நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 02, 2022

சுவாமிமலை

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவின் ஊடாகக் கிடைத்த நேரத்தில் அருகில் இருக்கும் கோயில்களில் தரிசனம்..

அந்த வகையில் இன்று
நான்காம் படைவீடாகிய சுவாமிமலை..பிரணவத்தின் பொருள் மறந்த ஸ்ரீ நான்முகனைச் சிறையில் அடைத்து விட்டு - உயிர்களைப் படைக்கும் பணியைத் தானே ஏற்றுக் கொண்ட முருகப்பெருமான் அம்மையப்பன் கேட்டுக் கொண்டதால் பிரணவத்தின் பொருளினை விளக்கி அருளிய திருத்தலம்..

கிழக்கு நோக்கிய கோயில் என்றாலும் 
தெற்கு வாசல் தான் பிரதானம்..

கோயில் திருவாசல்

அறுபது படிகளுடன் மூன்று தளங்கள் என, விளங்கும் கட்டுமலைக் கோயில்.. இதனை குருமலை என்கின்றார் அருணகிரிநாதர்..

கீழ்தளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் சந்நிதிகள்.. எதிரில் தல விருட்சமாகிய நெல்லி மரம்.. கிழக்குப் பிரகாரத்தில் வல்லப கணபதி சந்நிதி.. தங்க ரதம் இழுக்கப்படும் முதல் சுற்றுப் பிரகாரம்.. 

மேல் தள படிக்கட்டுகள்மேல் தளத்தில் விமான தரிசனம்

மூலஸ்தானத்திற்கு

ஸ்ரீ நேத்ர விநாயகர்

இரண்டாம் தளம் பிரகாரம் மட்டுமே.. அறுபது படிகளைக் கடந்து மூன்றாவது தளத்தை அடைந்ததும் - எதிரில் தெற்கு நோக்கியபடி ஸ்ரீ நேத்ர விநாயகர்..

ஞானமே வடிவாகிய வள்ளல் வடிவேலனைக் கண்டு உணர்வதற்கான விழிகளைத் திறந்து வைப்பவர் இவரே - என்பது திருக்குறிப்பு..

மூலஸ்தான திருவாசல்

இங்கே கொடிமரம், மணியடி மண்டபம் விளங்குகின்றன..
மூலஸ்தானத்தின் வாசலில் ஸ்ரீ அகத்தியர், வீரபாகு முதலான நவ வீரர்கள், ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் ஸ்ரீ ஷண்முகநாதன், பாலசாஸ்தா, ஸ்ரீ பைரவர், சூரிய சந்திர நாகர்கள்.. 

மூலஸ்தானத்தினுள் ராஜ கம்பீரமாக நின்ற திருக்கோலத்தில் ஞான பண்டித மூர்த்தியாகிய 
ஸ்ரீ ஸ்வாமி நாத ஸ்வாமி..


நிறைமதி முகமெனும் .. ஒளியாலே 
நெறிவிழி கணை யெனும் .. நிகராலே

உறவுகொள் மடவர்கள் .. உறவாமோ
உனதிரு வடியினில் .. அருள்வாயே..

மறைபயில் அரிதிரு .. மருகோனே
மருவலர் அசுரர்கள் .. குலகாலா

குறமகள் தனைமணம் .. அருள்வோனே
குருமலை மருவிய .. பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
***

மூலஸ்தானத்தில் உச்சிக் குடுமியுடன் திருக்கரத்தில் தண்டாயுதம் தாங்கிபடி ஆவுடையில் நின்றருளுவதாக முருகப் பெருமானின் திருக்கோலம்..

வஜ்ரவேல் முருகனின் திருக்கரத்தில் சாற்றப்படுவது..
இத்தலத்தில் பேராயிரமுடைய தங்கப் பூமாலை சாற்றுப்படி மிகவும் விசேஷமானது..மணியடி மண்டபம

மேல் தள விமான தரிசனம்

ஸ்ரீ வல்லப கணபதி


தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர் வேலெடுத்த பெருமாளே!.. -
மாயை எனும் இருளை விலக்குவதற்காக முருகன் இங்கிருந்தே ஒளி எனும் ஞான வேலினை எடுத்தான் என்பது அருணகிரியார் திருவாக்கு..


எந்தனை ஆளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்துதவி - என்பது கந்த சஷ்டிக் கவசம்!.. வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு அரோஹரா..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

 1. என்ன தவம் செய்தேன் முருகா... தளம் திறந்ததும் காலையில் உன் தரிசனம் கிடைப்பதற்கு? ஓம் முருகா...


  சுவாமிமலை எங்கள் இரண்டாவது குலதெய்வம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு.. குலதெய்வ வரம்பு என்றில்லாமல் ஹிந்து மக்கள் எல்லாருக்கும் இனியவம் எம்பெருமான் முருகன்..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. முருகனுக்கு அரோகரா...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. அழகான படங்கள். சுவாமி மலை முருகனை தரிசித்துக் கொண்டேன். சுவாமி மலைக்கு இரு தடவைச் சென்றும் மேல்தளத்தில் விமான தரிசனம் நான் இதுவரை பார்த்ததில்லை. ஏதோ அவசரம். நின்று நிதானித்து பார்க்க விடாமல் செய்து விடுகிறது. தங்கள் பதிவில் கோவிலில் விடுபட்டனவற்றை கண் குளிர தரிசித்துக் கொண்டேன். மற்றோர் முறை அவன் அழைப்பிற்கு காத்திருக்கிறேன். அவன் சித்தம். என் பாக்கியம். முருகா சரணம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. எபியிலும் முருகன் இங்கும் முருகன்!

  சுவாமிமலை முருகன் கோயில் இப்படித் தளங்களாகவா? படங்கள் அனைத்தும் நன்று. கோபுரம், கோயில் உள் தூண்கள் எல்லாமே. கோயில் பற்றிய விவரங்களும் சிறப்பு

  கீதா

  பதிலளிநீக்கு
 5. சுவாமி மலை தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்து இன்னும் வாய்க்கவில்லை.

  படங்களும் விவரங்களும் அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 6. படங்களும் பதிவும் சிறப்பு. முருகப்பெருமானுக்கு அரோகரா.....

  பதிலளிநீக்கு
 7. சுவாமி மலை நேரில் தரிசிக்க நினைத்தும் அப்பொழுது செல்ல முடியவில்லை. விரிவாக உங்கள் படங்களில் கண்டு கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 8. ஸ்வாமிமலை சின்ன வயசில் இருந்தே பார்த்திருக்கேன். எப்போ ஏற்பட்ட கோயில் எனத் தெரியலை. ஆனாலும் சரித்திரங்களில் குறிப்பிடப்படும் திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம், பழையாறைக் கோயில்களைப் போல் இந்தக் கோயில் சரித்திரங்களில் குறிப்பிடப் பட்டிருப்பதாய்த் தெரியலை. மதுரை அழகர் கோயில் காணப்படும்.

  பதிலளிநீக்கு
 9. நீண்ட நாட்கள் கழிச்சு உங்கள் மூலம் ஸ்வாமிநாத ஸ்வாமியின் தரிசனம்.

  பதிலளிநீக்கு