நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 14, 2023

கரும்பின் மொழி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சோபகிருது தமிழ்ப்புத்தாண்டு
சித்திரை முதல் நாள்
  வெள்ளிக்கிழமை


- வருட வெண்பா -
சோபகிருது தன்னில் தொல்லுலகு எல்லாம் செழிக்கும்
கோபம் அகன்று குணம் பெருகும் - சோபனங்கள்
உண்டாகும் மாரி பொழியாமற் பெய்யும் எல்லாம் 
உண்டாகும் என்றே உரை..
- இடைக்காட்டுச்சித்தர் -
- நன்றி தினமலர் -

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

விநாயகப்பெருமானின் திருத்தோற்றங்கள் முப்பத்திரண்டு.. 

அவற்றுள் 
பாலகணபதியாக திருத்தோற்றம் நல்கும் போது
பெருமானுடைய நான்கு திருக்கரங்களிலும் மா, வாழை, கரும்பு, பலா ஆகியவற்றுடன் ஐந்தாம் திருக்கரமாகிய துதிக்கையில்  மோதகம் விளங்கும்..

இப்படி நிறைவளம், மகிழ்ச்சி  இவற்றின் அடையாளங்களுடன் - திகழும் ஸ்ரீ பால கணபதி  அனைவரையும் காத்தருள வேண்டுமென
புத்தாண்டு நன்நாளில்
பிரார்த்தித்துக் கொள்வோம்...
 

மனோ ரூப இக்ஷு கோதண்டா (மனதைக் குறிக்கும் கரும்பு வில்லை ஏந்தியவளே!..) என்பது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்..

மன்மதனின் கையில் இருக்கும் கரும்பு வில் ஏகப் பிரசித்தம்..

கரும்பிற்கு இக்ஷூ என்று சமஸ்கிருதத்தில் பெயர்..


கரும்பும் செந்நெல்லும் கதலியும் கமுகும் தெங்கும் தென்பனையும் செழுமையின் அடையாளங்கள்..

கன்னல் என்ற சொல் பழந்தமிழில் - கரும்பு, சர்க்கரை, பாகு, கற்கண்டு என்றெல்லாம் பயின்று வருகின்றது..

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று - என்பது திருவாசகம்..

இது இப்படியிருக்க,

ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய் .. 206

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்கார நறு நெய் பாலால்.. 208

கன்னல் இலட்டுகத்தோடு சீடை கார் எள்ளில் உண்டை
 கலத்திலிட்டு.. - 210

- என்பதெல்லாம் பெரியாழ்வார் தம் திருமொழிகள்..

நூறு தடா நிறைந்த  அக்கார அடிசில் சொன்னேன்.. (592)
- என்கின்றாள் கோதை நாச்சியார்..

இதற்கு மேலும் கன்னல் அக்காரம் பற்றிய குறிப்புகள்
திவ்யப்ரபந்தத்தில் இருக்கலாம்..

திருப்புகழில் - 
இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை பருப்புடன் நெய்,எள் பொரி..
- என, பெரியதொரு படையலை விநாயகருக்கு சமர்ப்பிக்கின்றார் அருணகிரி நாதர்.. 

இக்கு (இக்ஷூ) என கரும்பும் சர்க்கரையும் - திருப்புகழில் குறிப்பிடப்படுகின்றன..

அபிராமிபட்டர் அந்தாதியில்,
தனுக் கரும்பு, கரும்பு வில் என்றெல்லாம் கரும்பைப் பற்றிப் பேசுகின்றார்..

நலம் வாழ
நாமும் பேசுவோம்!..

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
***

21 கருத்துகள்:

  1. வாழ்த்துகளுக்கு நன்றி.  இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    அழகான விளக்கங்களோடு இனிமையான பதிவு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      நலம் வாழ்க..

      நீக்கு
  2. ராமனின் வம்சம் இக்ஷுவாகு வம்சம் என்பார்கள்.  கரும்புக்கு அதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா, தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஆராய்ச்சியில் இறங்க வில்லை..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. பாலகணபதி... சமீபத்தில் தரிசித்தவர் இப்படி இருக்கிறாரா பார்க்கிறேன்.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

      அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. அருமையான பதிவு.
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
    கரும்பு வில்லை ஏந்தியவள் அனைத்து நலன்களையும் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      நலம் வாழ்க..

      நீக்கு
  5. பதில்கள்
    1. மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      நலம் வாழ்க..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    நல்ல அருமையான பதிவு. தங்களுக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    கரும்பை போல இனிக்கிறது பதிவு. விபரங்கள் அறிந்து கொண்டேன். உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      நலம் வாழ்க..

      நீக்கு
  7. துரை அண்ணா இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    கரும்பின் இனிய மொழி நல்ல விளக்கங்களுடன் இனிதாய் புத்தாண்டுடன் மலர்ந்திருக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
      வாழ்க நலம்..

      நீக்கு
  8. கரும்பைப் பற்றிய விபரங்கள் அருமை

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  9. இனிப்பான கரும்பைப் பற்றிய இனிப்பான செய்திகள் அனைத்தும் அருமை. நல்லதொரு தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க..

      நீக்கு
  10. சித்திரை புத்தாண்டில் நல்ல பகிர்வு . அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

      அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  11. ஓ, இந்தப் பாசுரங்களா? இவை படித்தவையே!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..