நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 22, 2022

நவநீத சேவை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த ஞாயிறு அன்று தஞ்சை மாநகரில் நிகழ்ந்த கருட சேவைக்குப் பின் திங்கட்கிழமை காலை நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி உற்சவம்.. இவ்வைபவத்தில் பிரதான கோயில்களான மாமணிக் கோயில்களுடன்
ஏனைய சில கோயில்களும் சேர்ந்து பதினைந்து பல்லக்குகள் நகரில் எழுந்தருளின. 

அந்தக் காட்சிகள் இன்றைய பதிவில்..


























நேற்று மாமணிக் கோயில்கள் மூன்றிலும் தீர்த்த வாரியுடன் கருட சேவைப் பெருவிழா இனிதே நிறைவுற்றது..

இந்நிலையில் 
கருட சேவையை நேரில் தரிசிக்க இயல வில்லையே - என்று நான் வருந்தியிருக்க, தாழியில் இருந்த வெண்ணெயில் கையளவுக்கு பிரசாதமாக அனுப்பி அருள் பொழிந்து இருக்கின்றார் பெருமாள்..

நெஞ்சம் நெகிழ்ந்திருக்கின்றேன்..
*

கல்யாண வரதன் கவலையைத் தீர்க்க
வீரசிங்கம் வினைகளை விலக்க
மாமணிக் குன்றம் மங்கலம் அருள
நீலமேகம் நின்றருள் பொழிகவே!..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
***

14 கருத்துகள்:

  1. குடத்துடன் பெருமாள் அழகு.  சடாரி மரியாதை பெற்றுக்கொள்ளும் அந்த இரு வி ஐ பிக்கள் யார்?  எல்லாப் படங்களும் அழகு.  வீடு தேடி வந்த பெருமாள் பிரசாதம் நெகிழ்ச்சி.  உங்களை அங்கு காணோமே என்று பெருமாள் தேடியது போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அந்த இருவரில் ஒருவர் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் உயர் திரு தஞ்சை இளவரசர் பாபாஜி போன்ஸ்லே.. மற்றவர் தேவஸ்தானத்தின் உயர் அலுவலராக இருக்கலாம்.. சரியாகத் தெரியவில்லை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. அருமையான படங்கள். நவநீத கிருஷ்ணன் எப்போதுமே அழகன். இங்கேயும் அழகாகவே காட்சி கொடுக்கிறான். உங்களுக்கும் கிருஷ்ணனின் நவநீதம் கையளவு கிடைத்ததில் மனம் மகிழ்ந்தது. இந்தக் கிருஷ்ணன் விக்ரஹ வடிவில் எங்க வீட்டிலும் இருக்கான் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாகனு நினைக்கிறேன். கிருஷ்ண ஜயந்திக்கு இவன் தான் வருவான். எல்லாப் பெருமாள் கோயில்களிலும் கர்பகிரஹத்தில் இந்தக் குழந்தைக் கண்ணன் உண்டு. குழந்தை பிறக்கக் காத்திருப்போருக்கு இந்தக் கிருஷ்ணனைக் கையில் கொடுத்து சங்கல்பம் செய்து கொள்ளச் சொல்லுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விக்ரஹத்தை சந்தான கிருஷ்ணன் என்பார்கள்.. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  3. வலக்கையில் வெண்ணெயுடன் தவழ்ந்த கோலத்தில் இருந்தால் நவநீத கிருஷ்ணன் எனவும், வெண்ணைத்தாழி இடக்கையிலும் வலக்கையில் வெண்ணெயும் இருந்தால் வெண்ணெய்த்தாழிக் கிருஷ்ணன் எனவும் எங்க ஊர்ப்பக்கம் சொல்லுவாங்க. இருவருமே அழகுக் குழந்தைகள் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது புதிய செய்தி.. குறித்துக் கொண்டேன் மகிழ்ச்சி.. நன்றியக்கா

      நீக்கு
  4. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
  5. வெண்ணைத்தாழி உற்சவம் தரிசனம் செய்து கொண்டேன், தரிசனம் அருமை. ஜோதி தொலைக்கட்சியில் வெண்ணைத்தாழி உற்சவம் காட்டினார்கள், புதுயுகம் தொலைக்காட்சி செய்தியில் காட்டினார்கள்
    இப்போது ஜோதி தொலைக்காட்சியில் தஞ்சையில் இருக்கும் "திருவைகாவூர்" பாடல் பெற்ற தலம் காட்டி கொண்டு இருக்கிறார்கள்.

    வீட்டுக்கு பிரசாதம் வந்தது மகிழ்ச்சி. விரைவில் நலம் அடைந்து விடுவீர்கள்.இப்போது கைவலி எப்படி இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் தொலைக் காட்சிப் பெட்டி இருந்தும் நிகழ்ச்சிகளில் விருப்பம் இல்லாததால் இணைப்பு எடுக்க வில்லை.. என் மகன் திருவிழாவின்போது கோயில் பட்டாச்சாரியாருக்கு உதவியாக இருந்தான்.. அந்த வகையில் வீட்டுக்கு பிரசாதமாக கொடுத்து அனுப்பினார்.. கை வலி அவ்வப்போது வந்து வந்து போகிறது..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தெய்வீக படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. விபரங்கள் அனைத்தும் அறிந்து கொண்டேன். வெண்ணெய் தாழி கிருஷ்ணரை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். தங்களுக்கு பிரசாதம் அனுப்பிய அவன் கருணைக்கு மெய் சிலிர்த்தேன். அவன் அருளால் இனி உங்கள் கை வலிகள் பூரணமாக குணமடைந்து விடும். நானும் அவ்வண்ணமே அவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கை வலி பூரணமாக குணமடைந்து விடும்// தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நானும் அவ்விதமே நம்புகின்றேன்.. தங்கள் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வெண்ணைத் தாழி உற்சவம் அழகிய படங்கள் தரிசித்தோம்.
    நீங்கள் செல்லமுடியவில்லை என ஏங்கியதில பெருமாளே பிரசாதம் அனுப்பியுள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில் இருந்தும் கருடசேவையைத் தரிசிக்க இயலாதபடிக்கு சூழ்நிலை..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..