நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வியாழக்கிழமை
சஷ்டி இரண்டாம் நாள்
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே..15
கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே.. 21
கந்தரனுபூதி
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த ... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த ... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் ... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நன்றி கௌமாரம்
ஓம் சிவ சுப்ரமண்யாய
**


சஷ்டி இரண்டாம் நாளில் அழகிய முருகன் படங்களுடன் திருப்புகழும் கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகந்த சஷ்டி இரண்டாம் நாள் பகிர்வு அருமை. கந்தரனுபூதி, திருப்புகழ் பாடல்களும், அழகான முருகன் படங்களும் பார்க்கவே, இனிமை. நேற்று வர இயலாமல் தாமதமாகி விட்டது. இனி தொடர்ந்து வருகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நேரம் இருக்கின்ற போது வாருங்கள்..
நீக்குதங்கள் அன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்