நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை
பொதுவாக சிவாலயங்களின் திருவிழா மரபுகள் எப்படி இருப்பினும் கந்த சஷ்டிக்கு அடுத்த நாள் முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நிகழ்கின்றது..
அந்த வகையில் இன்றைய
திருப்புகழ்..
இப்பாடலின் தொடக்கத்தில் தேவகுஞ்சரியும் நிறைவில் வள்ளி நாயகியும் குறிப்பிடப்படுகின்றனர்..
திருமகள் உலாவும் இருபுயமு ராரி
திருமருக நாமப் ... பெருமாள் காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் ... பெருமாள் காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் ...... பெருமாள் காண்
மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் ... பெருமாள் காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் ... பெருமாள் காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் ... பெருமாள் காண்
இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் ... பெருமாள் காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி
கௌமாரம்
நாளும் ஒலிப்பேழையில் 
கேட்டு மகிழ்கின்ற பாடல் இது.
ஓம் சிவ சுப்ரமண்யாய
**



திருப்புகழ் பாடல் பகிர்வு பொருத்தம். இன்று எல்லா கோயில்களிலும் நடைபெறும். படங்கள் அருமை.
பதிலளிநீக்குதங்களுக்கு நல்வரவு
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
வேண்டுதலும் மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்
குமரா... குருபரா... செந்தில் வேலா...
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
முருகா சரணம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. முருகனின் கல்யாண வைபோக திருப்புகழை பாடி மகிழ்ந்தேன். அன்னைகள் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ முருகப் பெருமான் அனைவரையும் கனிவுடன் காத்து ரட்சிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன் முருகா சரணம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் வருகையும்
நீக்குஅன்பின் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்
முருகனின் திருக்கல்யாண நாளில் அருமையான பாடல் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபாடி முருகனை வணங்கிக் கொண்டோம்.
கதிர்காமப் பெருமாளையும் நினைவு கூர்கிறது பாடல். நன்றி.
முருகன் சகல நலன்களையும் அனைவருக்கும் அருள வேண்டுகிறோம்.
ஓம் முருகா சரணம்.
எல்லாம் முருகன் செயல்.,
நீக்குதங்கள் வருகையும்
அன்பின் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்