நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 26, 2023

முதல் பாட்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை
மாசி 14
   ஞாயிற்றுக்கிழமை


வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு
பயமில்லை
குகனுண்டு
குறைவில்லை மனமே
குகனுண்டு
குறைவில்லை மனமே


கவிஞர் வாலி அவர்களது முதல் பாட்டு..

அஞ்சல் அட்டை வழியே T.M.சௌந்தரராஜன் அவர்களிடம் சென்று சேர்ந்த பாட்டு..

T.M.சௌந்தரராஜன் அவர்களே மெட்டமைத்துப் பாடிய பாட்டு..

நமது தந்தையும் தாயும் கேட்டு மகிழ்ந்த பாட்டு..

நாமும் எத்தனையோ முறை கேட்டு மெய்மறந்த பாட்டு..

நமது சந்ததியரும் கேட்டு மகிழ இருக்கும் பாட்டு..

காலமெல்லாம் கந்தன் காலடியில் கனிந்திருக்கும் பாட்டு..


காணொளியை
வலையேற்றியவர்க்கு நன்றி..
*

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே (கற்பனை என்றாலும்)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே..
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே..

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே..
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே..

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்!..
**

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு
பயமில்லை!..
***

10 கருத்துகள்:

  1. வாலி அவர்களின் பேட்டி அற்புதம். அவர் எப்படி முருகபக்தராக மாறினார் என்று தெரிந்து கொண்டேன்.

    இந்த பாடல் மிக அருமையான பாடல். முருகன் அற்புதமாக எழுத வைத்து இருக்கிறார். உருக்கமாக பாடி டி.எம். செளந்திரராஜன் அவர்கள். நம்மையும் உருக வைத்துவிட்டார்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான பாடல்.
    பாடலுக்கான பின்புல காணொளியும் கண்டேன்

    பதிலளிநீக்கு
  3. 1950களில் இந்தப் பாடலை எழுதினார். நல்ல நேரம் 64ல்தான் வந்தது. எதற்கும் ஒரு காலம் உண்டு

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அருமையான என் உள்ளம் கவர்ந்த பாடல் இது.. கேட்ட நாள் முதல் இதைப் பாடாத நாளில்லை எனலாம். பாடலை மனமுருக இயற்றிய திரு. வாலி அவர்களையும், இசையமைத்து அருமையாக உளமுருக பாடிய திரு. டி. எம். எஸ் அவர்களையும் எவ்வளவு போற்றினாலும் தகும். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. இந்த பாடல் சிறு வயதில் பல தடவை கேட்டிருக்கிறேன் . அற்புதமான பாடல் .
    இங்கு பகிர்ந்ததில் கேட்கிறேன் .நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வாலி - மதன் - உரையாடலை மிகவும் ரசித்தேன்.
    பாடல் அற்புதமான அழகான கருத்துள்ள பாடல். மிகவும் ரசிக்கும் பாடல் இப்பவும் ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பாடல். கேட்டு ரசித்த பாடலும்.....

    பதிலளிநீக்கு
  8. வாலி எழுதிய புத்தகம் ஒன்றில் படித்திருக்கிறேன். பாடல் அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான பாடல். வாலி எழுதிய பாடல் என்பதும் அதன் பின்னணியும் இன்றே அறிந்து கொண்டேன். கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல். அதுவும் டிஎம் எஸ்ஸின் குரலில்! _/\_

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..