நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 04, 2020

வலம்புரி வாழ்க..

 

வலம்புரி நாயகனோ
நலம் தருகின்ற தூயவனோ
மடி தரும் தாயவனோ
அடியவர் நடுவினில் சேயவனோ!..

ஐங்கரத்தால் எம்மை
அணைத்திடல் வேண்டும்..
அருள் மழையால்  மண்ணை
நனைத்திடல் வேண்டும்...

கஜமுக நாயகன்
நலம் தருக..
படைமுகம் வென்றிட
துணை வருக..

வருவினை நோய்தனை
 தீர்த்திட வேண்டும்..
திருவருள் கணபதி
காத்திட வேண்டும்..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
அழகான  இரண்டு காணொளிகள்..

இன்னும் சிறிது நேரம்
எடுத்திருக்கக் கூடாதா!..
என்றிருக்கின்றது..

கண்டு மகிழ்க..


தண்ணியக் கண்டா போதும்
கணேசனுக்கு சந்தோஷம் தான்!..

சத்தமாச் சொல்லாதே செல்லம்!..
தடையாணையோட யாரும்
வந்திடப் போறாங்க!..


எங்களுக்கும் தடையாணை
பிடியாணை..ன்னு பிரச்னை
ஏதும் வந்திடுமோ?...
***

நலம் வாழ்க!..
ஃஃஃ

8 கருத்துகள்:

 1. அன்பு துரை இனிய வெள்ளி காலை வணக்கம்.

  விக்ன வினாயகன் அனைவரது குறைகளையும் நீக்கி நல்லருள்
  புரிவான்.
  அவனை நம்பினோர் கைவிடப்ப்டார்.
  காணொளியின் வரும் குட்டி யானையின் பெயர் ஷிவானியாம்.
  அன்னை லக்ஷ்மி.
  தர்மஸ்தலாவில் நாமகரணம் .
  அழகி அவள்.

  பதிலளிநீக்கு
 2. தும்பிக்கையைச் சுருட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பவரும், குட்டி ஆனை விளையாடும் காணொளியும் எனக்கும் வந்தன. அருமைனு சொன்னால் போதாது. அவ்வளவு அழகு. அதுக்குக் கீழே உள்ள பூஸார்கள் புதியவர்கள். அவங்களும் படம் எடுக்க நன்றாக போஸ் கொடுத்திருக்காங்க. குட்டி ஆனை பெயர் ஷிவானினு வல்லி சொல்லி இருக்காங்க. பெயரில் என்ன? அழகு, அழகுதான். விக்ன விநாயகன் அனைவரின் விக்னங்களையும் தீர்க்கட்டும்.

  பதிலளிநீக்கு
 3. குட்டி யானையின் கொண்டாட்டம், அழகு!

  பதிலளிநீக்கு
 4. காணொளிகள் அருமை.
  பார்த்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 5. கஜமுகனை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 6. காணொளிகள் இரண்டுமே ரசிக்க முடிந்தது. யானைகள் - எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காதவை தான்!

  வலம்புரி விநாயகன் அனைவருக்கும் நல்லதே கொடுக்கட்டும்.

  பதிலளிநீக்கு