நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
மூன்றாம்
சனிக்கிழமை
இன்று
கோடிஹத்தி
ஸ்ரீ ஸ்ரீ நிவாசப்பெருமாள் தரிசனம்..
வானமுட்டிப் பெருமாள் எனப்படுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்..
தாயார் ஸ்ரீ மகாலக்ஷ்மி..
நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்..
பிப்பல மகரிஷிக்கு தரிசனம்.. அவர் பெயரால் தீர்த்தம்.. அருகில் காவிரிக் கரை.
அத்தி மரத்தில் தோன்றிய பெருமாள் - சங்கு, சக்கரம், கதை, வரத அபய ஹஸ்தங்களுடன் பதினாறு அடி உயரம் கொண்டு பிரமாண்டமாகக் காட்சி தருகின்றார்..
எனவே தான்
வானமுட்டிப் பெருமாள் என, செல்லப்பெயர்..
தொன்மையான பெயர் - கோடி ஹத்தி விமோசனப் பெருமாள் என்பதாகும்..
கோடி ஹத்தி என்ற திருப்பெயரே இன்றைக்கு கோழி குத்தி என்றாகி விட்டது..
மன்னன் ஒருவனின் குஷ்ட நோயைத் தீர்த்து அருளியதாக ஐதீகம்..
புராதன கோயில் முற்றிலும் சிதைந்து விட தஞ்சை மராட்டிய மன்னர் காலத்தில் கோயில் மீண்டும் உருவாகியிருக்கின்றது..
அத்தி மரத்தில் திருவடிவம்..
அத்தி மரத்தின் வேர்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகச் சொல்கின்றனர்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்த கோயிலுக்கு மானியங்கள் அளித்து, திருக்கோயில் பணிகள் செய்ததற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன..
(நன்றி விக்கி)
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வானதிராஜபுரம் செல்லும் பேருந்துகள் கோயில் வழியாக செல்கின்றன..
கடந்த வருடங்களில்
மயிலாடுதுறைக்கு
சில முறை
சென்றிருந்தும் இங்கு தரிசனம் செய்யும் பேறு
இன்னமும் கிடைக்கவில்லை..
பெருமாளே சரணம்
-::-
ஓம் ஹரி ஓம்
நமோ ஸ்ரீநிவாசாய
**
ஒவ்வொரு இடத்தையும் நான் தான் பார்க்கவில்லை என்று சொல்லுவேன். இந்த தலத்தை நீங்களே பார்க்கவில்லை என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஇந்தத் தலத்தை இன்னமும் தரிசிக்கவில்லை....
நீக்குசூழ்நிலையை தனிப்பதிவாகத் தருவதற்கு முயற்சிக்கின்றேன்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..
வெகு காலம் கும்பாபிஷேகம் ஆகாமல் இருந்த போதும் கும்பாபிஷேகம் ஆகி மக்கள் கூட்டம் வந்த போது அடிக்கடி போய் இருக்கிறோம். வானமுட்டி பெருமாளை பார்த்து கொண்டே இருக்கலாம், அவ்வளவு அழகு.
பதிலளிநீக்குபெருமாளை தரிசனம் செய்து கொண்டேன். நன்றி.
வெகு காலம் கழித்து கும்பாபிஷேகம் நடந்த கோயில்..
நீக்குஅப்போது தான் இந்தக் கோயிலைப் பற்றித் தெரியும்..
அந்தத் தகவல்களையே சொல்லி இருக்கிறேன்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா..
கோடிஹத்தி ஸ்ரீநீவாசப் பெருமாள் தரிசித்துக் கொண்டோம்.
பதிலளிநீக்குவரலாறும் கண்டோம்.
நமோ நாராயணா.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா..