நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

அம்மன் தரிசனம் 4


நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி கடை ஞாயிறு..
மகாகவியின் வழியில்
அம்மன் தரிசனம்..
***

தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்..


பாடியுனைச் சரணடைந்தேன் பாசம் எல்லாங் களைவாய்..
கோடி நலம் செய்வாய் குறைகள்
எல்லாம் தீர்ப்பாய்...


ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதும் அவள் தொழிலாம்..


துன்பமே இயற்கை என்னும் சொல்லை
மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்..


நம்பினார் கெடுவதில்லை நான்கு
மறை தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி பாரதியார்:-

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

14 கருத்துகள்:

 1. அம்மனின் தரிசனம் அருமை.
  வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களுக்கு நல்வரவு..

   மகிழ்ச்சி.. நன்றி..
   நலம் வாழ்க...

   நீக்கு
 2. அன்பு துரை இனிய காலை வணக்கம்.
  அருள் அம்மன் தரிசனங்கள் எல்லாம் நன்று.
  கூடவே மஹாகவியின் பாடலும்
  நம்பிக்கை அளிக்கும்.
  வண்ணம் ஒலிக்கிறது.
  அன்னையின் அருள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

   அன்னையின் அருள் பெருகட்டும்...

   நீக்கு
 3. அம்மன் தரிசனம் செய்தேன் மகாகவியின் பாடல்களை பாடி.
  வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   அம்பிகையின் அருள் நிறையட்டும்...
   வாழ்க வளமுடன்..

   நீக்கு
 4. சிறப்பான தரிசனம்.

  ஓம் சக்தி... அன்னை பராசக்தி அனைவருக்கும் பூரண அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட் ..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   அன்னையின் அருள் பெருகட்டும்...

   நீக்கு
 5. அம்மன் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். அனைத்தும் அருமை. பாரதியே ஓர் சக்தி உபாசகன் அல்லவா? அவன் உணர்வுகளுக்குக் கேட்பானேன்! சத்தியம் தவிர வேறேதும் இருக்காது. சத்திய வாக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   உண்மை தான்.. மகாகவியின் வாக்கு சத்தியமானது. கருத்துரைக்கு நன்றியக்கா.

   அன்னையின் அருள் பெருகட்டும்...

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அம்மன் படங்கள் சிறப்பாக இருக்கிறது. பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன்.

  பொருத்தமான பாரதியின் பாடலும் பாடி மகிழ்ந்தேன்.

  /பாடியுனைச் சரணடைந்தேன் பாசம் எல்லாங் களைவாய்..
  கோடி நலம் செய்வாய் குறைகள்
  எல்லாம் தீர்ப்பாய்/

  சத்தியமான வரிகள். பந்த பாசங்களை குறைத்துக் கொண்டு அவளிடத்தில் மட்டும் அசைக்க முடியாத பாசம் வைத்தால் ஓடி வந்து குறைகளை தீர்த்து வைப்பாள்.. அவளருள் கண்டிப்பாக நமக்கு வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

  பள்ளி நாட்களில் பாடித் திரிந்ததெல்லாம் மகாகவியின் பாடல்களைத் தான்...

  அவை தோளிலும் நெஞ்சிலும் வீரம் ஊட்டுபவை..

  இனிய கருத்துரைக்கு நன்றி...
  ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..