நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 24, 2019

விருந்தினர் பக்கம் 02

நெல்லைத் தமிழனின்
தேசாந்திரக் குறிப்புகள்..

புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில்..
ஃஃஃ

இந்தக் கோயில் என் தரிசன லிஸ்டில் இல்லாதது.

தஞ்சைப் பெரிய கோவிலில் ஓரிரு மணிநேரங்கள் செலவழித்தபிறகு, கும்பகோணத்தை நோக்கித் திரும்புவதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். 

பெருவுடையார் ஆலயத்தை ஓரளவு பார்த்த பிறகு, ராஜராஜ சோழனின் பெயர் வருகின்ற கல்வெட்டையும் இந்த முறை பார்த்து படம் எடுத்துக்கொண்டேன். 

இருந்தாலும் புராதமான பெயர் பெற்ற அவனது மெய்கீர்த்தி உள்ள கல்வெட்டு எது என்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. கல்வெட்டைப் படிக்கத் தெரியாதது ஒரு காரணம்.  

ராஜராஜ சோழன் காலத்தில்தான் வட்ட எழுத்தை மாற்றி தமிழில் கல்வெட்டு வர ஆரம்பித்ததாகப் படித்திருக்கிறேன். அதுவுமே நாம் நேரடியாகப் படிக்கும்படி இல்லை.

இதைப் பற்றி யோசித்துக்கொண்டே, மனைவியுடன் வளாகத்தைவிட்டு வெளியே வரும்போது, சுற்றுலாத்துறை விவரங்களுக்கான ஒரு சிறிய வாகனத்தைப் பார்த்தேன். (வாகனமே அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது).

அங்கிருந்தவருடன் பேச ஆரம்பித்ததும், அவர் பெயர் ராஜா என்பதும்,
மிகவும் புகழ் வாய்ந்த கைடு என்பதும் தெரியவந்தது.

அவர் மிகவும் சகஜமாக நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னது மட்டுமன்றி அவர் என்ன என்ன பணிகள் செய்கிறார் என்றும், பணத்தைவிட அவருக்கு சோழர் கட்டிடக் கலையின் மாண்பின் மீது இருந்த ஆர்வமே இந்தப் பணியைச் செய்யத் தூண்டுகோலாக இருக்கிறது என்று சொன்னதும், எனக்கு ஆர்வம் எழக் காரணமாக இருந்தது.

அவர் என்னிடம், கும்பகோணம் செல்லும் வழியில் புள்ளமங்கை என்றொரு தலம் இருக்கிறது, அது இப்போது திறந்திருக்காவிட்டாலும் அங்குள்ள மெய்க்காப்பாளர் உதவியோடு கோயிலைச் சுற்றிப் பாருங்கள், மிக அழகான சிற்பங்களைக் காண்பீர்கள், 1500 வருடப் பழமையானது - என்று சொன்னார். 

அவரிடம் வாங்கிய காலண்டரில் அந்தக் கோயிலின் சிற்பங்கள் ஒரு பக்கத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதைக் காண்பித்தார்.

அவருடைய ஆர்வம் என்னையும் தொற்றிக்கொண்டது. போகும் வழியில் புள்ளமங்கை கோவிலுக்குச் செல்வது என்று முடிவு செய்தேன்.

ஆனால் அந்த இடத்துக்குச் செல்வது சுலபமாக இல்லை. கும்பகோணம் தஞ்சைப் பகுதிகளில் ஏகப்பட்ட கோயில்கள்.

முன்னம் காலத்தில் புள்ளமங்கை என்று வழங்கப்பட்ட இடம், பிறகு ஆலந்துறை என்று பெயர் மாறி, தற்காலத்தில் பசுபதி கோவில் என்று அழைக்கப்படுகிறது.

அங்கேயே பசுபதீஸ்வரர் கோயில் ஒன்றும், புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயிலும் உள்ளது. இரண்டும் ஒரே ஊரில் இருந்தாலும் இரண்டு வெவ்வேறு திசைகளில் அமைந்திருக்கிறது.

இரண்டுமே பாடல் பெற்ற திருத்தலங்கள்.  

நாங்கள் புள்ளமங்கை கோவிலுக்கு நிறைய கிராமப் பாதைகளைத் தாண்டி, நிறையபேரைக் கேட்டுக்கொண்டே சென்றோம்..


கோயிலை 3 ½ மணிக்கு வந்தடைந்து, மெய்க்காவலருக்காக சிறிது நேரம் காத்திருந்தோம். கோவில் திறக்க நேரமாகும், ஆனால் கோயிலைச் சுற்றிப் பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை என்று சொன்னார்.

நான் அங்கு சென்றது சிற்பங்களைப் பார்க்க..
பிறகுதான் அதன் சிறப்பு தெரிந்தது.


மூலக் கோயில் சிறியதுதான். இது சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தில் ஏழாவது தலம்.

இந்தத் தலம், பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய விடத்தை இறைவன் அமுது செய்த தலம் என்பது ஐதீகம்.

பிரம்மா இவரைத் தொழுது தனது சாபத்தைப் போக்கிய இடம் என்பதால் இறைவன், பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமத்தைக் கொண்டுள்ளான்.  



கர்ப்பக்கிரகம் அகழி அமைப்புடையதாம். கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடைய கோவில். நான் கர்ப்பக்ருஹத்துக்குச் செல்ல முடியவில்லை.



கோயிலின் வெளிப்பக்கத்தில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன. சில மிகத் தெளிவாக இருக்கிறது.


இங்குள்ள இறைவனை சம்பந்தர் பாடியிருக்கிறார்.  சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.  தேவாரத்தில் உள்ள பத்துப் பாடல்களில், ஒரு பாடல்,

மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவான்னிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே.. (1/18)

இமவான் மகளாகிய பார்வதிதேவியின் கணவனும், இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறவித் துயர் நீக்குபவனும் ஆகிய சிவபெருமானது இடமும் கலைகள் அறிந்த அறிவார்ந்த மறையவர்கள் தொழுதேத்தி வழிபடுவதும் பொழில் சூழ்ந்து அலைகளோடு வரும் காவிரிக் கரையில் (குடமுருட்டிஆறு)
உள்ள புள்ளமங்கை என்று சொல்லப்படும் ஆலந்துறை என்னும் கோயில்
இதுவே ஆகும்..


***
இப்பதிவின் தொடர்ச்சி
(27/1) ஞாயிறன்று வெளியாகும்...

நலம் வாழ்க 
ஃஃஃ

57 கருத்துகள்:

  1. Good Morning. சற்றே நீண்ட கட்டுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நீண்ட கட்டுரையா?!!!!! படங்கள் தானே இடையில் இருக்கு. (ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நீளமா எழுதும் என்னைப் போன்றவர்களுக்கு இது சிறியதாகத்தான் தெரியுமோ!!! ஹிஹிஹிஹிஹி)

      கீதா

      நீக்கு
    2. வாங்க ஶ்ரீராம். இந்தக் கோவிலைப் பற்றி விவரங்கள் தரணும்கிற எண்ணம்தான். துரை செல்வராஜு சார் படங்கள் தெளிவா இருக்கும்படி பெரியதா நல்லா வெளியிட்டிருக்கார்.

      நீக்கு
    3. வாங்க கீதா ரங்கன். நான் நிறைய படங்களுடன் கொஞ்சம் வள வளன்னு எழுதியிருந்தேன். துரை சார் ரெண்டா பிரிச்சு வெளியிடறார்.

      பொதுவா பெரிய இடுகையா இருந்தா படிக்கறது கஷ்டம். நிறைய தளத்துக்குப் போறவங்களுக்கு இன்னும் சிரம்மா இருக்கும்.

      நீக்கு
    4. நீண்ட கட்டுரை இல்லைதான். முதலில் அப்படித் தோன்றியது!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா வழமையை விட சின்ன போஸ்ட் .. ஸ்ரீராம் கண்ணுக்கு பெரிசா தெரிஞ்சிருக்கே என நானும் நினைச்சேன் :).. ரொம்ப ரயேட்டா இருக்கிறார் போலும்.. அப்படியான அல்லது உடம்பு நலமில்லாமல் இருந்தாலும் எனக்கும் சிலசமயம் இப்படித்தான் தோன்றும்..

      நீக்கு
    6. அதிரா.... விருந்தும் மருந்தும் மூணு நாள்தான். இதுல அலைச்சலும் சேர்ந்ததாலயும் கிளைமேட் மாறுதல், வழக்கத்தைவிட சீக்கிரமாக எழுந்து பிரயாணப்படுவது போன்ற பல காரணங்களாயிருக்கும்.

      நீங்க உங்க ஊர்ல (ஈழத்தில்) கோவில்கள் எப்படி இருக்கும்னு எழுதியிருக்கீங்களா? (மலரும் நினைவுகள்)

      நீக்கு
    7. அது கனடா போய் வந்து படத்தோடு போட்டேனெல்லோ.. இனி ஊருக்குப் போய் வந்தால்தான் படத்தோடு போட விருப்பம்..

      ஏனெனில் புளொக் இல்லாத காலத்தில் எடுத்த கோயில் படங்களுக்கும்:), புளொக் இருக்கு அங்கு போடோணும் என நினைச்சு எடுக்கும் படங்களுக்கும் வித்தியாசம் உண்டெல்லோ?:).. ஹா ஹா ஹா.

      நீக்கு
    8. கனடாக்கு போயிட்டு வந்து நீங்க போட்ட படத்தில் எனக்கு பிரம்மாண்டமான நீச்சல் குளம் (பிளாஸ்டிக் தொட்டி மாதிரி) மட்டும்தான் ஞாபகம் இருக்கு. ஹா ஹா

      நீக்கு
  2. ஆலந்துறையும் புள்ளமங்கையும் ஒரே இடம்தானா? அவர் சொன்ன கோவில் இதுதானா? இரண்டாவது கோவில் எது? அங்கு சென்றீர்களா? இந்தக் கோவில் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் ஒரே ஊர்தான். தற்போது ஆலந்துரையும் இல்லை புள்ள மங்கையும் இல்லை. ஊர் பேர் பசுபதி கோவில்.

      கும்பகோணத்துல ஒரு பத்து நாளாவது தங்கினாத்தான் எல்லாக் கோவில்களையும் நல்லா தரிசிக்க முடியும்

      நீக்கு
    2. இரண்டாவது கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. நான் மட்டும் அறநிலையத் துறை அல்அலது சுற்மைறுலாத் துறை அமைச்சரா இருந்தால்.. என்ற எண்ணம் வந்தது. ஹா ஹா

      நீக்கு
  3. பொருத்தமான படங்கள். கல்வெட்டுத் தமிழ் படிக்க என் உறவில் ஒரு (ஒன்று விட்ட!) மாமா இருக்கிறார். கர்ப்பகிரஹ தகவல் சுவாரஸ்யம். சந்தர்ப்பம் அமையும்போது சென்று பார்க்க வேண்டிய கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம்.. திருவானைக்கா ஜம்புகேசுவர்ர் கோவிலையும் பார்க்கத் தவறாதீங்க. கர்ப்பக் க்ரஹத்தில் தண்ணீர் இருக்கும்.

      நீக்கு
    2. கல்வெட்டு படிப்பது பெரிய திறமை. அது தெரியாமல ராஜராஜன் கல்வெட்டை தஞ்சை பெரியகோவிலில் தேடி கண்டுபிடித்தேன். கற்றுக் கொள்வது ரொம்ப கஷ்டமல்ல. ஆனால் அர்த்தம் புரிய நல்ல அனுபவமும் திறமையும் வேண்டும்

      நீக்கு
    3. திருவானைக்கா கோவில் இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    4. அதைப் பார்த்ததற்கு ப்ரூஃப், பார்த்தசாரதி ஹோட்டல் நெய் தோசை சாப்பிட்டு இடுகை போட்டிருக்கீங்களா (போட்டிருக்கீங்கன்னு ஞாபகம்).

      நீக்கு
    5. ஹா... ஹா... ஹா...


      அப்படி எனக்கு நினைவில்லை. என்றாலும் உங்கள் பதிலின் உட்பொருளில் கோவில் சமாச்சாரங்கள் நான் குறைவாகத்தான் பகிர்கிறேன் நெல்லை. எனக்கு இப்போது பெரிய அளவில் பக்தி எதுவும் கிடையாது. அதற்காக இறைவன் மேல் மறுப்போ கோபமோவும் கிடையாது!

      நீக்கு
    6. ஸ்ரீராம்... அந்தப் பொருளில் நான் சொல்லவில்லை. பொதுவா ஜனரஞ்சக பத்திரிகையில், கோவில் என்பது ஊறுகாய் அளவில்தான் வரும். நம் எல்லோர் வாழ்விலும் அப்படித்தான். நீங்க எழுதும்போது இண்டெரெஸ்டிங் ஆக ஜனரஞ்சகமாக எழுதுவீங்க. படிக்க நல்லாருக்கும்.

      'பக்தி' என்பதற்கும் அளவுகோல் கிடையாது. ஒருத்தருக்கு 'பக்தி' ஜாஸ்தி, அதுனால எப்போதும் கோவில்லதான் இருப்பார் என்றெல்லாம் கிடையாது.

      நீக்கு
  4. கோவில் பற்றிய ஒவ்வொரு தகவலும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனபாலன். கோவில், தமிழனின் கலைப் படைப்பு, தமிழனின் நாகரீகம் என்று பல கோணத்தில் இவற்றை அணுகலாம். நம் நாகரீகத் தொன்மைக்கு வேறு என்ன சான்றுகள் இலக்கியம் கோவில்களைத் தவிர்த்து இருக்கின்றன?

      நீக்கு
  5. புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில் என்ற தலைப்பில் 12 ஜுன் 2015இல் என் தளத்தில் இக்கோயிலைப் பற்றி எழுதியுள்ளேன். தமிழகத்தில் பார்க்கப்படவேண்டிய கோயில்களில் முக்கியமான கோயில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜம்புலிங்கம் சார். இப்போ எனக்கு ஞாபகம் வருது. சிறிய சிற்பங்கள் படம் பேனாவை அருகில் வைத்து போட்டிருந்தீர்களோ?

      நீக்கு
  6. அழகான கோயில் என்று தெரிகிறது. சூப்பராக இருக்கு படங்கள். நெல்லை நீங்கள் தேடிச் சென்ற கோயில் இதுதானா - ஏன்னா நீங்களே பெயர் மாற்றம் எல்லாம் சொல்லியிருக்கீங்க...ரெண்டு கோயில் இருக்குன்னும்..- அதான் கேள்வி.

    இன்னும் சிற்பங்கள் வருமோ? கோயிலின் கர்பகிரக சிறப்பு அறிய முடிந்தது.

    தொடர்கிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். இதுதான் அந்தக் கோவில். சிறியதுதான். ஆனால் சிற்பங்கள், பழைமை, பாடல் பெற்ற தலம் இவற்றிர்க்காக பெயர் பெற்றது

      சிற்பங்கள் வரும்

      நீக்கு
  7. குடமுருட்டி ஆறு படம் வருமா நெல்லை?!

    எனக்கு நதிகள், இயற்கை, சிற்பம் பார்க்க ரொம்பப் பிடிக்கும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்க செல்லவில்லை. இயற்கைக் காட்சிகளை ஒரு இடுகையா அனுப்பறேன். தளத்திற்கும் பொருத்தம் என்று தோன்றினால் துரை செல்வராஜு சார் வெளியிடுவார்

      நீக்கு
  8. உள்ளூர் டிராவல். மாலை வருகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான படங்கள் ...ஒரு புதிய கோவிலும் , இடமும் ..

    சிறப்பா இருக்கு தமிழன் சார் ..தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அனுராதா ப்ரேம்குமார். உங்களுக்காக ஒரு தகவல். கும்பகோணம் ஆண்டவன் ஆஸ்ரமத்தில் தங்கினால், நடை தூரத்தில், சார்ங்கபாணி (கோவில் பின்பக்க வாசல் 50 அடி தூரம்தான்), சக்ரபாணி, அதன் பிறகு ராஜகோபாலஸ்வாமி கோவில், தசாவதார கோவில், அந்த சந்துல நடந்தால் கடைசியில் திருமழிசை திருவரசு, அதன் பக்கத்தில் நடக்கும் தூரத்தில் வராக கோவில், கொஞ்சம் நடந்து கும்பேசுவரர், பிறகு ராமஸ்வாமி கோவில், திரும்பி ஆஸ்ரமம் வரும் வழியில் கடைத்தெரு ஆஞ்சநேயர் என்று எல்லாக் கோவில்களையும் நடந்தே தரிசனம் செய்துவிட முடியும்.

      நீக்கு
    2. குறித்து வைத்துக் கொள்கிறேன் சார்..

      கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் இந்த தகவல்கள் நாங்கள் செல்லும் போது பயன்படுத்திக் கொள்கிறோம்.. ..

      நீக்கு
  10. நாங்கள் பார்த்து இருக்கிறோம். அப்போது காமிரா எல்லாம் எடுத்து போவது இல்லை, அலைபேசியும் கிடையாது அதனால் கொண்டு போகவில்லை.என் கணவர் குறிப்பு எழுதி வைத்து இருப்பார்கள். பார்க்க வேண்டும்.

    நீங்கள் அழகாய் படம் எடுத்து எழுதி இருக்கிறீர்கள்.
    கோவில் திறந்து பார்க்கவில்லையா?
    வெளிபக்கம் மட்டும் பார்த்து வந்து விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... கோவில் திறந்திருந்தார்கள், ஆனால் பூசாரிலாம் இல்லை (அவங்க இன்னும் 1 மணி நேரம் கழித்து வருவார்கள்).

      அந்த கைடு சொன்னதுனாலதான் இந்தக் கோவிலுக்குச் சென்றேன். நிறைய படங்கள் எடுத்தேன்.

      கும்பகோணத்தில் தங்கிக்கொண்டு, மதிய உணவாக கலந்த சாதம், தண்ணீர் எடுத்துக்கொண்டு கிளம்பினால் ஒரு நாளையில் 15 பாடல் பெற்ற தலங்கள் தரிசித்துவிடலாம்.

      நீக்கு
  11. புள்ளமங்கை/ஆலந்துறை கோயில் செல்லவில்லை. அப்போது என் பாதயாத்திரைப் பயணம் இவ்வழி இல்லாததால் போக முடியவில்லை. உங்கள் படங்கள் விவரணங்கள் எல்லாம் அருமை. உதவியாகவும் இருக்கும் நான் திட்டமிடும் போது. மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார்... ஏன் பாதயாத்திரையாகப் போனீங்க? அப்படி பாதயாத்திரையா போகும்போது கோவில்களை கவர் செய்வது கஷ்டம். ரோட்டின் இரு புறத்திலும் ஓரிரு கிலோமீட்டர்கள் நடக்கணும்.

      ஆட்டோ எடுத்துக்கொண்டால் பல கோவில்களை (பாடல் பெற்ற சிவத் தலங்கள், வைணவத் தலங்களை) ஒரு நாளில் சேவித்துவிட முடியும்.

      விரைவில் திட்டமிடுங்கள். (நானும் சேர்ந்துகொள்வேன், அக்காவும் (?) வந்தால்)

      நீக்கு
  12. துரை செல்வராஜு சார்... இரண்டாகப் பிரித்து வெளியிடத் தீர்மானித்தது நல்லதுதான். படங்களும் நல்லா வெளியிட்டிருக்கீங்க. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //இந்த கோயில் என் தரிசன லிஸ்டில் இல்லாதது//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இந்த வசனம் இங்கு தேவை இல்லாதது:)..

    எதிர்பாரா தரிசனம் கிடைத்து மகிழ்ந்த இடம் எனச் சொல்லியிருக்கலா..ம் ..மோ... மே..:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா... நான் பொதுவா ஓரளவு திட்டமிட்டுத்தான் எங்கயும் செல்வேன். அவர் சொல்லியிருக்காவிட்டால், இந்த அருமையான கோவிலை நான் மிஸ் செய்திருப்பேன்.

      நீக்கு
  14. அந்த ஹைட் ராஜாவின் ஃபோன் நம்பரை வாங்கி வந்து அதையும் போடோணுமாக்கும்:)).. கட்டுரை எழுதச் சொலிக் குடுக்க வேண்டிக்கிடக்கே புள்ளமங்கை அம்பாளே!!:).

    1500 வருடம் பழமையானதோ அவ்வ்வ்வ்வ் மீ அப்போ பிறக்கவே இல்லை.. ஹையோ ட்ரக் மாறப்பார்க்குதே.. அதிரா இது கோயில் பதிவு பிளீஸ்ஸ் கொன்றோல் யுவ செல்ஃப்:)).. ஓகே ஓகே:).. வெரி சோரி.

    புள்ளமங்கை எனப் பெயர் வரக் காரணம் அறிய முடியவில்லையோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய பிஸினஸ் கார்டு, படம் இங்க போடலாம்னு நினைத்து பின்பு தவிர்த்துவிட்டேன் (அவர்கிட்ட கேட்கணும் என்பதால்).

      ஆனால் ஒரு எனெர்ஜெடிக் பெர்சனாலிட்டியை சந்தித்த மகிழ்ச்சி.

      அரசாங்கம், அவரை ரஷ்யன் மொழியையும் கற்றுக்கோங்க என்று சொல்லி ஒரு நாளுக்கு இவ்வளவு ஸ்டைஃபண்ட் கொடுக்கப் பார்க்குது. அவருக்குத்தான் ஸ்பானிஷ், ப்ரஞ்ச் போன்ற பல மொழிகளுக்கு மேல், இனி ரஷ்யன் மொழி கற்க நேரமும் ஆர்வமும் இல்லை என்றார்.

      வெளிநாட்டிலிருந்து பிரயாணத்துக்கு தமிழகம் வருவதற்கு முன்னாலேயே அவருடைய நாட்களை புக் பண்ணிவிடுவார்களாம் (வருபவர்கள் 15 நாள் சுற்றுலா போறாங்கன்னா, இவரும் அவர்களோடு செல்வாராம், இவருக்கு தனி அறை புக் பண்ணிடணும், ஒரு நாளுக்கு இவ்வளவு என்று பணமும் உண்டு). அவர் சொன்னார், 'பணம் என்ன சார் பணம்... எனக்கு நம் கலைப் பொக்கிஷங்களை விளக்கிச் சொல்லி, நானும் மகிழ்ந்து பிறரையும் அந்த அனுபவம் பெறச் செய்யறதுலதான் மகிழ்ச்சி என்றார்.

      நான் அவரிடம் ஆர்வமாக அரை மணிக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தேன்.

      நீக்கு
    2. அதனை பதிவில் குறிப்பிடவில்லை.

      அந்தக் கோவில் கோபுரங்களில் கழுகு (பருந்து) இருந்தது. அதனால் இந்தப் பெயர்க்காரணம். இப்போவும் இருக்கிறது என்றார்கள். 'புள்' என்றால் பறவை என்று நான் டமில்ல டி வாங்கினவங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.

      ஆலந்துறை என்பதற்கு ஆலமரம் தல விருட்சமாக இருந்ததால், ஆலந்துறை சிவபெருமான் என்று அழைக்கப்பட்டாராம்.

      நீக்கு
    3. 'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ அப்போ பிறக்கவில்லை' என்றெல்லாம் எழுதவேண்டாம். சமீபத்தில்தான் நாடி ஜோசியத்தைப் பற்றி படித்திருப்பீர்களே (எ.பியில்). முன் ஜென்மத்தில் நீங்கள் இங்கு பிறந்திருக்கலாம் இல்லையா? (யார் கண்டது.... நீங்கள் சோழ தேசத்து ராணியாகவும் இருந்திருக்கலாம்..... ஐஸ் வைத்தது போதுமா?)

      நீக்கு
    4. ஹா ஹா ஹா எனக்கு இன்னொன்றும் வாயில வருது ஆனா ஜொள்ளப் பயமாக் கிடக்கூ இருந்தாலும் சொல்லிடறேன்ன்ன்.. ஒருவேளை அந்த மங்கையா:) கக்கூட இருந்திருப்பேனோ.. ஹா ஹா ஹா.. ஆண்டவா புள்ள மங்கை அம்மாள் அதிராவை மன்னித்து ஆசீர்வதிப்பாவாக....

      நீக்கு
    5. புள் எண்டால் புள்ளட்டில் பாதி:)) ஹையோ பறவை என்பது இப்போதானே தெரியும்:)).. அந்த வகுப்புக்கு அன்று மீ அப்செண்ட்:))

      நீக்கு
    6. அது 'புல்லட்' இல்லையோ.... ஏஞ்சலின் இந்தத் தளத்துக்கு வராததுனால நீங்க தப்பிச்சிட்டீங்க. நானும் போனாப் போகுதுன்னு விட்டுடறேன்.

      புள்ளமங்கையா? வருது வருது... அந்தப் புகைப்படமும் அடுத்த பகுதியில் வருது.

      நீக்கு
    7. ஆவ்வ்வ்வ்வ் புள்ளமங்கை உருவம் பத்ரகாளிபோல இருப்பாவோ ஹையோ ஆண்டவா பீஸ்ஸ்ஸ் சேவ்வ் மீஈஈஈஈஈஈஈஈஈ:))

      நீக்கு
  15. மிக அழகிய கோயில், கற்கோயில்போல இருக்கு.. பழமையை அப்படியே பேணுகிறார்கள்.. பராமரிப்புத்தான் போதாது போலும்.. என்ன பண்ணுவது மனிதர்களில் ஏழை பணக்காரர் என்பது போல கடவுள்களிலும் இருக்கிறதே...

    புதுக் கோயில்களில் டக்கு டக்கென அங்காங்கு சிலைகள் உடைந்திருக்கும்.. பராமரிப்பு இல்லாது விட்டால்..

    இது ஒரு சிலைகூட எந்தப் பாதிப்பும் இல்லாமல் 1500 வருடத்திலும் அப்படியே இருக்கிறதே.. அற்புதம்.. அவ்ளோ ஒரிஜினல் கல் கட்டிடம்..

    ஓ இதிலும் தொடர்ச்சியோ அவ்வ்வ்வ்வ்வ்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கையில் உள்ள சிவன் கோவில்லாம் கல் கட்டிடம் கிடையாதா?

      தமிழக கோவில்களில் மாற்று மதத்தவரின் படையெடுப்பின்போது கோவில் சிலைகள் உடைக்கப்பட்டன. அதன் சுவடுகளை பெரும்பான்மையான கோவில்களில் காணலாம்.

      பராமரிப்பு என்பது அரசினால் சாத்தியமல்ல. உள்ளூர் மக்கள், மாதம் ஒரு தடவை என்று உழவாரப் பணி (செடிகளைப் பிடுங்குவது போன்று) செய்தால்தான் முடியும்.

      என்ன இப்படி 'கடவுளர்களில் ஏழை பணக்காரர்'னு சொல்லிட்டீங்க? திருப்பதில 100 கோடி வருமானம் வந்தால், அந்தக் கடவுளுக்கு என்ன? அந்த அந்த ஊர் மக்கள் புலம் பெயர்வதால்தான் உள்ளூர் மக்களால் கோவில் நிரம்பிவழிவதில்லை.

      நன்றி உங்கள் வருகைக்கு.

      நீக்கு
    2. கொழும்பில் இருக்கும் கொச்சிக்கடை சிவன்கோயில் மற்றும் புத்தளத்தில் இருக்கும் கோயில் எல்லாம் கற் கோயில்கள்தான்.. இந்தக் கற்கோயில்களில் ஒரு பிரச்சனை என்னவெனில்.. உள்பகுதி கறுப்பாக இருப்பதால்.. உள் மண்டபத்துள் நிற்கும்போது குகைக்குள் நிற்கும் ஃபீலிங் வரும்.. லைட் இல்லை எனில் அவ்ளோதான்.

      திருப்பதியில் கடவுளுக்கென்ன என சிம்பிளாச் சொல்லிட்டீங்க... எனக்கு நாடி நடுங்குகிறது.. விரல்கள் நறுநறுக்கிறது. மீசை துடிக்கிறது.. சரி ஒரு ஃபுளோல வந்திட்டுது விட்டிடுங்கோ:)..

      வருமானத்தைப் பொறுத்துத்தானே.. நகைகள் ஆடை ஆபரணங்கள்.. மக்கள் கூட்டம்.. கோயில் அழகுபடுத்துதல் அத்தனை சிறப்பும் கோயிலுக்கு கிடைக்கிறது.

      இப்படிக் கோயிலுக்கு, அச்சிறப்பு இருக்காதே.. கழுத்தில ஒரு வைர அட்டியல் போட்டு அழகு பார்க்க முடியுமோ திருப்பதியைப்போல... அதேபோல மக்கள் வெள்ளமும் பெரிசா இருக்காதே... அப்போ ஏழைக்கேத்த எள்ளுருண்டைதானே.. கடவுளுக்கு என்ன தெரியும் எனச் சொல்லிடாதீங்க... கல்லானாலும், அதில் நாம் உயிருள்ள ஒருவராகத்தானே கடவுளைப் பார்க்கிறோம்ம்..

      நீக்கு
    3. பணக்காரனுக்குப் பிறந்த குழந்தைக்கு நிறைய நகை, பட்டுப் புடவைகள் போட்டு, தலை சீவி அழகுபார்ப்பார்கள். அதே குழந்தை சாதாரண இடத்தில் பிறந்திருந்தால், எளிமையான உடைகளே இருக்கும். குழந்தை குழந்தைதானே. பார்க்கும் நம் மனதில்தானே வித்தியாசமான சிந்தனைகள் தோன்றுகின்றன.

      ஆனா, நீங்க வேறு ஒரு கோணத்தில் பார்த்தீங்கன்னா, அவ்வளவாக ஆள் அரவமற்ற கோவில்களில் வெகு நிம்மதியான தரிசனம் கிடைக்கும். நான் இந்த முறை அத்தகைய பல கோவில்களுக்குச் செல்லும் வாய்ப்பு இறைவன் அருளால் கிடைத்தது.

      "மக்கள் கூட்டம்' என்று நீங்க சொல்லியிருப்பதால், அதற்காக இப்போது பல கோவில்களிலும் இதற்காக 'இந்த சன்னிதி இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும்' (வேறு என்ன, குழந்தை, தம்பதி ஒற்றுமை, திருமணம், நல்ல வாழ்க்கை, இந்த கிரகப் பிரச்சனைக்குத் தீர்வு என்றுதான்) என்று அவர்கள் மார்கெடிங் வேறு செய்கின்றனர்.

      இறைவன் ஒருவனே என்ற எண்ணம் நம் மனதில் இருக்கும்போது வேறு என்ன வேண்டும்?

      நீக்கு
  16. சிற்பங்கள் காணவே அங்கே செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. முடிந்தால் அடுத்த பயணத்தில் செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். நிறைய கோவில்கள் சிற்பச் சிறப்புடையனவாக இருக்கின்றன. சட் என என் நினைவுக்கு வருபவை, நெல்லை கிருஷ்ணாபுரம் வெங்கடேசப் பெருமாள் கோவில் (ரொம்ப புகழ் பெற்ற சிற்பங்கள்), நவ திருப்பதியில் ஸ்ரீவைகுண்டம், கும்பகோணம் இராமஸ்வாமி கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் என்று பல கோவில்கள் இருக்கின்றன.

      ஆனால், ஒவ்வொரு கோவிலையும் பல மணி நேரம் நிதானமாகப் பார்த்து ரசிக்கும்போதுதான் சிற்பங்களின் மேன்மை புரிபடும்.

      நீக்கு
  17. நான் புள்ளம் பூதம் குடி என்று நினைத்துவிட்டேன்.
    அதுதான் ஜடாயு மோக்ஷ இடம். .
    புள்ளமங்கை என்ற பசுபதி கோவில் சிறியதாக அழகாக இருக்கிறது.
    ராமஸ்வாமி கோவில் எங்கள் எல்லோருக்கும் மிகப் பிடித்த
    கோவில்.

    நிறைய எழுதுங்கள் முரளி. படங்கள் அத்தனையும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிமா. இந்தத் தடவையும் நாங்க திருபுள்ளம்பூதங்குடியில் புன்னை மரம் சூழ்ந்த கர்ப்பக்ரஹத்தில் வல்வில் ராமரை தரிசனம் செய்தோம். அது ஜடாயு மோக்‌ஷ ஸ்தலம்தான்.

      ரங்கநாதனை திரு ஆதனூரில் சேவித்த பிறகு, புள்ளம்பூதங்குடியில் வல்வில் ராமர் பிறகு திருமண்டங்குடியில் தொண்டரடிப்பொடியாழ்வார் கோவில் என்று எங்கள் பயணம் தொடர்ந்தது.

      இன்னொன்று வல்லிம்மா... கஜேந்திர மோக்‌ஷம் நடந்த இடம் என்று கபிஸ்தலத்தைச் சொல்லுவோம். நெல்லையில் அத்தாழநல்லூர் கஜேந்திர வரதர் திருக்கோவிலையும், கஜேந்திர மோக்‌ஷம் நடந்த இடம் என்று சொல்கிறார்கள்.

      நீக்கு
  18. நானும் புள்ளப்பூதங்குடினு நினைச்சேன். புள்ளமங்கை போனதில்லை. அடுத்த முறை கும்பகோணப் பயணத்தில் இந்தக் கோயிலைக் குறித்துக் கொள்கிறேன். அருமையாகத் தகவல்கள் சேகரித்திருப்பதோடு உங்கள் அதிர்ஷ்டம் ஒரு நல்ல வழிகாட்டியும் கிடைச்சிருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா சாம்பசிவம் மேடம்...

      வழிகாட்டியைப் பார்த்தது, அதிர்ஷ்டம்தான். நான் அந்தக் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று இருக்கிறது. அதனால் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..