நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 06, 2022

கூடலூர் 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று வெளியாகி இருக்கவேண்டிய பதிவு இது..

எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு..
சுற்றுச்சூழல் பாதிப்பினால் அதிக வெப்பம்.. அதிக வியர்வை.. அதிக பதற்றம்.. அதனால் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் அதிகம் ஆனதால் வலப்புற கையும் காலும் சற்றே தளர்ந்திருக்கின்றன.. சோதனைக் காலம்.. கடந்து தான் ஆக வேண்டும்.. 

கடந்த சில பதிவுகளின் கருத்துரைகளுக்கு பதில் கூற இயலாது இருக்கும் நிலையில் புதிதாக சேர்ந்திருக்கும் பிரச்னை இது.. மன்னிக்கவும்..
இனி,
திருக்கூடலூர் ஸ்ரீ ஜகத் ரக்ஷகப் பெருமாள் கோயில் தரிசனம் தொடர்கின்றது..

இங்கிருந்தே ஸ்வாமி வராஹ வடிவம் கொண்டு பூமியைத் துளைத்துச் சென்று 
ஹிரண்யாட்சனை அழித்தார் என்பது தலபுராணம்..


கருவறையைச் சுற்றி உள்நாழி திருச்சுற்று அமைந்துள்ளது..


ஸ்ரீ விமான தரிசனம்

இத்தலத்தில் ஸ்வாமியின் திருக்கரத்தில் பிரயோகச் சக்கரம் திகழ்வதால் இங்கே சக்கரத்தாழ்வார் விசேஷம்.. சுற்றி வந்து வணங்கும் படிக்கு அர்த்த மண்டபத்தில் ஸ்ரீ சுதர்சனர் ஸ்ரீ நரசிம்மருடன் திகழ்கின்றார்..


பெருமாள் சந்நிதியின் பிரகாரத்தில் பெரியதாக நிழல் விரித்திருக்கின்றது தல விருட்சமான பலா.. தல விருட்சத்தின் இடது புறத்தில் சுயம்புவாக சங்கு வெளிப்பட்டிருக்கின்றது.. மேலும், பலாவின் காய்களும் கனிகளும் நூற்றுக் கணக்கில் இருந்தும் அவற்றை யாரும் தீண்டுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது..
பிள்ளை  உருவாய்த் தயிருண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவ ரூர்போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே - 1360 (5.2.3) 
-: திருமங்கையாழ்வார் :-
ஓம் ஹரி ஓம்
***

14 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலைவணக்கம். கோவில் படங்களும் தகவல்களும் நன்று.

  உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் ஜி.

  பதிலளிநீக்கு
 2. நிறைய படங்கள்.. நிறைய விவரங்கள்.. அது இருக்கட்டும். முதலில் மருத்துவரைச் சென்று பாருங்கள். கவலை தரும் செய்தியைக் கூறுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.. ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளேன்

   நீக்கு
 3. உடல் நலத்தைப் பார்த்து கொள்ளுங்கள்.
  கூடலூர் பெருமாள் கோயில் பதிவுகள் அருமை.
  நான் பார்த்து பல வருடம் ஆகி விட்டதால் இப்போது கோயிலின் படங்கள் நினைவூட்டுகிறது.
  ஓய்வு எடுங்கள் கொஞ்சம், வெயில் சமயம் பயணம் வேண்டாம். மருத்துவரிடம் சென்று வாருங்கள். அருள்வாக்கு சொல்பவர்களுக்கு உடல் அசதி இருக்கும். கவனம்.
  இறைவனிடம் உங்களுக்கு உடல் நலத்தை அருள வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. தரிசனம் நன்று.
  உடல் நலம் கவனித்து கொள்ளுங்கள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி.. தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கோவிலைப்பற்றிய விவரங்கள் அறிந்து கொண்டேன். முதலில் தங்கள் உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள். கருத்துரைகளுக்கு பதில் அளிக்க தாமதமாகிறதே என கவலையுற வேண்டாம். நன்றாக ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தங்களது உடல் நலம் சங்கடங்களின்றி பூரணமாக குணமடைய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  கோவிலின் தல விருட்ஷமாகிய பலா மரத்தில் சுயம்புவாக தோன்றியருக்கும் சங்கு பலாஅதியசந்தான். எல்லாம் தெய்வச் செயல். கோபுர தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் மற்றும் அருமையான விபரங்களின் பகிர்வு மூலம் எங்களையும் எல்லா கோவில்களுக்கும் அழைத்துச் செல்லும் தங்களுக்கு உளம் கனிந்த நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பிரார்த்தனை க்கு மகிழ்ச்சி.. அன்பினுக்கு நன்றி..

   நீக்கு
 6. உடல் நலம் முக்கியம்... பதிவுகள் அப்புறம்...

  பதிலளிநீக்கு
 7. பெருமாள் அருளால் விரைவில் உடல் நலமாகட்டும்.

  சுயம்புவாக தோன்றியுள்ள சங்கு அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு