நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 17, 2023

திருப்பதிகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 5
   வெள்ளிக்கிழமை

நாளை
மகா சிவராத்திரி

இன்றைய பதிவில்
அப்பர் பெருமான் அருளிச் செய்த
பெரிய திருத்தாண்டகம்

நன்றி
பதிகம்: பன்னிரு திருமுறை
படங்கள்: விக்கி

தலம் - கோயில் 
திருச்சிற்றம்பலம்
(சிதம்பரம்)


இறைவன்
ஆடல்வல்லான்
அம்பலத்தரசன்

அம்பிகை
சிவகாமசுந்தரி

தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சிவகங்கை

ஆறாம் திருமுறை
முதலாம் திருப்பதிகம்

ஸ்ரீ நடராஜர் கோனேரிராஜபுரம்
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே..1

சங்கார தாண்டவம்
கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோம் அன்றே
மற்றாருந் தன்னொப்பார் இல்லா தானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 2

வஷஸ்வஸ்திகம்
கருமானின் உரி அதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 3

அர்த்தரேசிதகம்
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைகள் எட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.4

அர்த்த நிகுட்டம்
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 5

தாளபுஷ்பபுடம்
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்கம் ஆயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6

கடிச்சின்னம்
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செய் அவுணர்புரம் எரியக் கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.7

ஸ்வஸ்திகரேசிதம்
காரானை யீருரிவைப் போர்வை யானைக்
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை
அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 8

திரிபுர சங்கார தாண்டவம்
முற்றாத பால்மதியஞ் சூடி னானை
மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத்
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 9

ஊர்த்துவ தாண்டவம் 
காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்
கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே..10

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருவடிகள் 
போற்றி  போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. சிவமயமே எங்கும் சிவமயமே...   இனி பவபயமில்லை எங்கும் சிவமயமே...   திருச்சிற்றம்பலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சிவமயமே எங்கும் சிவமயமே.. //

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. சிவதாண்டவ காட்சிகளும், கோனேரி ஸ்ரீ நடராஜர் தரிசனம் கிடைத்தது. பகிர்ந்த தேவார பாடல்களை பாடி வழிபட்டு கொண்டேன். நன்றி. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  3. வாழ்க வையகம்
    ஓம் நமசிவாய...

    பதிலளிநீக்கு
  4. சிவ தாண்டவ வடிவ தரிசனம் சிறப்பு, துரை அண்ணா. ஒவ்வொரு தாண்டவ வடிவத்தின் பெயர்களும் இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 108 சிவ நாட்டியங்கள்..
      ஒவ்வொன்றும் தில்லை நடராஜர் கோயிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன..

      தஞ்சை பெரிய கோயிலில் நூற்றி எட்டும் பூர்த்தியாக வில்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. தாண்டவங்களும் பாசுரங்களும் மிக அருமை, இனிமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தங்கள் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. ஆடல் வல்லபாய் அம்பலத்து அரசனை வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      வாழ்க நலம்.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..