நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 30, 2022

சுக்குமி..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

// அது சரி.. மெனெக்கிட - எந்த மொழி இது?.. //

நேற்று எங்கள் பிளாக் கேள்வி பதில் பகுதியின் கருத்துரையில்
அன்பின் நெல்லை அவர்கள் கேட்டிருந்த அந்தக் கேள்விக்கு என்னால் ஆன விளக்கம்..


" வேல மெனெக்கிட -  என்பது தமிழ் தான்!.. தமிழே தான்!.. "

" நாம் தான் தமிழை அர்த்தம் பொருத்தமாகப் பேசுபவர்கள் ஆயிற்றே!.. "

" அது எப்படி என்றால் -
வேலை, வினை கெட!..
அதாவது -
நான் செய்ய வேண்டிய வேலையும் கெட்டது.. என் பழைய வினையும் கெட்டது.. "

" எப்படி?.. "

" இவனுக்கு இந்த வேலையை செய்யப் போனதால் எனது வேலை கெட்டுப் போயிற்று.. இவனுக்கு இந்த மாதிரி ஒரு வேலையை ஏதோ ஒரு ஜென்மத்தில் செய்து கொடுக்க மறுத்ததால் அப்போது ஏற்பட்ட பாவ வினையும் இத்தோடு கெட்டுப் (விட்டுப்) போயிற்று.. 
- என்பதாக அர்த்தம்.. "

" அட!... "

" எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்.. படித்தவன் பாட்டைக் கெடுத்தான் -  என்ற கதை தான்!.. "

" இது வேறயா?.. "

" ஏடும் எழுத்தாணியும் இருந்த அந்தக் காலத்தில் எழுதுவதற்கு பதம் ஆன ஓலை வேண்டும்.. "

" பச்சை ஓலையும் ஆகாது..
சருகான ஓலையும் ஆகாது..
பதம் ஆன ஓலையும் விலை கொடுத்தால் தான் கிடைத்திருக்கும்.. இப்படியான சூழலில் அரைகுறைப் பேர்வழி எழுதுகின்றேன் என்று ஓலையில் கிறுக்கிக் கிழித்து வைத்தால்!.. அது வேறெதற்கும் ஆகாது.. "

" இதேபோல் எழுத்தறிந்து வாசிக்கத் தெரியாத ஒருவன் ஏற்ற இறக்கங்களுடன் பாடுவேன்!.. என்று சுர வரிசைக்குள் கை வைத்தால்!.. "

"ஆகா.. அருமை!.. "

"இதற்குத்தானே சொல்லி வைத்தார்கள் - 

சுக்குமி ,
ளகுதி ,
ப்பிலி!.. - என்று!.."

"நீங்களும் உங்கள் தமிழும்.. ஆளை விடுங்கப்பா!.. "
***

24 கருத்துகள்:

 1. மெனக்கிட என்பது பேச்சு வழக்கு.  மெனெக்கெட என்று வரும் இல்லையா?  "மெனெக்கெட்டு வந்தேன்.  வந்து பார்த்தால் அவரைக் காணோம்" என்று சொல்வதுண்டு.  என் வேலைகளை எல்லாம் விட்டு விட்டு இதையே பெரிதாய் எடுத்துக்கொண்டு என்று அர்த்தம் வருவது போல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெனக்கிட - என்ற வார்த்தைக்காகத்தான் இந்தப் பதிவு..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. சிறிய இடைவேளைக்குப்பின் ஆன்மீகப் பதிவிலிருந்து விலகி ஒரு சமூகப்பதிவு!  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. வேலை மெனெக்கிட்டு ஒரு பதிவு... ஆன்மீகப் பதிவுகளின் இடைச் செருகலாக.. வித்தியாசமாக இருந்தது

  பதிலளிநீக்கு
 4. சுவையான பதிவு. ஆரம்ப காலங்களில் இம்மாதிரிப் பதிவுகள் எழுதச் சொல்லி நண்பர்களிடமிருந்து அழைப்பு வரும். தொடர் பதிவுகள் எழுதி இருக்கோம். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 5. சுக்குமி நன்றக இருக்கிறது.
  வேலை மெனக்கிட்டு அர்த்தம் சொல்லும் பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. சுக்குமி -----ளகுதி---ப்பிலி நினைவுக்கு வந்தது.

  அர்த்தம் நல்ல விளக்கம் துரை அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 7. இராம.கி ஐயா அருமையான அழகான விளக்கம் தருவார்...

  பதிலளிநீக்கு
 8. மாறுதலான பதிவு நன்று ஜி

  பதிலளிநீக்கு
 9. நல்லதோர் பகிர்வு.
  எங்கள் ஊரில் அடிக்கடி உபயோகப்படுத்துவார்கள் 'வேலை மெனக்கெட்டு' குழந்தைகள் சாப்பிடாத இடத்தும் 'வேலைமெனக்கெட்டு சமைத்தேன் என்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.. இயல்பான வார்த்தையாகி விட்டது.. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  பதிவு நன்றாக உள்ளது. மெனக்கெட்டு வார்த்தை நாம் அடிக்கடி உபயோகபடுத்துவதுதான். நீங்கள் தந்த விளக்கமும் நன்று. சுக்குமி இதையும் சிறுவயதில் கேள்விபட்டுள்ளேன். ஒரு விளையாட்டில் கூட இந்த வார்த்தைகளை உபயோகித்தது நினைவுக்கு வருகிறது. வித்தியாசமான பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயல்பான வார்த்தை தான் அது.. இன்றியமையாததாகி விட்டது..

   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 11. மெனக்கிட்டு "மெனக்கட" க்கு விளக்கம் எழுதியுள்ளது நன்று.

  சுக்குமி போல 

  பீமன்ம,
  ரத்தைப்பு,
  டுங்கினானே, 
  என்பதும் பிரபலம். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   பீமசேனம
   காராசாம
   ரத்தைப்பு டிங்கினானே!..

   டிங்கினானே!..
   டிங்கினானே!..
   டிங்கி னானே!..

   அருமை. இதுவும் நினைவில் உள்ளது..

   தமிழ்த்தாத்தா தனது நினைவலைகளில் கிராமிய கூத்து பற்றி
   சொல்லியிருப்பார்..

   கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி..

   நீக்கு