நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 24, 2020

குருவாய் வருவாய்


நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
அழகான காணொளி ஒன்று..

மயிலாடும் இடம்
முருகன் கோயில்
நடுப்பட்டி கிராமம்..
தருமபுரி மாவட்டம்..


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..
-: அருணகிரிநாதர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

8 கருத்துகள்:

 1. பாடலும் ஆட்டமும் அருமை. இந்த மயில்கள் ஆடும் காட்சியை ராஜஸ்தானில் அநேகமாக தினம் தினம் பார்த்திருக்கோம். சமயங்களில் 2,3 சேர்ந்து ஆடுங்க! அழகோ அழகு! இதுவும் பார்க்கப் பார்க்கப் பரவசம். அந்த மனிதரும் நன்றாகவே பாடுகிறார்.

  பதிலளிநீக்கு
 2. மானாடும் மயிலாடும். மருத மலையில்
  குயில் பாடும். அருமையான மயில் தரிசனமும்
  பக்தி யுடன் இழையும் குரலில் பாடுபவர்
  அத்தனை குமரன் குடில்களையும்
  சொல்லிவிட்டார். மிக நன்றி அன்பு துரை.

  பதிலளிநீக்கு
 3. பாடலும், மயிலின் நடனமும் நன்று. மீண்டும் பார்த்து ரசித்தேன்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. தை பூசத்திற்கு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாடும் முருகன் பாடல்.
  அந்த பாடலுக்கு மயில் ஆடுவது அழகு அற்புதம். வேலன் புகழ் கேட்டு பாடு முடியும் வரை மயில் ஆடியது மகிழ்ச்சி.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பாடலும்,மயிலின் ஆட்டமுமாக காணொளி காட்சி அருமையாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. முருகா... முருகா.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..