நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 14, 2022

நீலமேக தரிசனம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தஞ்சை மாமணிக் கோயில்களுள் ஒன்றாகிய 
ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் உடனாகிய ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருக்கோயிலில் வைகாசித் திருவிழா நேற்று முன்தினம் விசாகத்தன்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது..


கடந்த வைகாசி 21 சனிக்கிழமை (4/6) அன்று கொடியேற்றத்துடன் வைபவங்கள் தொடங்கின..

ஸ்ரீவிஷ்வக்சேனர் முன் செல்ல திவ்ய அலங்காரத்துடன்
ஸ்ரீ தேவி பூதேவி உடனிருக்க ஸ்ரீ நீலமேகப் பெருமாள் எழுந்தருளினார்..
அதற்குப் பிறகு எனக்கு திருக்கோயிலுக்குச் செல்வதற்கு இயலவில்லை..  வைபவங்கள் சிலவற்றை என் மகன் காட்சிப்படுத்தி இருக்கின்றான்.. அந்தப் படங்களை
த் தொடர்ந்து காணலாம்..நான்காம் திருநாளன்று 
ஸ்ரீ நீலமேகப் பெருமாள்  ஆண்டாள் நாச்சியாருடன் அருகிலுள்ள ஸ்ரீ வீரசிங்கப் பெருமாள் திருக்கோயிலுக்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி பெருமாளும் நாச்சியாரும் கருட வாகனத்தில் திருக்காட்சியளித்தனர்..

அன்றைக்கு மதியம் நூறு பேருக்கு மேல் விருந்து உபசரிப்பு..

ஏழாந்திருநாளன்று திருக்கல்யாணம்..
ஒன்பதாம் நாள்  விசாகத்தன்று காலையில் ரதோற்சவம்..
மாலையில் வடவாற்றின் கரைக்கு ஸ்வாமி எழுந்தருளி அமிர்த புஷ்கரணியில் தீர்த்தவாரி..


அதன்பின் கரந்தை ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி கோயிலில்  மங்கல ஆரத்தி ஏற்றுக் கொண்டு யதாஸ்தானம் திரும்பியதும் கொடியிறக்கம் கண்டு திருவிழா இனிதே நிறைவுற்றது..

அருகிருந்து வைபவங்களைத் தரிசிக்க இயல வில்லை இவ்வருடம்.. ஆயினும் என் மகன் அளித்த ஒளிப் படங்களால் அகம் மகிழ்ந்தேன்..


நீலமேகப்பெருமாள்
திருவடிகள் போற்றி

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

16 கருத்துகள்:

 1. படங்கள் மூலம் நாங்களும் தரிசனம் பெற்றோம்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. தரிசித்து கொண்டேன் ஜி வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

   நீக்கு
 4. நீலமேகப்பெருமாள் தரிசனம் செய்து கொண்டேன்.
  உங்கள் மகன் எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது.
  உடல் நலம் விரைவில் குணமாக நீலமேகப்பெருமாள் அருள்வார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.. வாழ்க நலம்..

   நீக்கு
 5. அருகிலிருந்தும் தரிசனம் இந்தமுறை உங்களுக்கு வாய்க்கவில்லையே.. அடுத்தபுறை நீங்களே தரிசித்து படங்கள் எடுத்து வெளியிடணும்.

  முடிந்தால் மூலவருடன் கூடிய படங்களை எனக்கு அனுப்பவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ..

   மூலவர் படங்களை வாய்ப்பு கிடைக்கும் போது வழங்குகின்றேன்.. நன்றி..

   நீக்கு
 6. எல்லாப் படங்களும் சிறப்புடன் எடுக்கப் பட்டிருக்கின்றன. நல்ல முறையில் உங்கள் மகன் தரிசனம் செய்து வைத்து விட்டார். அடுத்த முறை நீங்களே சென்று நல்லபடியாக தரிசனம் முடித்துத் திரும்பும்படி அந்தப் பெருமாள் அருள் புரிவான். உடல் நலம் பேணவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

   முதல் நாள் கொடியேற்ற நிகழ்வுகள் அனைத்தும் நான் எடுத்தவையே..

   தங்கள் பாராட்டுக்கு நன்றி..

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. நீலமேக பெருமாளை தாயார்களுடன் தரிசித்து கொண்டேன். படங்களை தங்கள் மகன் அழகாக எடுத்துள்ளார். அவர் தயவில் இந்த கோவில் பெருமாளையும், படங்களையும், நாங்களும் கண்குளிர கண்டு மனதாற வணங்கி கொண்டோம். படங்கள் எடுத்தனுப்பிய அவருக்கும், அதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
   இதில் நான் எடுத்த படங்களும் உள்ளன..
   முதல் நாள் கொடியேற்ற நிகழ்வுகள் அனைத்தும் நான் எடுத்தவை..

   தங்கள் பாராட்டுக்கு நன்றி..

   நீக்கு
 8. நீலமேகப்பெருமாள் உற்சவ தரிசனங்கள் பெற்றோம். அழகிய காட்சிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு