நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 16, 2023

யாரை நம்பி

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 2
 செவ்வாய்க் கிழமை


Fb ல் வந்த 
காணொளியுடன்
இன்றைய பதிவு..

உறவுகள்
இப்படியும் ஆகிக் 
கொண்டிருக்கின்றன..

காணொளிக்கு நன்றி.


பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா
சொந்தம் இல்லே பந்தம் இல்லே..
- கவியரசர் -

வாழ்க நலம்
நலமே வாழ்க!..
***

10 கருத்துகள்:

 1. நல்ல பாடல் உவமையுடன் யோசிக்க வைக்கும் காணொளி.  இதுதான் இன்று நிலைமை!

  பதிலளிநீக்கு
 2. இன்று புதன்கிழமையாய் இருந்தால் நன்றாயிருக்கும்தான்.  சட்டென செவ்வாய் காணாமல் போய்விட்டதே என்று மகிழ்ச்சியாய் இருக்கும்!  நாளைய தினத்துக்கு ஷெட்யூல் செய்து வைத்திருந்தீர்களோ?!

  பதிலளிநீக்கு
 3. என் அப்பா எனக்குச் சொன்ன அறிவுரை (பதின்ம வயதிலேயே). சொத்து கையை விட்டுப் போக்க்கூடாது. அப்பாவிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்பதை. நானும் அதைத்தான் நினைத்திருக்கிறேன், சொல்லியிருக்கிறேன் (மனைவியிடமும்)

  பதிலளிநீக்கு
 4. பெற,றோர் இருக்கும் வரை, அவங்க சொத்து அவங்களிடம்தான்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. காணொளி கண்டேன். சொத்துக்கள் கைமாறி விட்டாலே மனம் மாறி விடும் உறவுகள். ஆனால், இப்போது சொத்துக்களே இருந்தாலும், அதை பிரித்து ஆண்டு அனுபவிக்க சமயம் வரும் போது பார்த்துக்கலாம் என சேர்ந்து இருக்க பிரியபடாத உறவுகள்.

  மனித மனதின் இந்த வன்மங்கள் இப்படியெல்லாம் பல வகைகளில் வெளிப்பாடாகிறது.

  நாம் காலத்தை குறை சொல்லி வருத்தப்படும் போது, காலம் நம்மிடமுள்ள குறைகளை சொல்லியபடி நம்மை கடந்து போகிறது. இதுதான் இப்போதைய நிதர்சனம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. பொதுவான யதார்த்தம் காணொளி.

  இதில் நடித்திருக்கும் சிறியவர்கள் இப்படி நடிப்பதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது. வாழ்க்கையில் இப்படி இருந்துவிடாமல் இருக்க வேண்டும்!.

  ஏனென்றால், நடிகர்கள் எல்லாம் நடிக்கும் போது சொல்வதொன்று ...வசனம், யதார்த்த வாழ்க்கையில் வேறு. அதனால் தோன்றியது

  கீதா

  பதிலளிநீக்கு
 7. உறவுகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் முதியவர்கள் கையில் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். பிள்ளைகளின் தேவை அறிந்து கொடுத்து உதவ, நல்ல நாளில் அவர்களுக்கு கொடுத்து மகிழ என்று இருக்க வேண்டும்.

  என் அம்மா முதியவர்களை காணபோனால் அவர்கள் கையிலும் பணம் கொடுத்து வருவார்கள், "ஏம்மா குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்கள் சரி, முதியவர்களுக்கும் ஏன் கொடுத்து விட்டு வருகிறீர்கள் ?என்றால் "நல்ல நாள், பெரிய நாளில் குழந்தைகள் காலில் விழுந்தால் அவர்கள் கொடுத்து மகிழ" என்பார்கள்.


  பணம் சம்பாதிக்க வழி இல்லா பெற்றோர்களையும் கவனித்து கொள்ளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். எவ்வளவுதான் பெற்றோர்களுக்கு செய்தாலும் அவர்கள் பிள்ளைகள் பெருமைகளை அறியாமல் அலட்சியமாக இருப்பதையும் பார்க்கிறோம்.

  உலகத்தில் எல்லாம் நடக்கும்.

  காணொளி மனதை கலங்க வைப்பது உண்மை.

  பதிலளிநீக்கு
 8. பணம் எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்து விடுகிறது.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..