நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 31, 2020

அளந்தான் அடி போற்றி..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
திரு ஓணம்..

அனைவருக்கும்
ஓணத் திருநாள் நல்வாழ்த்துகள்..
 

இறையெம் பெருமான் அருளென்று இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ அறைகழல
சேவடியான் செங்கண் நெடியான் குறலுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால்.. (2280)
-: ஸ்ரீ பூதத்தாழ்வார் :-


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும்  நின் கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர்
எம்பாவாய்... (24)
-: ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-


அறிந்தறிந்து வாமனன டியணைவ ணங்கினால்
செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும் சி றந்திடும்
மறிந்தெழுந்த தெண்டிரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.. (825)
-: திருமழிசையாழ்வார் :-மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா அயதெல்லாம் ஒருங்கு..
-: திருக்குறள் :-

அன்பின்
நல்வாழ்த்துகள்..

ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

4 கருத்துகள்:

 1. திருவோணத் திருநாள் வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 2. சோம்பல் இல்லா தெளிவுடன் பெருவாழ்வு வாழ்வோம்...

  பதிலளிநீக்கு
 3. திருவோணத் திருநாள் வாழ்த்துக்கள்.
  பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பாசுரங்கள். அழகான பதிவு. ஓணத்தை இதைவிடச் சிறப்பாகக் கொண்டாட முடியுமா? நல்ல தரிசனம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..