட்டது.  தயிரில் இனிப்பு ஏனோ அவ்வளவு அகவர்வதில்லை என்னை..  

  பதிலளிநீக்கு
 6. நல்ல தகவல்கள் துரை அண்ணா...

  தயிர், மோர் இல்லாமல் நம் வீட்டில் ஒரு நாளும் கடக்காது. நீர் மோர் கண்டிப்பாக உண்டு. அதுவும் ஒவ்வொரு சாப்பாட்டின் பின்னும் சிறிது நேரத்தில் நீர் மோர் குடிப்பதுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. தயிர் பற்றிய அலசல் நன்றாக உள்ளது. எங்கள் வீட்டிலும் மோர் சாதம் சாப்பிடும் வழக்கம் என்றும் உள்ளது. இன்று கூட மோர் குழம்புதான். முதலில் அதை கலந்து சாப்பிட்ட பின்னரும், மோர் சாதம் சாப்பிடாமல் எழுந்தால், ஏதோ குறையாகவே தோன்றும். மோரும், தயிரும் நம் அன்றாட வாழ்வோடு கலந்து விட்ட ஒன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. தயிர், மோர் மிகப் பிடித்தமானது. அதுவும் வீட்டிலேயே தயாரிக்கிறோமே! இன்னிக்குக் கூடத் தக்காளி சாதத்துக்கு வெங்காயம்+தயிர். மோர் சாதத்துக்குக் கரைத்த மோர். இரவில் டிஃபன் சாப்பிடும் நாட்களில் மோரில் பெருங்காயம், உப்பு, கறுப்பு உப்பு, ஜீரகப் பொடி சேர்த்துக் கலந்துக் கொஞ்சம் நீர்க்க மோரைக் கரைத்துக் கொண்டு குடித்து விடுவோம். அதுவே குளிர் நாட்களில் ஒத்துக்கறதில்லை.

  பதிலளிநீக்கு
 9. தயிர் பற்றிய அருமையான பதிவு. என் மாமியார் அவர்கள் சாப்பிட்ட உடன் மோர் அருந்துவார்கள். கோடை காலம் வந்து விட்டால் நீர் மோர் கரைத்து வைத்து விடுவார்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..