நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 21, 2022

ஐந்து வீட்டு சுவாமி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
கடந்த 29/8 அன்று
திருச்செந்தூர் - உடன்குடியை அடுத்துள்ள செட்டியாபத்து ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி தரிசனம்..

ஸ்ரீ ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் முதன்மையாய்த் திகழ்கின்ற -

ஸ்ரீ பெரிய சுவாமி 
சந்நிதியைப் பற்றிய விவரங்களுடன் பதிவு தொடர்கின்றது..

இந்தப் பதிவிலுள்ள படங்கள் வலைத் தளத்தில் இருந்து பெறப்பட்டவை..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
***


கழுகுமலையைச் சேர்ந்த வடுகநாதர் பொன்னம்மாள் தம்பதியர் குழந்தைப் பேறு இன்றி வருந்தி - மீனாட்சியம்மனிடம் வரம் கேட்பதற்காக மதுரைக்கு
வருகின்றனர்.. 

அங்கே வைகைக் கரையில்  ஆண் குழந்தை ஒன்று கிடைக்கின்றது.. 

தும்பைச் செடிகளின் அருகில் கிடைத்ததால் தும்பையப்பன் என்று பெயர் சூட்டி அந்தக் குழந்தையை அன்புடன் வளர்த்து வருகின்றனர்..

சில ஆண்டுகள் கழித்து குழந்தையுடன் மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு வந்தபோது கூட்டத்தில் குழந்தையைத் தவற விட்டு விடுகின்றனர்.. அப்போது அந்தக் குழந்தையின் வயது ஏழு..

பெற்றோர்கள் ஒருபுறம்..  பிள்ளை மறுபுறம்.. எங்கு தேடியும் பிள்ளை கிடைக்காததால் வருத்தமடைந்து 
கழுகுமலைக்குத் திரும்பி விடுகின்றனர்.. 

அங்கே கோயில் வாசலில் அழுது கொண்டிருந்த பிள்ளையை மானிட உருவங்கொண்டு வந்து தேற்றுகின்றாள் மீனாட்சி.. 

பெற்றோரைப் பிரிந்திருந்த சிறுவன் அங்கிருந்த கடையில் சிறு சிறு வேலைகளைச் செய்வதும் கோயிலுக்குள் வந்து மீனாட்சியம்மனுடன் பேசியிருப்பதுமாக ஓராண்டு செல்கின்றது.. 

மறு வருடத் திருவிழாவின் போது திருவருள் துணையால் பெற்றோரும்  பிள்ளையும் சந்தித்துக் கொள்ள பேரானந்தமாகின்றது.. ஊருக்குத் திரும்பும் போது,

தன்னுடன் இத்துணை நாள் பேசிக் கொண்டிருந்த அம்மாவிடம் சொல்லி விட்டு வருகின்றேன் என்று கோயிலுக்குள் ஓடி வந்த தும்பையப்பனுக்கு இவ்வளவு நாட்களும் மானுட வடிவங்காட்டி வந்த மீனாட்சி தெய்வத் திருக்கோலம் காட்டியருள்கின்றாள்..

தும்பையப்பனை ஆசீர்வதித்து கண்ணாடி ஒன்றையும் எலுமிச்சம் பழம் ஒன்றையும் கொடுக்கின்றாள்..

கண்ணாடியில் என்றைக்கு முகம் தெரியவில்லையோ எலுமிச்சம் பழம் என்றைக்கு அழுகத் தொடங்குகின்றதோ அன்றைக்கு வந்து என்னைப் பார்.. - என்கின்றாள்..

வருடங்கள் பல ஆகின்றன..
தும்பையப்பர் நாள் தவறாமல் மீனாட்சியை தியானித்து வழிபட்டு வரும் நிலையில் ஒருநாள் கண்ணாடியில் முகம் தெரியவில்லை.. எலுமிச்சம் பழம் அழுகத் தொடங்குகின்றது.. 

புரிந்து கொண்ட தும்பையப்பர் தாய் தந்தையரிடம் விவரம் கூறி விடை பெற்றுக் கொண்டு மதுரைக்கு வருகின்றார்.. 

கோயிலில் அன்னையைத் தேடுகின்றார்.. மீனாட்சி தரிசனம் கிடைக்காததால் மனம் உடைந்து அங்கு நடந்து கொண்டிருந்த யாகத் தீயில் பாய்ந்து விடுகின்றார்.. 

தும்பையப்பரைத் தீயில் இருந்து காப்பாற்றிய மீனாட்சி சில ரகசியங்களையும் ஓம் நமோ ராமானுஜாய எனும் மந்திரத்தையும் உபதேசித்து தென் திசை நோக்கிச் சென்று எங்கே புலியும் மானும் ஒரே துறையில் நீர் அருந்துகின்றதோ அங்கே அமர்ந்து கொள்.. - என்று கட்டளையிடுகின்றாள்.. 
அதன்படி தெற்கே வந்த தும்பையப்பர் உவரிக் கடற்கரையில் ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமியை தரிசனம் செய்து விட்டு அன்னை குறிப்பிட்ட இடத்தைத் தேடி அலைகின்றார்..  

ஓரிடத்தில் அன்னை சொல்லியபடியே புலியும் மானும் ஒரே துறையில் நீர் அருந்துவதைக் காண்கின்றார்.. 

அந்த இடம் தான் இன்றைய செட்டியாபத்து கிராமம்..

அங்கேயே குடி கொண்டு அம்மனை தியானித்து யோக நிலையில் அமர்ந்து துஷ்ட மந்திர சக்திகளை விரட்டியடித்து ஊர் மக்களைக் காப்பாற்றுகின்றார்.. 

காலம் நெருங்கிய வேளையில் முக்தி அடைகின்றார்.... 

ஸ்ரீ பெரிய சுவாமி
அதன் பின் வைணவ அன்பர் ஒருவரது கனவில் தோன்றி அம்மனை வழிபட்டு வரும்படி சொல்கின்றார்.. 

விவரம் அறிந்த ஊர் மக்கள்
மீனாட்சியம்மன் சிலை ஏதும் அங்கே இல்லாததால் திருமுகம் வைத்து ஸ்ரீ பெரிய பிராட்டி அம்மன் என்று வழிபட்டனர்.. 

இதன் பின்
கனவில் வந்து செய்தி சொல்லிய சுவாமிக்கும் கோயில் எழுப்ப முற்பட்டு -

சங்கு சக்கரம் தாங்கி பெரிய வடிவமாகக் கனவில் வந்து காட்சி தந்ததால் அப்படியே திருமேனி செய்து வைத்தனர்... 

மக்களுக்கு உற்ற துணை என விளங்க - ஸ்ரீ பெரியசுவாமி என, வழிவழியாக வணங்கப்படுகின்றார்.


 திருச்செந்தூருக்கு அருகேயுள்ள மேலப் புதுக்குடி ஸ்ரீ ராமசாமி நாடாருக்கும் சிவனனைந்த அம்மையாருக்கும்

 1880அக்டோபர் 2 ல் 
ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

அருணாசலம் எனும் பெயருடன் வளர்ந்த அந்தக் குழந்தை சிறு வயதிலேயே  யோகம் பயின்று ஞானம் அடைந்தது..

தனது ஆயுள் முடிவடையும் நாளை முன்னதாகவே உணர்ந்து உரைத்திருந்தார்..

1906 செப்டம்பர் 5 முதல் 1908 ஜூலை 27 வரை ஏரல் பேரூராட்சியின் தலைவராக இருந்ததால் சேர்மன் அருணாசல சுவாமிகள் எனப்பட்டார்..

தான் உரைத்தபடியே 1908 ஜூலை 28 அன்று ஆடி (13) அமாவாசை நா ளில் பகல் பன்னிரண்டு மணிக்கு ஜோதியானர்..

இவரைப் புத்திரனாகப் பெறுவதற்கு ராமசாமி நாடாரும் சிவனனைந்த அம்மையாரும் இங்கே ஸ்ரீ பெரிய சுவாமி சந்நிதியில் நேர்ந்து கொண்டு ஊர் சுற்றி வரும் சுவாமி அலுப்பு தீர ஓய்வெடுக்க என்று கட்டில் மண்டபம் காணிக்கையாகக் கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள்.

அந்த காணிக்கைக் கட்டில் மண்டபம் - சந்நிதியின் தெற்கு வாசல் பக்கத்தில் இன்றும் சாட்சியாக  விளங்குகின்றது..

அந்தக் கட்டிலில் ஸ்ரீ பெரிய சுவாமி ஓய்வு கொள்கின்றார் என்பதனால் தூப ஆராதனை செய்யப்படுகின்றது.. 

அன்பர்கள் பலவித நேர்ச்சைகளுடன் புதிய விரிப்புகளையும் தலையணை போர்வைகளையும் இங்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்..


ஸ்ரீ பெரிய சுவாமி - ஸ்ரீ பெரிய பிராட்டி அம்மனை பிரதிஷ்டை செய்து வணங்கிய நாள் சித்திரை 18.. 
ஸ்ரீ ஆத்திசுவாமி பிரதிஷ்டை ஆகிய நாள் தை 5.

ஆகவே சித்திரை 18 ல் இருந்து ஆறு நாட்களும் 
ஸ்ரீ ஆத்திசுவாமிக்கு தை 5 ல் இருந்து மூன்று நாட்களும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன..

பின்னாளில் ஸ்ரீ பெரிய சுவாமி கழுகு மலையிலும் சமாதி கொண்டதால் அந்த நாளாகிய சித்திரை 18 அவருக்கும் உரியதாயிற்று..

மீண்டும் அடுத்ததொரு பதிவில்!..

ஐந்து வீட்டு 
சுவாமிகளே 
போற்றி போற்றி!..
***

13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. முற்றிலும் அறியாத புத்தம்புதுத் தகவல்கள். மிகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. தொடரக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
      நன்றியக்கா..

      நீக்கு
  3. எவ்வளவு செய்திகள் அனைத்தும் அருமை.
    நம்பிக்கைகள் வாழவைத்து கொண்டு இருக்கிறது.
    ஐந்து வீட்டு சுவாமிகளே போற்றி போற்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. இந்தக் கோவிலைப்பற்றி இதுவரை அறிந்ததே இல்லை. அங்குள்ள தெய்வங்களின் விபரங்கள் புதிதாக இன்று தங்கள் பதிவின் மூலம். அறிந்து கொண்டேன். இனி திருச்செந்தூர் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தாலும், இல்லை யாராவது உறவுகளுக்கு கிடைத்தாலும் இநதக் கோவிலுக்கு சென்று தரிசித்து வருகிறோம். அதற்கும் அந்த ஐந்து வீட்டு சுவாமிகள் அருள் புரியட்டும். விபரமான பகிர்வுக்கு நன்றி.

    இரண்டு நாட்களாக வலைத்தளம் வர இயலவில்லை. இன்றும் தாமதமாகத்தான் வர முடிந்தது. மன்னிக்கவும்

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதற்கும் அந்த ஐந்து வீட்டு சுவாமிகள் அருள் புரியட்டும்.. //

      நானும் வேண்டிக் கொள்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. சுவாமிகள் கட்டில் படம் அழகாக இருக்கிறது.
    எவ்வள்வு நம்பிக்கை நிகழ்வுகள் அனைத்தும் சுவாரசியம்...

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..