நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 10, 2023

தை வெள்ளி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 27
 நான்காவது
வெள்ளிக்கிழமை

அம்பிகையிடம்
பிரார்த்தனை


வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும் மருந்தினுக்கா
வேண்டினும் மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும்
தீமையாம் வழியினில் செல்லாமலும்
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும் வீண்
வம்பு புரியாமலும் மிக்க பெரியோர்கள் சொலும்
வார்த்தை தள்ளாமலும் வெகுளியவை கொள்ளாமலும்
தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத் தமியேனுக்கு
அருள் புரிந்து சர்வ காலமும் எனைக் காத்தருள வேண்டினேன் சலக்கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே!..


பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. 13


தண்ணளிக் கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண் அளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே..15


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள்
வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே.. 21


புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.. 41


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.. 101
-: அபிராமி பட்டர் :-


ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. வாணி ஜெயராம் அஞ்சலியாக என்ன பாடல் இடம்பெற்றிருக்கிறது என்பதை பின்னர் மொபைலில் கேட்க வேண்டும்.  தமிழைப் படித்து சுவைத்தேன்.  அன்னை அபிராமி அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. அபிராமி அந்தாதி பொருளுடன் கூடியது. படங்களுடன் பகிர்வு அருமை

    பதிலளிநீக்கு
  3. வாணிஜெயராமின் பக்திப் பாடல் அருமை

    பதிலளிநீக்கு
  4. வாணி ஜெயராம் பாடல் சிறப்பு.
    இன்றைய தரிசனம் நன்று
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா10 பிப்ரவரி, 2023 12:56

    வாணி ஜெயராம் அவர்களின் பாடல் சிறப்பு.

    ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம் பூத்தாள் நம் எல்லோரினுள்ளும் பூத்து மனமும் உடலும் நலமுடன் இருந்திடட்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அபிராமி 'அன்னையை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே' அனைவரையும் அவள் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. வெள்ளிக்கிழமை தரிசனம் அருமை. அபிராமி பதிகம், அபிராமி அந்தாதி பாடல் பகிர்வும் படங்களும் அருமை.
    வாணிஜெயராம் பாடிய இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..