நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 21, 2022

கருடசேவை 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக இன்றும் கருடசேவைக் காட்சிகள்..


ஆதியில் பராசர மகரிஷியும் மார்க்கண்டேயரும் பின்னர் திருமங்கை ஆழ்வாரும் தரிசனம் செய்த கருட வாகனத் திருக்காட்சியை 
ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வாழ்ந்த மகான் ஒருவர் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றார்.. அவர் பன்னிரண்டு கோயில்களை இணைத்து இவ்விழாவைத் தொடங்கி வைத்ததால் ஸ்ரீ துவாதச கருடாழ்வார் தாசர் எனப்பட்டார்.. அந்த மகான் வகுத்த வழியில் இந்நாளில் இவ்விழா சிறப்பாக நடைபெறுகின்றது..
ஒரே நாளில் இருபத்து நான்கு கருட தரிசனமும் சடாரி சூட்டப்படுவதும் எத்தனை எத்தனை புண்ணியம்!..

நம் நாட்டில் இது போன்ற நிகழ்வு வேறு எங்கும் இல்லை..தமிழகத்தில் தஞ்சை மாநகரில் தான் இருபத்து நான்கு கருடசேவை எனும் வைபவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..

இதன் கீழ் வரும் காட்சிகளை வழங்கியவர் திரு. தஞ்சை விஜய்.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
கருட தரிசனம்
ஜன்ம பாவ விமோசனம்..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

12 கருத்துகள்:

 1. 4 கருட தரிசனம் ஒரே நாளில்...   கொடுத்து வைக்க வேண்டும்.  நீங்கள் பெற்ற பேறை எங்களுக்கும் வழங்கிய உங்களுக்கு நன்றி.  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 2. 24 கருட சேவை தஞ்ச்சையில் மட்டுமே நடக்கும் என்ற விவரம் அறிந்து கொண்டேன்.
  கருட தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. படங்கள் எல்லாம் அருமை.
  ஓம் ஹரி ஓம்
  நமோ நாராயணாய.

  பதிலளிநீக்கு
 3. நானும் தரிசனம் செய்து கொண்டேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 4. காணக்கிடைக்காத காட்சிகள்தாம். படங்களுடன் பெஇர்ந்துகொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. ஶ்ரீரங்கம் வந்தப்புறமாத் தான் இந்த 24 கருட சேவை பற்றித் தெரிந்து கொண்டேன். இங்கிருந்து சில மாமிகள் குழுவாகத் தஞ்சை போய்த் தங்கிப் பார்த்து வருவார்கள். அவர்களைப் பார்ப்பதே கருட சேவை பார்த்த புண்ணியம் என நினைத்துக் கொள்வேன். இதே போல் திருவாலி/திருநகரி கருடசேவைக்கும் இங்கிருந்து போவார்கள். இங்கே அரங்கனின் கருட சேவையை 2,3 முறைகள் பார்க்கும் பேறு கிடைத்தது. ஒருதரம் தங்க கருடன், ஒரு தரம் வெள்ளி கருடன்.

  பதிலளிநீக்கு
 6. எங்க ஊர்ப் பெருமாளுக்கும் கருட சேவை பண்ண வேண்டும் என்று ஆசை தான். அறநிலையத் துறை அதிகாரிகள் மனம் வைக்கணும். பெருமாள் தான் அவர்கள் மனதை மாற்றி அருள் புரியணும்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. இன்றைய கருட சேவை படங்களும் மனதுக்கு நன்றாக உள்ளது. 24 கருட சேவையையும் காண்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். தஞ்சை வாழ் மக்களுக்கு அப்பேறு கிடைத்திருக்கிறது. படங்களின் வாயிலாக எங்களுக்கும் அப்பேறினை தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் தரிசனத்தால் நாங்களும் கருட சேவை தரிசித்தோம் நன்றி. கண்குளிர்ந்த காட்சிகள்.

  பதிலளிநீக்கு
 9. ஒரே நாளில் 24 கருட சேவை தரிசனம் - காணக் கண்கோடி வேண்டும் - இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. ஆம்...தஞ்சையில் மட்டுமே .

  படங்கள் சிறப்பு....குறிப்பாக முதல் படம் கருடன் வடிவம்!! அனைத்தும் அருமை துரை அண்ணா. பகிர்ந்த விஜய் அவர்களுக்கும் பாராட்டுகள்

  கீதா

  பதிலளிநீக்கு