நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 11, 2023

பரோட்டா

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 28
வியாழக்கிழமை

விக்கி கொடுத்த சில குறிப்புகளுடன் 
சொந்த அனுபவம்..


மைதாவினால் தயாரிக்கபடும் உணவு வகைகளில் முன்னணியில் இருப்பது பரோட்டா..

மைதாவினால் தயாரிக்கபடும் அனைத்து உணவுகளும் நம் உடலுக்கு அதிக அளவில்  பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று பலரும் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்..

இருந்தாலும் 
மக்களுக்கு பரோட்டா விருப்பமான உணவாகி இருக்கின்றது.. விற்பனை குறைவதேயில்லை.. 

மக்களும் அளவுக்கு மீறி பரோட்டாவிற்கு அடிமையாகிப் போனார்கள்..

சைவ பரோட்டா என்று காய்கறிக் குருமாவுடன் ஒருபக்கம் ஒதுங்கினாலும் பரோட்டாவை இறைச்சி வகையறாக்களுடன்  சாப்பிடுவோர் நிலை மிகவும் பரிதாபமானது.. மிகவும் மோசமானது.. 
அதில் செய்யப்படும் தில்லாலங்கடிகள் சொல்லும் தரமன்று..

கோதுமையில் இருந்து  திரும்பத் திரும்ப சுத்திகரிக்கப்பட்ட மாவு தான் மைதா..
கோதுமை மாவின் நிறம் சற்றே பழுப்பு.. இது ரசாயனங்களால்  வெளுப்பாக்கப்படுகின்றது. 

பழுப்பு நிறத்து கோதுமை மாவு வெண்மை நிறத்தில் மாறுவதற்காக கலக்கப்படும் ரசாயனங்கள் உடல் நலனுக்குக் கேடாகின்றன..

ஆவலுடன் உண்ணப்படும் பரோட்டா (மைதா) நமது உடலில் நீரிழிவு நோயை உண்டாக்குகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.. இது செரிப்பதற்கு அதிகநேரம் எடுத்துக் கொள்வதால்  கணையத்தை ஒழுங்காக இயங்க விடுவதில்லை. இதனால் உடலில் சர்க்கரையின் அளவு கூடிப் போகிறது..

மைதாவில் நார்ச்சத்து கூடக் கிடையாது.. இந்த மைதாவில் செய்யப்படும் உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டால் இரத்த நாளங்களில் அதிகமாக கொழுப்பு படிகின்றது.. 

இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை..

மைதாவில் தயாரித்து விற்கப்படும் அனைத்து உணவுகளும் ஒவ்வொரு வகையில்  ஆபத்தைக் கொண்டுள்ளன.. 
அவற்றில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மைதாவை முற்றாகத் தவிர்க்க 
வேண்டும். 

இன்றைய சூழலில் உணவு வகைகளில் மைதா கலக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வதே மிக கடினம்.. 

காலிஃபிளவர் பக்கோடா என்றாலும் அது  மைதா இன்றி இல்லை.. பல விதமான இனிப்புகளிலும் மைதா புகுந்து விட்டது..

அல்வா முதலான இனிப்புகளில் நாம் ஏமாற்றப்படுகின்றோம்..


பன், பிரட், பிஸ்கட்,  பப்ஸ், சமோசா, அலங்கார ஆடம்பர கேக் வகைகள், பீஸ்ஸா - பர்கர் - என்று எல்லாமே மைதாவுடன் சம்பந்தப்பட்டவையே..

தினமும் ஏதோ ஒரு வடிவத்தில் இந்த மைதா நமக்குள் சென்று கொண்டு தான் இருக்கின்றது.

வெளித் தயாரிப்புகளின் மீது நம்பிக்கை வைக்கும் காலம் அல்ல இது!..

சாலையோரக் கடைகளில் உபயோகிக்கப்படும் மைதாவின் தலையெழுத்து என்ன?..  புதியதா..
நாள்பட இருப்பில் இருந்ததா?.. - என்பன யாருக்குமே தெரியாது.. 


அந்தக் கடை மற்றும் ஊழியர்களின் குறிப்பாக பரோட்டா அடிப்பவரது சுகாதாரம் பற்றி யாருக்குக் கவலை?..  

மைதாவில் சேர்க்கப்படும் நீரும் எண்ணெயும் தரமானவையா?.. 
இப்படி பல கேள்விகள்.. எதற்கும் விடை தெரியாது..

நல்ல கோதுமையை வாங்கி சுத்தம் செய்து உலர்த்தி மாவாக அரைத்து நம் வீட்டில் பயன்படுத்திக் கொள்வது நல்லது..

அதற்கெல்லாம் நம்மால் ஆகாது என்றால் . சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

சுகாதாரமற்ற சூழலில்
தயாரிக்கப்பட்ட -
தரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது என்பது வீதியில் போகின்ற வியாதியை விலை கொடுத்து வாங்குவதே!..

மைதா கலந்த உணவுகளை நிறுத்துவதும் அல்லது வெகுவாக குறைத்துக் கொள்வதும் அவரவர் விருப்பம்..

மைதாவில் இருந்து விலகுவது ஒன்றே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

7 கருத்துகள்:

 1. உண்மை.  சொல்வதற்கு ஒன்றுமில்லை!  சொல்லிப் பயனில்லை.  அது ஒரு அரக்கன் போல மக்களை பற்றிக்கொண்டுள்ளது!

  பதிலளிநீக்கு
 2. A2B யில் பிரிபிரியாக (எல்லா கிளைகளிலும் அல்ல) பரோட்டா கொண்டு வந்து வைப்பார்கள்.  அங்கு குருமாவும் நன்றாக இருக்கும்.  ஒரு செட் வைப்பார்கள்.  பெரம்பூர் ஸ்ரீநிவாஸாவிலும் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரம்பூர் ஸ்ரீநிவாசாவை நோட் பண்ணிக்கொண்டேன். எப்போ அங்கு போகும் வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை (வாய்ப்பு மிக மிகக் குறைவு)

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. மைதாவை பற்றிய அலசல் நன்றாக உள்ளது. மைதா உடல்நலத்திற்கு கெடுதல் என்று தெரிந்துமே மக்கள் அதை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளார்கள். பிஸ்கட்டுகள் அனைத்திலும் இந்த மைதா பயன்பாடு உள்ளது.

  பழையபடி, இட்லி, தோசை, என்ற பாரம்பரிய உணவு பழக்கங்களை தினமும் சாப்பிட யாருக்கும் பிடிப்பதில்லை. அதனால் வேறுபட்ட சுவையை நாடித்தான் சிறு குழந்தைகள் உட்படச் செல்கிறார்கள்.

  பல விதமான உணவகங்களையும், அங்கு கூடும் மக்கள் கூட்டங்களையும் பார்க்கும் போது, இவர்கள் வீட்டில் சமைப்பதே குறைவோ என்ற எண்ணம் வருகிறது.
  மைதா உணவுகள் பற்றி, அது உடல்நலத்திற்கு எவ்வளவு தீங்கானது என்பதை பற்றியும் கூறியிருப்பதற்கு நன்றி.

  உங்கள் நேற்றைய பதிவுக்கு நேற்றே என்னால் வர இயலவில்லை. சில வேலைகள் தவிர்க்க இயலாமல் வந்து விட்டது. பிறகு இன்று மதியம் வாக்கில் அப்பதிவுக்கும் வருகிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. நாக்கை கட்டுப் படுத்த வேண்டும்...

  பதிலளிநீக்கு
 5. எங்களுக்கெல்லாம் பரோட்டா/புரோட்டா எனில் அது கோதுமை மாவில் செய்வது மட்டுமே. அதனாலேயே ஓட்டல்களுக்குச் சாப்பிடப் போகும்படி நேர்ந்தால் பரோட்டா கேட்பதே இல்லை. சப்பாத்தி அல்லது ஃபுல்கா. இங்கே எல்லாம் ஃபுல்காவும் பண்ணத் தெரியலை. வட இந்திய உணவு வகைகளைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதே நலம்.

  பதிலளிநீக்கு
 6. பரோட்டா பற்றி நீங்கள் எழுதியிருப்பது உண்மைதான். துபாயில் நம்மவீடு வசந்தபவனில் மாதம் ஒரு முறை (பயணிக்கும்போது) ஒரு செட் பரோட்டா (முடிந்த அளவு எண்ணெய் குறைவாக) சாப்பிடுவதற்கே என் மனைவி, சாப்பிடாதீங்க என்பாள். நம்ம ஊர்ல பரோட்டா சாப்பிடுவதை அனேகமாக விட்டுவிட்டேன். சென்ற வருடம் 2 சாப்பிட்டிருப்பேன்.

  ஆனால் 15-20 ரூபாயில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு (எதையோ சைட் டிஷ்னு கொடுக்கும் லோ க்ளாஸ் கடையில்) படுத்தால் பசி தெரியாமல் கம் என்று வயிறு இருப்பதால் ஏழைகள் மற்றும் குடிகாரர்களின் விருப்பத்திற்குரிய உணவாக மாறிவிட்டிருக்கிறது. குறைந்த விலையில் பசி போகிறது என்பதே காரணம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..