நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 12, 2019

கந்த வடிவேலவன்

இன்று செவ்வாய்க்கிழமை..

வளர்பிறையின் ஆறாம் நாள் - சஷ்டி..
இன்றைய நட்சத்திரம் - கிருத்திகை...

மிக அபூர்வமாகக் கூடிவந்திருக்கும் நாள்...
செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் கிருத்திகையும் இணைந்து நின்று - கந்தவடிவேலனைச் சிந்திக்கவும் வந்திக்கவும் செய்திருக்கின்றன...

ஸ்ரீ செல்வ முத்துக்குமரன்
வைத்தீஸ்வரன் கோயில்..
இன்றைய பொழுதில் செவ்வேள் குமரனைப் போற்றித் துதிக்க
அங்காரகன் மனங்கனிந்து நிற்பான் என்பது திருக்குறிப்பு...

செவ்வாய் தோஷங்கள் விலகவும் அதன் தாக்கம் குறையவும்
குருதிக்குள் கொதித்து நிற்கும் கோபம் குறைந்து
நல்ல குணம் மேவிடவும்
தேவகுஞ்சரி மணாளனை வள்ளியம்மைக் காதலனைக்
கைகூப்பி வணங்கி நிற்போம்...


இன்றைய நாளில் 
தெய்வத்திரு சூலமங்கலம் சகோதரிகள்
பாடியயளித்த அழகான செந்தமிழ்ப் பாடல்..

இப் பாடலை யாத்தவர்
ஸ்ரீமதி சௌந்தராகைலாசம் அம்மையார் அவர்கள்..

1982 ல் சிங்கப்பூரில் இருந்தபோது அங்கே வானொலியில் 

நாளும் நாளும் ஒலிபரப்பப்பட்டு மனதில் பதிந்த பாடல்..

இனிய சந்தமும் இசையும் 

நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்..


சுட்ட திருநீறெடுத்துத் தொட்ட கையில் வேலெடுத்துத்
தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம் - அந்தக் 
கட்டழகு கொண்டதொரு கந்த வடிவேலவனைக் 
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்...

அந்தக் 
கட்டழகு கொண்டதொரு கந்த வடிவேலவனைக் 
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்...


ஆறெழுத்து மந்திரத்துள் ஆடும் ஒரு சுந்தரத்தை
அந்திப் பகல் சிந்தனை செய் நெஞ்சமே...
அந்திப் பகல் சிந்தனை செய் நெஞ்சமே...

அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதிடினும் 
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே...
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே...

சுட்ட திருநீறெடுத்துத் தொட்ட கையில் வேலெடுத்துத்
தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம் - அந்தக் 
கட்டழகு கொண்டதொரு கந்த வடிவேலவனைக் 
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்...


கந்த னடியே நினைந்து சந்தத் தமிழ் மாலை கொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே...
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே...

பரங் குன்று வளர் கின்றதொரு கன்று வழங்கும் நமக்கு
நின்று வளர் செல்வம் பதினாறுமே...
பரங் குன்று வளர் கின்றதொரு கன்று வழங்கும் நமக்கு
நின்று வளர் செல்வம் பதினாறுமே...
நின்று வளர் செல்வம் பதினாறுமே...

சுட்ட திருநீறெடுத்துத் தொட்ட கையில் வேலெடுத்துத்
தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம் - அந்தக் 
கட்டழகு கொண்டதொரு கந்த வடிவேலவனைக் 
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்...
***

ஸ்ரீ சிங்கார வேலவன் - சிக்கல்.. திருஆரூர் (மா)

கந்தா சரணம்.. கடம்பா சரணம்...
கார்த்திகை மைந்தா சரணம்.. சரணம்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

25 கருத்துகள்:

  1. செவ்வாய்க்கிழமை- சஷ்டி - கிருத்திகை----- ஓம் முருகா.. என் அப்பனே... எல்லோரையும் காத்தருள்வாய்!

    குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய நாளிலே என்ன, எனக்கு எப்போதுமே முருகா தான்! நேற்று கூட எப்போதும் போல ஒரு பொருளை காணாமல் எப்போதும் போல தேடு தேடு என்று தேடி, எப்போதும் போல ஒரு கட்டத்தில் முருகா எங்கேப்பா அது? என்று வாய்விட்டுக் கேட்ட அடுத்த நொடி.... எப்போதும் போல உடனே அது என் கண்ணில்பட்டது!

    'செல்வமுத்துக்குமாரன் அவன்...' சீர்காழி குரலில் பாடல் கேட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னின்று காப்பவன் முருகன்....
      சீர்காழி அவர்களின் பல பாடல்களும் பரவசமூட்டுபவை...

      நீக்கு
    2. என் மனதில் பதிந்த பாடலை நீங்க எழுதியிருக்கீங்களே ஶ்ரீராம். எனக்கு முதல் படம் இந்தப் பாடலைத்தான் நினைவுபடுத்தியது

      நீக்கு
  3. சூலமங்கலம் சகோதரிகள் குரலில் அந்தப் பாடலைப் படிக்கையிலேயே அந்த டியூனிலேயே படிக்கிறதே மனசு! சந்த நயம் மிகுந்த பாடல்.. ஆற்றங்கரையோரம் பள்ளம் மேடுகளில் ஏறி இறங்கி கோவிலுக்குச் செல்லும் பரவசம்.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான பகிர்வு. செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை சேர்ந்து வரும் நாளில் விரதங்கள் இருந்த காலமெல்லாம் நினைவில் வருது. இப்போதெல்லாம் விரதம்னு இருக்காவிட்டாலும் ஒரே வேளையாவது உணவு உண்டு கந்தனைத் தியானிக்கும்படி இருக்கிறதேனு சந்தோஷப் பட்டுக்கிறேன். பாடல் பகிர்வுக்கு நன்றி. பரங்குன்றம் போகணும்னு நினைச்சுப் போக முடியலை. இங்கே பார்த்துட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      எந்த வகையிலும் முகம் காட்டுவான் முருகன்....

      மகிழ்ச்சியும் நன்றியும்....

      நீக்கு
  5. பாடலின் காணொளியையும் இணைத்திருப்பீர்கள் என்று நினைத்தேன். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று இரவு பதிவை ஒழுங்கு செய்தேன்... இணையம் தான் சரியில்லையே...விடியற்காலை 3 மணிக்கு எழுந்து காணொளியை இணைக்க முயன்ற போது அது 100 mb க்கு மேலிருப்பதால் Blogger ஏற்றுக் கொள்ளவில்லை..

      நீக்கு
  6. அற்புதமான பாடல் இப்பாடலை கேட்காத ஜீவராசிகளும் உண்டோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. எனக்கு பிடித்த பாடல், நீங்க்ள் குறிப்பிட்டு இருக்கும் பாடல்.
    ஸ்ரீராம் சொன்ன பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒவ்வொரு கிருத்திகையும் போனது நினைவுக்கு வருது.

    இங்கு வந்த பின் பழமுதிர் சோலை போவோம். ஒரு வாரம் முன்பு தான் போய் வந்ததால் அவரை நினைத்து வீட்டில் வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.

    உங்கள் தளத்திலும் வணங்கி கொள்கிறேன்.
    ந்ல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      இன்றைக்கு வைத்தீஸ்வரன் கோயிலில் பெருந்திரளாக மக்கள் கூடி இருப்பார்கள்...

      முருகன் முன்னின்று காக்க...
      வாழ்க நலம்..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஓ இன்று இப்படி ஒரு சிறப்பான நாளோ?

    முருகன் இஷ்ட தெய்வம். எனக்கும் என் மகனுக்கும்.

    இப்போதுதான் தெரிகிறது இப்படியான சிறப்பு நாள் என்பதெல்லாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இந்தப்பாடல் மிகவும் பிடித்த பாடல்...பாடல்வரிகளைப் பார்த்ததுமே பாட்டு நினைவுக்கு வந்துவிட்டது....பாடலைக் கேட்கவும் செய்தேன் துரை அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா கீதா நானும் முருகனைக் கைக்குள்ளதான் போட்டு வச்சிருக்கிறேன்:)... வள்ளியின் நேர்த்திகளைத்தான் இன்னும் முடிக்கல்லியே:).. உண்டியல் நிரம்பட்டும்:)..

      நீக்கு
  11. சூலமங்கலம் சகோதரிகளின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்... அவர்கள் இப்பவும் இருக்கிறார்களோ?

    இன்றையநாள் இனியநாளாக இருக்கின்றது எனக் கேட்டு மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  12. கந்தவேள் என் இஷ்ட தெய்வம், திருப்பதி போல. முன்பெல்லாம் செவ்வாய் கந்த சஷ்டி சொல்லுவேன். இப்போதெல்லாம் சொல்லுவதே இல்லை. வருத்தம்தான்.

    சூலமங்கலத்தின் இந்தப் பாடலைக் கேட்கணும்.

    பதிலளிநீக்கு
  13. முருகப் பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..