நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 07, 2022

தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகங் கொண்ட
மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து... (4/17)

தேவாரத்தில் திருநாவுக்கரசு ஸ்வாமிகளின் திருவாக்கு இது..

பொன் பொருளுக்கு மன்னனாகத் திகழ்ந்த குபேரனைத் தாக்கி அவனிடம் இருந்த புட்பக விமானம் முதலான அனைத்துச் செல்வங்களையும் கைப் பற்றிக் கொண்ட இருள் மனத்தினன் ஆகிய இராவணனுக்கு சந்திர காந்தம் எனும் வாளுடன் ஆயுளையும் ஈந்த எம்பெருமான்!..
..

எல்லாவற்றையும் பறி கொடுத்த குபேரன் தனக்கு வந்துற்ற இடரில் இருந்து மீள்வதற்காக தலங்கள் தோறும் சிவ வழிபாடு செய்தான்..

இங்கே தஞ்சையம்பதிக்கு வந்து குபேரன் வழிபாடு செய்த நேரம் மிகவும் நல்ல நேரமாக அமைந்து விட்டது.

ஈசன் எம்பெருமான் அருள் கனிந்து நின்று - குபேரன் இழந்த செல்வங்களை மீண்டும் அவனுக்கு வாரி வழங்கினார்.. அத்துடன் வட திசைக்கு அதிபதியாகவும் தேவ பொக்கிஷத்துக்கு அதிபதியாகவும் ஆக்கி அருளினார்..
அந்த நன்னாள் தான் ஐப்பசி அமாவாசை...

இப்படியான தலபுராணம் இத்திருக்கோயிலுக்கு..


இறைவன்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ ஆனந்தவல்லி

தீர்த்தம்
வெண்ணாறு
தலவிருட்சம்
வில்வம், வன்னி..






தஞ்சமாபுரியின் முதல் சிவாலயம் இதுதான்..
சித்தர் ஸ்ரீ சிவவாக்கியர் இங்கு தவம் செய்திருக்கின்றார் என்பது கூடுதல் சிறப்பு..
பராந்தக சோழரின் திருப்பணி..

மேற்கு நோக்கியுள்ள திருக்கோயில்..

இத்திருக்கோயிலுக்கு
இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் 
திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு
நேற்று ( தை  24 ஞாயிற்றுக்கிழமை)
யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில் காலை 8.55 மணிக்கு கடங்கள் புறப்பாடு ஆகின..









தொடர்ந்து வேத மந்த்ர தேவார திருவாசகப் பண்ணிசையுடன் 9:35 மணியளவில் வானில் ஏழெட்டு கருட பட்சிகள் வலம் செய்திருக்க ராஜ கோபுர, ஸ்ரீ விமானங்களின் திருக்கலசங்களுக்கு  நன்னீராட்டு நிகழ்ந்தது..







தீ நுண் கிருமி பரவல் காரணத்தால் மக்களிடையே அதிகமாக அறிவிப்பு செய்யப்பட வில்லை.. எனினும் மக்கள் பெருந் திரளாக வந்திருந்தனர்.. 

இறையன்பர்களாலும் 
தஞ்சை ஷீர்டி ஸ்ரீ சாய்பாபா திருக்கோயில் சார்பாகவும் சித்ரான்ன  விநியோகம் சிறப்பாக நடந்தது..

தஞ்சை - கும்பகோணம் பிரதான சாலையில் அமைந்துள்ள கோயில் என்பதால் எப்போதுமே போக்குவரத்து நெருக்கடியான பகுதி..

இந்தத் திருவிழா நேரத்தில் மாநகரின் காவல் துறையினர் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்..
எல்லா நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடந்தன..
 


கு
ம்பாபிஷேகத்திற்கு முந்தைய நாட்களில் யாகசாலை மற்றும் விமானங்களின் மின்னொளி அலங்காரங்களை மட்டும் என்னால் பதிவு செய்ய இயலவில்லை.. 

மற்றபடி,
நிகழ்வுகளை இயன்ற வரைக்கும் பதிவில் தந்திருக்கின்றேன்.. மேலும் படங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வர இருக்கின்றன..


இவ்வேளையில்
நல்லவர் யாவரும் நலம் பெற்று வாழ்வதற்கு அம்மையப்பன் அருள் புரிவார்களாக!..

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே.. 4/11
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

22 கருத்துகள்:

  1. தன்னிடமிருந்து செல்வம் புஷ்பகவிமானம் அனைத்தையும் பறித்துக் கொண்ட ராவணனுக்கு இறைவன் மேலும் ஒரு வாளையும் ஆயுளையும் கொடுக்கும்போது குபேரன் மனம் எப்படி இருந்திருக்கும்!

    பதிவும் படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      நானும் இதையே நினைத்தேன்.. இன்றைய நடப்பும் அப்படித் தானே இருக்கின்றது..

      ஆனாலும், இராவணன் அதனை உணர்ந்தான் இல்லை.. அதனால் தான் அவன் மருள் மனத்தினன் ஆகின்றான்..

      கலந்துரையாடலைத் தொடர்வோம்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. குபேரனை வடதிசைக்கு அதிபதியாக நியமித்திருக்காரே! அதோடு ராவணனும் சிவபக்தி மிகுந்தவன் என்பதால் அவன் தகுதிக்கு ஏற்ப வாளைக் கொடுத்திருக்கார். ஆனாலும் அவன் மாறினான் இல்லை. :(

      நீக்கு
    3. அதானே!..

      சந்திரஹாசம் எனும் வாள், கூடுதல் வாழ்நாள் எல்லாம் கிடைத்தும் அவன் தன்னை உணர்ந்து கொள்ளவில்லை

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  2. தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. பதிவு வழி சொன்ன தகவல்களும் பகிர்ந்துகொண்ட படங்களும் சிறப்பு. தொடரட்டும் தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. குபேரன் இறைவனின் அருள் பெற்ற திருத்தலமாகிய இக்கோவிலின் கும்பாபிஷேக படங்கள் அனைத்தும் கண்களுக்கு நிறைவாக உள்ளன. இறைவன் இறைவியை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். மேலும் தாங்கள் தரும் இறை தரிசன படங்கள் பற்றிய பகிர்வை காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் உற்சாகம்..

      வாருங்கள்.. வாய்ப்பு கிடைக்கும் போது இங்கு வந்து தரிசனம் செய்யுங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தகவல்களும் படங்களும் சிறப்பாக இருக்கிறது துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோ.

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வு. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நேற்று குடமுழுக்கு நடைபெற்ற செய்தியை மேற்கோளுடன் விக்கிப்பீடியாவில் இக்கோயிலைப் பற்றிய கட்டுரையில் தற்போது இணைத்துள்ளேன். தகவலுக்காக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது பணி சிறப்பு..
      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  8. குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றதை அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  9. குடமுழுக்கு சிறப்பாக நடந்து இருக்கிறது. உங்கள் படங்கள் எல்லாம் அருமை.
    நேரில் பார்த்த உணர்வு.
    இந்த கோயில் பார்த்து இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. தாங்கள் இக்கோயிலுக்கு வந்திருப்பது அறிந்து இன்மும் மகிழ்ச்சி..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..