நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 12, 2022

அழகன் முருகன்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
முருகப்பெருமான்
தோன்றியருளிய
வைகாசி விசாகம்..


விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த மிகவானில் இந்து ... வெயில் காய

மிதவாடை வந்து தழல்போல ஒன்ற வினைமாதர் தந்தம் 
... வசைகூற

குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ... மயல்தீர

குளிர்மாலையின் கண் அணி மாலை தந்து குறைதீர வந்து ... குறுகாயோ

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த ... மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த ... அதிதீரா 

அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் ... களைவோனே

அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
*** ***

வெற்றிவேல்..
வீரவேல்
*

18 கருத்துகள்:

 1. முருகனுக்கொரு நாள் திருநாள்... ஒரு நாள்தானா? ​முருகனின் அருள் அகிலத்தை நிறைக்கட்டும்.


  உங்கள் கைவலி எப்படி இருக்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு.. கை வலியில் மாற்றமில்லை.. எனினும் வேலை சிந்திப்பதே வேலை என்றதன் அடிப்படையில் இந்தப் பதிவு..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. கைவலி தேவலையா? கவனமாக இருக்கவும். முருகனின் இரு படங்களுமே அழகு என்றாலும் இரண்டாவது படம் மிக அழகு. முருகனின் வேல் அனைவரின் வினைகளையும் தீர்க்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கையில் வலி அப்படியே தான் இருக்கின்றது.. தங்கள் அன்பிற்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. விறல்மாரன்... அருமையான வார்த்தை.. முருகன் பதிவை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விறல் மாரன் எனில் யாருடைய மன உறுதியையும் குலைப்பவன் - மன்மதன்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அருமையான திரும்புகழ். விசாகன் விரைந்து வந்து நம் வினைகளை தீர்ப்பான்.

  உங்கள் கைவலியை விரைவில் சரி செய்வான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருந்தா வகை தந்து வடிவேல் காக்கும்
   வண்ண மயில் வந்து
   வாஞ்சையுடன் நோக்கும்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. வைகாசி விசாகம் வாழ்த்துகள். அனைவருக்கும் அவன் அருள் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. வைகாசி விசாக முருகனின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். அழகான முருகப்பெருமானின் படங்கள், பாடல்கள் கண்களுக்கும், மனதுக்கும் நிறைவாக இருக்கிறது. அனைவருக்கும் முருகனருள் கிடைக்க அந்த பரம்பொருளை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது? வலது கை வலிகள் குறைந்து நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இங்கு எனக்கும் உடல்நல குறைவால் நேற்று வர முடியவில்லை. இறைவன்தான் அனைவரையும் காக்க வேண்டும். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   உடல் நிலை சற்று நன்றாக இருக்கின்றது..

   நன்றி..

   நீக்கு
 7. வெற்றி வேல், வீர வேல். முருகனுக்கு அரோஹரா!

  பதிலளிநீக்கு