நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 18, 2019

கல்யாண தரிசனம்

ஸ்ரீ நந்தீசன் - ஸ்ரீ சுயம்பிரகாஷிணி திருக்கல்யாண தரிசனம் -
இன்றைய பதிவில்...

திருமழபாடி திருக்கோயில் 

ஸ்ரீ ஐயாறப்பரும் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியும் நந்தீசனுடன் திருமழபாடிக்குப் புறப்பட்டபோது -

திருப்பழனத்தார்கள் பலவிதமான பழவகைகளை மனம் கனிந்து வழங்கியதாகவும்

திருச்சோற்றுத்துறையினர் அறுசுவை விருந்தினைக் கவனித்துக் கொண்டதாகவும்

திருவேதிக்குடியினர் வேத மந்த்ர வைபவங்களை ஏற்றுக் கொண்டதாகவும்

திருக்கண்டியூர் வீரட்டானத்தார்கள் சித்ரான்னங்களை கவனித்துக் கொண்டதாகவும்

திருப்பூந்துருத்தியினர் மலர் அலங்காரங்களில் கவனம் செலுத்தியதாகவும்

திருநெய்த்தானத்தினர் நெய் முதலான திரவியங்களில் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் ஐதீகம்...

இதன் பொருட்டு அவர்களுக்கெல்லாம் நன்றி கூறும் வகைக்கு
சித்திரை விசாகத்தில் சப்த ஸ்தான வைபவம் நிகழ்கின்றது...

புதுப்பொண்ணு மாப்பிள்ளையுடன் பழைய பொண்ணும் மாப்பிள்ளையும்
ஆனந்தமாக ஆறூர் - திரு ஐயாற்றுடன் ஏழூர் - சுற்றி வருகின்றனர்...

அதனை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்..

இதோ திருக்கல்யாண தரிசனம்...

படங்களை வழங்கியோர்
வழக்கம் போல உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
கீழே உள்ள காணொளி எனது மகன் எடுத்தது..


நந்தீசன் திருக்கல்யாண வைபவமும் அதனைத் தொடர்ந்து சப்த ஸ்தான விழாவும் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவதாகச் சொல்கின்றார்கள்...

சென்ற ஆண்டு நந்தீசன் திருக்கல்யாண வைபவத்தையும் சப்த ஸ்தான விழாவினையும் தரிசிக்கும் பேறு பெற்றேன்...

சென்ற ஆண்டின் சப்த ஸ்தான விழாவில் நான் எடுத்த படங்கள் இந்த ஆண்டின் சப்த ஸ்தானத்திற்குள் நமது பதிவில் இடம் பெற்று விடும்...

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயத் துளவ நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கை எம்பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி... 

நந்தீசன் திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

18 கருத்துகள்:

 1. வணக்கம் துரை அண்ணா.

  அழகான படங்கள் நல்ல தரிசனம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. திருமழப்பாடிக்குப் புறப்படும் போது ஒவ்வொரூராரும் ஒவ்வொன்றைக் கவனித்துச் சிறப்பு செய்திருக்கிறார்கள். அருமை

  ஆறூர், திருஐயாற்றுடன் ஏழூர் சுற்றியதை அறிய தொடர்கிறோம்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. உங்கள் படங்களையும் காண ஆவல்..அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்ற வருடம் எடுத்த படங்களை விரைவில் தருகிறேன்..

   நீக்கு
 4. காலையில் சிறப்பான தரிசனம்.

  படங்கள் அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. குட்மார்னிங்.

  காலை சிறப்பான தரிசனம். அழகிய படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. அழகான தரிசனம் காணொளி கண்டேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. பிரதோஷ நாளில் நந்தி பெருமானின் திருக்கலயாண உற்சவம், அபிஷேக, அலங்காரங்கள் தரிசனம் கிடைத்தது மிக மகிழ்ச்சி.

  காணொளி தெரியவில்லை, மீண்டும் தெரியும் போது பார்த்து கருத்து சொல்கிறேன்.
  வாழ்த்துக்கள்.
  நந்தீசன் திருவடிகள் போற்றி போற்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 8. நந்தியெம்பெருமான் திருமணத்தை இந்த ஆண்டு நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றது பெருமையாக உள்ளது. 16 மார்ச் 2019 அன்று மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை விழாவினை நிறைவாகக் கண்டோம். என் வாழ்க்கையின் ஆசைகளில் ஒன்று நிறைவேறிய திருப்தி. நம் உறவினர் வீட்டிலோ, நண்பர் வீட்டிலோ நடைபெறும் திருமணத்தில் கலந்துகொண்டதைப் போல இருந்தது. உங்கள் பகிர்வு மூலமாக தெளிவான புகைப்படங்களைக் கண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. காணொளி அருமையாக எடுத்திருக்கிறார் உங்கள் மகன். படங்களும் வழக்கம் போல் சிறப்பானவை! இன்று இந்தப் படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது மனம் நிறைவாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் போகணும்னு நினைப்புத் தான்! கூட்டம் நினைத்து பயம் வந்து விடும். ஏழூர்ப் பல்லக்கு வைபவமும் காண ஆசை! மனதினால் நினைச்சுக்க வேண்டியது தான்!

  பதிலளிநீக்கு
 10. கண் நிறைந்த தரிசனம் ...

  பதிலளிநீக்கு
 11. நந்தியெம் பெருமானின் திருமண உற்சவ படங்களும், விளக்கங்களும் வெகு சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..