நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 21, 2019

தைப்பூச தரிசனம் 1

இன்று தைப் பூச நன்னாள்...

பன்னெடுங்காலமாக தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடி மகிழ்ந்த திருநாட்களுள் இதுவும் ஒன்று...

பழைமையை மறவாமல் இன்றளவும்
பூச நட்சத்திரத்தை அனுசரித்து சிவாலயங்கள் தோறும் 
திருவிழாக்களும் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றாலும் -

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூச நிகழ்வுகள் பிரசித்தமானவை...

ஈசன் எம்பெருமானுக்குரிய நாளாக இருப்பினும்
அறுமுகச் செவ்வேளின் திருக்கோயில்களிலும் தைப்பூசம்
வெகு சிறப்பாக நிகழ்வுறுகின்றது...

வழக்கம் போல நண்பர்கள் அனுப்பியுள்ள படங்களுள்
தேர்ந்தெடுக்கப்பட்டவை இன்றைய பதிவில்!...

உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்..

தைப்பூசத் திருவிழா
திருப்பரங்குன்றம்..




தைப்பூசத் திருவிழா
திரு ஆவினன்குடி - பழனி..





தைப்பூசத் திருவிழா
மதுரையம்பதி..





தைப்பூசத் திருவிழா
திரு ஐயாறு..


காவிரி - பூசப் படித்துறையில் ஆரத்தி..
தைப்பூசத் திருவிழா
திருவிடைமருதூர்..



பொழிலவன் புயலவன் புயல் இயக்கும்
தொழிலவன் துயரவன் துயர் அகற்றும்
கழலவன் கரியுரி போர்த்து உகந்த
எழிலவன் வளநகர் இடை மருதே.. (1/110) 
-: திருஞானசம்பந்தர் :- 



கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினொடு
இலையுடை படையவன் இடமிடை மருதே.. (1/121) 
-: திருஞானசம்பந்தர் :-



பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.. (5/15) 
-: திருநாவுக்கரசர் :- 



வண்ட னைந்தன வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.. (5/15) 
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
*** 

18 கருத்துகள்:

  1. இனிய தைப்பூசத்திருவிழா காட்சிகளை தரிசித்தேன் நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. குட்மார்னிங். தைப்பூசத்திருநாள் படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. "தைப்பூசத் திருநாளிலே.." என்றொரு சுசீலாம்மா பாடிய பாடல் உண்டு. அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தைப்பூசத் திருநாளில் தமிழெடுத்துப் பாடுவோம்... - என்ற , சீர்காழியாரின் பாடலும் நினைவுக்கு வரணுமே!....

      நீக்கு
  4. தைப்பூசத் திருநாள் படங்கள் அருமை.

    பொழிலவன் புயலவன் புயலியக்கும்
    தொழிலவன் துயரவன் துயரகற்றும்
    கழலவன் கரியுரி போர்த்துகந்த
    எழிலவன் வளநக ரிடைமருதே - திருவிடைமருதூரின் பெயர் இடைமருதூர். அப்படீன்னா கடை மருதூர்னு ஒரு தலம்/இடம் இருக்கணுமே. மருதூர் என்றொரு இடமும் இருக்கணும்.

    பாடலில், 'துயரவன், துயர் அகற்றும் கழலவன்' என்பது கவனிக்கத் தகுந்தது. நமக்கு நன்மை தீமை எல்லாவற்றையும் தருபவன் அவனே என்பது அர்த்தம்.

    சகஸ்ரநாமத்தில், 'பயக்ருத் பய நாசன' என்று வரும். பயத்தை உண்டாக்குபவனும் அவனே, பயத்தைப் போக்குபவனும் அவனே என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      துயரவன்..
      துயரகற்றும் கழல் அவன்...
      எனக்கு மிகவும் பிடித்த திருப்பதிகம்...

      தங்களது வினாவிற்கு
      ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் பதில் கூறி இருக்கிறார்கள்..

      திருப்புடைமருதூர் - நெல்லை மாவட்டத்தில் தான் உள்ளது...

      நீக்கு
  5. மொத்தம் மூன்று மருதூர்.

    ஸ்ரீசைலம் மல்லிகாஅருச்சுனம் (வடக்கே)
    திருப்புடைமருதூர் புடாஅர்ச்சுனம் (தெற்கே)
    திருவிடைமருதூர் மத்தியாஅர்ச்சுனம்.(மத்தி)
    அர்ச்சுனம் என்றால் மருத மரம்.

    பதிலளிநீக்கு
  6. திருப்புடைமருதூர் கடை மருதூர்

    பதிலளிநீக்கு
  7. தைபூச நாளில் அருமையான தரிசனம் ஆச்சு.
    முருகன் தரிசனம் கிடைத்தது மனதுக்கு நிறைவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான தரிசனம் ...

    பதிலளிநீக்கு
  9. தைப்பூசத் திருநாள் படங்கள் அருமை தரிசனம் எல்லாம் கிடைக்கப்பெற்றோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஆஆவ்வ்வ் நேற்று நினைச்சேன்.. எப்போ தைப்பூசம் என... இன்று எங்களிடத்தில் மஞ்சம் இழுப்பார்கள்... அதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய மஞ்சமாம் தெரியுமோ...
    அழகிய தரிசனம்... வணங்கிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. பழனி பூசத்திருநாள் காட்சிகள் தொலைக்காட்சி தயவில் பார்க்கக் கிடைத்தது. படங்கள், செய்தி விபரங்கள் அனைத்தும் அருமை. மருதூர் பற்றிய தகவல் பகிர இருந்தேன். கோமதி அரசுவின் பதிலைக் கண்டதும் அ.வ.சி.

    பதிலளிநீக்கு
  12. திருப்புடைமருதூர் சுவாமி பேர்தான் என் மாமியாரின் அப்பா பேர்.
    நாறும்பூநாதன்.
    எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா பேர் வைத்தவர்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
  13. படங்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  14. தைப்பூச நாளில் தலைநகரில் இருந்தபடியே இத்தனை ஊர் முருகனை தரிசிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..