நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 11, 2019

காளி வந்தாள்

ஸ்ரீ கோடியம்மன்  
காளி வந்தாள் எங்கள் காளி வந்தாள் - கொடு
வினை பொடியாகிடக் காளி வந்தாள்..

நீலி வந்தாள் திரிசூலி வந்தாள் - நெஞ்சம்
ஆனந்தம் பாடிடத் தேடி வந்தாள்...




நீதிதனை நிலை நாட்டி வந்தாள் - நோய்
நொடி பகை தனையே ஓட்டி வந்தாள்...

ஏழை முகந்தனைக் காண வந்தாள் -அவள்
எளியவர் நலந்தனைப் பேண வந்தாள்... 




பவள நிறம் எங்கும் திகழ வந்தாள் - அவள்
பாசமும் நேசமும் தவழ வந்தாள்...

பசுமை வளம் எங்கும் விளங்க வந்தாள் - அவள்
பங்கயக் கண்விழி மலர்ந்து வந்தாள்...




மலரினும் மெல்லிய மங்கையர் பணிய - மலர்
முகங்காட்டி மகிழ்ந்து வந்தாள்..

மாநிலம் காக்கப் போர்முகங் காட்டும் - காளையர்
தோள்களில் திகழ்ந்து வந்தாள்...




அடியவர் இல்லத்தில் அமுது செய்ய - அவள்
அடியவர் சூழ நடந்து வந்தாள்..

அடியவர் தமக்கு அமுதளிக்க - அவள்
ஆலயந் தனையே கடந்து வந்தாள்...



ஸ்ரீ சூலப் பிடாரி அம்மன்
சூழ்ந்திடும் தொல்வினை தனையழிக்கும் - அவள்
சூட்சுமம் தனைத் தான் யாரறிவார்...

அவளன்றி கதியில்லை என்றிருக்கும் - அவள்
அடியவர் தானே தானறிவார்..

தஞ்சை ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயிலில்
தை மாதம் மூன்றாவது வாரத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய காளியாட்ட வைபவம் பல்வேறு நிகழ்வுகளுடன் ஞாயிறன்று பால்குட வைபவத்துடன் நிறைவு பெற்றது...



ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்ற வைபவம்..

தஞ்சை மாவட்டத்தில் இன்னும் கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, சீர்காழி வட்டாரங்களில் காளியாட்டம் நடைபெற்றாலும்
பச்சை பவளம் என இரண்டு வடிவாக விளையாடி வருவது
தஞ்சை மாநகரில் தான்...

படங்கள் அனைத்தையும் வழங்கியவர் 
தஞ்சை ஞானசேகரன் அவர்கள்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

அவளன்றி ஓரணுவும் அசைவதேயில்லை...
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

25 கருத்துகள்:

  1. சூழ்ந்திடும் தொல்வினையை அவள் அழிக்கட்டும். எங்களைக் காக்கட்டும்.

    காலை வணக்கம் துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம்.

    அவளன்றி ஓர் அணுவும் அசையாது.... ஓம் சக்தி ஓம்!

    அழகான படங்கள். காளியின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பாடல் வரிகள் உங்களுடையதா? அருமை துரை செல்வராஜூ ஸார்.

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      பாடல் என்னுடையது தான்..
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. காளி நமைக் காக்கட்டும். அவள் அருள் என்றும் நம்முடன் இருக்கட்டும். அனைத்துப்படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      காளி நம்மைக் காக்கட்டும்....
      நலம் வாழ்க...

      நீக்கு
  5. பச்சைக்காளி, பவளக்காளி மாயவரத்திலும் திருவிழா கடைசியில் இரவு வலம் வருவார்கள்.

    விரதம் இருந்து அந்த முகத்தை அணிவார்கள்.

    காளி தொல்வினைகளை அழிக்கட்டும்.
    நீதியை நிலை நிறுத்த வேண்டும்.
    நீதி, தர்மம் தழைத்தோங்க அருள்புரியவேண்டும்.
    உங்கள் காளி பாடல் மிக அருமை.
    படங்கள் நேரில் பார்த்த உணர்வை தந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கு மகிழ்ச்சி....
      மயிலாடுதுறையிலும் பச்சைக் காளி பவளக்காளி புறப்படுவது அறியாத செய்தி....

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. காளி உலகை காத்தருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அழகான படங்கள் மிக அருமையான பாடல் வரிகளுடன் உங்கள் பாடல் வரிகள் தானே அண்ணா...செமை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்குயும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. இந்த அழகெல்லாம் காணக் கொடுத்ததற்கு மிக மிக நன்றீ மா.
    சமயபுரத்து அம்மாவை நினைக்க வைத்தீர்கள். அருமையான பாடல்.
    எத்தனை விதமான உணவு வகைகள். கண்ணுக்கு விருந்து.
    மிக நன்றி துரை செல்வராஜு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. பச்சைக்காளி, பவளக்காளியாட்டம் கும்பகோணத்திலும் உண்டு. அது வரை சாதாரணமாக இருக்கும் பெண்கள் அந்த முகத்தை அணிந்ததுமே முற்றிலும் மாறி விடுவார்கள். கிட்ட இருந்து பார்த்திருக்கேன். மடத்துத் தெருவில் பச்சைக்காளி, பவளக்காளிக்கு மாரியம்மன் கோயிலில் தனி சந்நிதியும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தாங்கள் குறிப்பிடுவது படைவெட்டி மாரியம்மன்கோயில்..
      நான் தரிசனம் செய்துள்ளேன்...

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. உங்கள் பாடல் அருமையாக உள்ளது. நேற்றே சொல்ல மறந்து விட்டேன்.

      நீக்கு
  11. இதென்ன இது... உண்மையாகவே ஒருவருக்குக் காளி வேசம் போட்டிருக்கோ... படியோடு படையல் பார்க்க நா ஊறுதே... படங்கள் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிராவின் அன்பு வருகைக்கு மகிழ்ச்சி..

      காளியின் திருமுகமானது அத்தி மரத்தில் கடைந்தெடுக்கப்பட்ட்து என்பார்கள்..

      விசேஷ காலத்தில் பரம்பரையாக காளியாட்டம் ஆடுவோர் விரதமிருந்து
      திரு முகம் தரித்து வருவார்கள்..

      மற்ற நாட்களில் பெட்டிக்குள் இருக்கும் திருமுகத்திற்கு பூசனைகள் உண்டு..

      அன்பின் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..