நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 27, 2022

கோசாலை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***


கோவிந்தபுரம்
ஸ்ரீ விட்டல் பாண்டுரங்க ருக்மணி சமஸ்தான் தரிசனத்தின் தொடர்ச்சியாக இன்றைய பதிவு - 
கோசாலையில் எடுக்கப்பட்ட சில  படங்களுடன்..


கோசாலையின் நுழைவு வாயில் குழலுடன் கூடிய ஸ்ரீ கிருஷ்ண திருக்கரங்கள்..  அவனது அரவணைப்பில் இருப்பதைப் போல் இருந்தது..

தமிழகத்தின் உம்பளாச்சேரி ( தஞ்சை) மற்றும் காங்கேயம் இனங்களையும் சேர்த்து
பாரதத்தின் அனைத்து பசு இனங்களுடன் - ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன என்கின்றார்கள்.. 
ஆங்காங்கே அந்தந்த இனங்களின் சிறப்பு இயல்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் குறித்து வைக்கப்பட்டுள்ளன..





பிரம்மாண்டமான தொழுவத்தினுள் சுற்றிச் சுற்றி வந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..





கோசாலையிலும் கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் அதிஷ்டானத்திலும் யோகி ஸ்ரீ ராம் சுரத்குமார் ஸ்வாமிகளின் தியான பீடத்திலுமாக பொழுது நகர்ந்தது..

இரவு 7:30 மணியளவில் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு மகா ஆரத்தி.. நாம சங்கீர்த்தனம்.. புஷ்பாஞ்சலி.. பிரசாதம் வழங்கப் பெற்றது..







கோசாலையில்
தனது பக்த ஜனங்களுடன்
ஸ்ரீ விட்டலின் விஸ்வரூபம்..
அவர்களுடன் ஒருவராக நமக்கு இன்னும் எத்தனை பிறவிகள் வேண்டுமோ... 
அவன் ஒருனுக்குத் தான் தெரியும்!..

பிரிவதற்கு மனமில்லை.. ஆயினும் அங்கிருந்து புறப்பட்டு இல்லம் வந்து சேர்ந்த போது இரவு 10:30.. 

செயல் இழந்திருந்த செல்போனுக்கு சிறிது மின்னேற்றம் செய்துவிட்டுத் திறந்தால் - கண்ணனின் கனியமுதமாக
ஸ்ரீ பாண்டு ரங்கனின் திருமேனி அழகைப் பற்றிய காணொளி ஒன்று எனது மைத்துனர் அவர்களிடமிருந்து 
WhatsApp ல் வந்திருந்தது..
அவர் ஸ்ரீ விட்டலின் அன்பர்.. அடிக்கடி இங்கு வந்து செல்பவர்..
அந்தக் காணொளி தங்களுக்காக..


கேட்டவர்க்குக் கேட்டபடி
கண்ணன் வந்தான்..
கேள்வியிலே பதிலாக
கண்ணன் வந்தான்..

தர்மம் என்னும் தேரிலேறி
கண்ணன் வந்தான்..
தாளாத துயர் தீர்க்கக்
கண்ணன் வந்தான்..
***
ஹரே க்ருஷ்ண.. 
ஹரே க்ருஷ்ண..
ஓம் ஹரி ஓம்..
***

19 கருத்துகள்:

  1. காலையில் காபி கூட குடிப்பதற்குமுன் கண்ணன் தரிசனம்.  பாண்டுரங்கா...  நன்றி.  கோசாலை  மகிழ்ச்சியளிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கோசாலை வந்தப்புறமாப் போய்ப் பார்த்தது இல்லை. அருமையான விளக்கங்கள். பாண்டுரங்கனின் திவ்ய தரிசனமும் விளக்கமும் அருமையாக இருக்கிறது. அக்காரக்கனியின் குரல் மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. தஞ்சை வந்து விட்டீர்களா ஐயா
    நலம்தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      நான் தஞ்சைக்குத் திரும்பி மூன்று மாதங்கள் ஆகின்றன..
      ஆயினும் தங்களைச் சந்திக்க இயலாத நிலை..

      விரைவில் வருகின்றேன்..
      தங்கள் அன்பும் வருகையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. படங்கள் மிக அழகு. நீங்கள் பாண்டுரங்கனை தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறீர்கள், வாட்ஸாப்பில் விட்டலன் பற்றி செய்தி. What a coincidence!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தாங்கள் சொல்வது போல - இப்படியான உடன் நிகழ்வுகள் நிறைய நடந்துள்ளன..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பாண்டுரங்கனின் தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பாண்டுரங்கனின் திவ்யதரிசனம் உங்களால் எங்களுக்கும். கோசாலா அனுபவங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நேற்றைய பதிவும் பார்த்துவிட்டேன் துரை அண்ணா.

    இந்தக் கோயில் பகுதி தெரியும் என்றாலும் சென்றதில்லை. இங்கு தங்கள் உறவினர்கள் குடியிருப்பதாக என் உறவினர் சொல்லியிருக்கிறார். படங்கள் அத்தனையும் அருமை, அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கோவிந்தபுரம் மிகவும் அமைதியான வட்டாரமாகத் தெரிகின்றது.

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கோசாலையின் நுழைவு வாயில் ஆஹா!!! என்ன அழகான ஒரு கற்பனையின் தோன்றியிருக்கும் வடிவம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோசாலையின் நுழைவு வாயிலில் நுழைந்ததும் மனம் நெகிழ்ந்து விட்டது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  10. கோசாலை அருமை.
    படங்கள் எல்லாம் அருமை.

    காணொளி பாண்டு ரங்கன் தரிசனம் மிக அருமை.
    கண்ணன் துயர் தீர்க்க வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    ஸ்ரீ கிருஷ்ணனின் நல்லருளால் உலகம் நலம் பெறட்டும்..

    வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..