நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக இன்றும் கருடசேவைக் காட்சிகள்..
ஆதியில் பராசர மகரிஷியும் மார்க்கண்டேயரும் பின்னர் திருமங்கை ஆழ்வாரும் தரிசனம் செய்த கருட வாகனத் திருக்காட்சியை
ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வாழ்ந்த மகான் ஒருவர் கண்ணாரக் கண்டு மகிழ்ந்திருக்கின்றார்.. அவர் பன்னிரண்டு கோயில்களை இணைத்து இவ்விழாவைத் தொடங்கி வைத்ததால் ஸ்ரீ துவாதச கருடாழ்வார் தாசர் எனப்பட்டார்.. அந்த மகான் வகுத்த வழியில் இந்நாளில் இவ்விழா சிறப்பாக நடைபெறுகின்றது..
ஒரே நாளில் இருபத்து நான்கு கருட தரிசனமும் சடாரி சூட்டப்படுவதும் எத்தனை எத்தனை புண்ணியம்!..
நம் நாட்டில் இது போன்ற நிகழ்வு வேறு எங்கும் இல்லை..
தமிழகத்தில் தஞ்சை மாநகரில் தான் இருபத்து நான்கு கருடசேவை எனும் வைபவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..
இதன் கீழ் வரும் காட்சிகளை வழங்கியவர் திரு. தஞ்சை விஜய்.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
















