நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 17, 2019

அஞ்சலி..

வலையுலகில் அனைவருக்கும் அறிமுகமான அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் இறைவனுடன் கலந்து விட்டார்..


வலையுலகின் மேன்மைக்குப் பாடுபட்டவர்...
அவரது வலைச்சரத்தில் ஆசிரியப் பணியினை வழங்கி வலைப் பதிவாளர்களை உற்சாகப்படுத்திச் சிறப்பித்தவர்....

தஞ்சையம்பதியையும் அறிந்து வாழ்த்தியதுடன்
எனக்கும் ஆசிரியப் பணி வழங்கி ஊக்கப்படுத்தினார்....

உடல் நலம் குன்றியிருந்த அவர் நேற்று முன் தினம் காலமான செய்தியை எங்கள் பிளாக் வழி அறிந்து மிக வருந்தினேன்...

அவர்தம் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்...

அவரது இழப்பினைத் தாங்கிக் கொள்ளும் வகையினை எல்லாம் வல்ல இறைவனே தந்தருளல் வேண்டும்...

தமிழுக்குத் தொண்டாற்றிய அன்பின் ஐயா அவர்கள் இறைநிழலில் இன்புற்றிருக்க பிரார்த்திப்போம்..

ஓம் சாந்தி ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

 1. சீனா சார் மதுரையில் பள்ளி மாண்வர்களுக்கு உதவிகள் செய்து இருக்கிறார் என்பதை மதுரை சரவணன் அவர்கள் அவர் முகநூலில் பகிர்ந்து கொண்ட செய்தி
  மூலம் அறிந்து கொண்டேன்.

  அவரின் சிரித்தமுகம் நினைவில் இருக்கிறது.
  அவரை இழந்து வாடும் அவர் அன்பு குடும்பத்திற்கு ஆறுதலை இறைவன் அருள் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. சீனா ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
 3. சீனா ஐயா அவர்களுக்கு எங்கல் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் தம் குடும்பத்திற்கும் சுற்றத்திற்கும் நட்புகளுக்கும் ஆறுதல்கள்

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 4. மிகவும் வருத்தமான செய்தி. :(

  அன்பின் சீனா ஐயா அவர்கள் மிகவும் நல்ல மனிதர்.


  அடியேன் இல்லத்திற்கு தன் துணைவியாருடன் அன்புடன் விஜயம் செய்துள்ளார்கள்:

  http://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html
  http://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.html


  என்றும் நம் நினைவுகளில் நீங்காமல் இருப்பார். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 5. அன்னாரின் இழப்பு வலையுலகில் உள்ள அனைவருடைய இழப்பு.

  அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 6. எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 7. சீனா சாரை வைகோ அவர்கள் தான் எங்க வீட்டுக்கும் அழைத்துக் கொண்டு வந்தார்.இரவு ஒன்பது மணி ஆகிவிட்டபடியால் தக்கபடி உபசரிக்கவில்லை. எனினும் மறுபடி ஒரு முறை வருவதாகச் சொன்னார். வரலை! அவர் மறைந்து விட்டார் என்னும் செய்தி அதிர்ச்சியைத் தந்தது. எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 8. ஆழ்ந்த இரங்கல்கள் ,அவரது ஆன்ம சாந்திக்காகவும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர் நட்புகள் அனைவருக்கும் ஆறுதலும் தேறுதலும் தரவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்

  பதிலளிநீக்கு
 9. மிகவும் வருத்தமான நிகழ்வு. வலையுலகுக்கு பேரிழப்பு.. அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..